‘வசந்த மாளிகை’ படத்தின் அறியாத தகவல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ என்ற திரைப்படம் கடந்த 1972ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சென்னை மதுரை போன்ற பெரு நகரங்களில் 700 நாட்கள் தொடர்ச்சியாக ஓடியது.

தமிழக முழுவதும் 100 நாட்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி சாதனை செய்த படம். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சிவாஜி கணேசன் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாததால் 3 நாளில் மாற்றப்பட்டது.

ஜமீன்தார் வீட்டு வாரிசான ஆனந்த் ஒரு பிளேபாயாக இருப்பார். மது மற்றும் மாதுவில் மூழ்கி இருக்கும் ஆனந்த் விமானத்தில் செல்லும் போது அங்கு பணிபுரியும் லதா என்ற பணிப்பெண்ணை பார்ப்பார். அவருடன் ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து அவருக்கு தன்னுடைய பர்சனல் செகரட்டரி என்ற பணியை கொடுப்பார். இது ஆனந்தின் குடும்பத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் ஆனந்த் மற்றும் லதாவுக்கு ஒரு கட்டத்தில் காதல் ஏற்படும். ஆனந்தின் குடிப்பழக்கத்தையும் மாது பழக்கத்தையும் லதா தன் அன்பால் நிறுத்துவார். ஆனந்த் குடும்பத்தினர்களும் லதா மீது அன்பு செலுத்துவார்கள்.

இந்த நிலையில் தான் ஆனந்த் வீட்டில் ஒரு நெக்லஸ் காணாமல் போன நிலையில் அந்த நெக்லஸை லதா தான் எடுத்திருக்கிறார் என்று குடும்பத்தினர் அனைவரும் பழி சொல்வார்கள். அப்போது லதாவின் அம்மா இந்த நெக்லஸ் எங்கள் வீட்டிலிருந்தது, தெரியாமல் லதா எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம் என்று கொண்டு வந்து கொடுப்பார். அப்போது ஆனந்த் லதாவிடம் ‘ஏன் இப்படி செஞ்ச’ என்று கேட்பார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லதா, தன்னை திருடி என்று தனது காதலரே நினைத்துவிட்டாரே என்று ஆனந்தை விட்டு பிரிகிறார். ஒரு கட்டத்தில் லதாவுக்கு அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்க்க திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு வாழ்த்து சொல்வதற்காக ஆனந்த் வருவார். அப்போது பெண் வீட்டார் அதை பார்த்து இருவரும் ஏற்கனவே காதலித்தவர்கள் என்று தெரிந்து கொண்டு திருமணத்தை நிறுத்தி விடுவார்கள்.

லதாவுக்கு வாழ்த்து சொல்லிட்டு லதாவுக்காக கட்டிய வசந்த மாளிகைக்கு செல்லும் ஆனந்த் விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்வார். அதை தெரிந்து கொண்ட லதா அவரை காப்பாற்ற வசந்த மாளிகைக்கு சென்ற போது லதாவை பார்த்துவிட்டு ஆனந்த் இறந்து விடுவது போன்று கதை முடிக்கபட்டிருக்கும்.

இந்த படம் வெளியாகிய மூன்றே நாட்களில் சிவாஜி கணேசன் இறந்து விடுவதை ரசிகர்கள் விரும்பவில்லை என்பதால் மீண்டும் சிவாஜி கணேசனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றுவது போன்று கிளைமாக்ஸ் மாற்றியிருப்பார்கள். ஆனால் இலங்கையில் இந்த படம் சிவாஜி கணேசன் கிளைமாக்ஸில் இறப்பது போலவே படத்தை முடித்திருப்பார்கள் என்றும் கூறப்படுவதுண்டு.

கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் கே.வி.மகாதேவன் இசையில் உருவான இந்த படம் பிரேமா நகர் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காகும். மேலும் இந்த படத்தில் பாலாஜி, மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், வி.எஸ்.ராகவன், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் பாலாஜியின் மகளாக குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். அவர் சிவாஜியின் அண்ணன் மகளாக நடித்திருப்பார்.

1972ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி வெளியான இந்த படம் சென்னையில் 700 நாட்கள் ஓடியது. சாந்தி உள்பட பல தியேட்டர்களில் இந்த படத்திற்கு தினமும் ஹவுஸ்புல் காட்சிகளாக இருந்தது. அதுமட்டுமின்றி இலங்கையில் இந்த படம் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் ஓடியதாக கூறப்படுவதுண்டு. தமிழ் திரைப்படம் ஒன்று தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் இலங்கையில் ஓடியது முதன் முதலில் செய்த சாதனையாகவும் கருதப்பட்டது.

சிவாஜி கணேசன் மற்றும் வாணிஸ்ரீ இருவரின் அற்புதமான நடிப்பு, கே.எஸ்.பிரகாஷ் ராவ் அவர்களின் அபாரமான திரைக்கதை, சென்டிமென்ட், காதல், நகைச்சுவை என அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும் என்பதால் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

தமிழ் சினிமாவில் 10 அருமையான காதல் படங்களை தேர்வு செய்தால் கண்டிப்பாக அதில் வசந்த மாளிகை இடம் பெற்றிருக்கும். இந்த படத்தை கடந்த 2013ஆம் ஆண்டு டிஜிட்டலில் ரீரிலிஸ் செய்த போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பின் மீண்டும் இரண்டாவது முறையாக 2019ஆம் ஆண்டில் ரீரிலிஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு இந்த படம் மீண்டும் மூன்றாவது முறையாக ரீரிலிஸ் செய்யப்பட்டபோதும் கூட இந்த படம் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 597
  • More
சினிமா செய்திகள்
கவர்ச்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கக் கூடிய ஐஸ்வர்யா ராஜேஷ் பெண்களுக்கு முக்கியத்துவம் தர
பிரபல நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் "வெப்ப வாதத்தால்" பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஆணுறை குறித்த விழிப்புணர்வு இல்லை - நடிகை ரகுல் பிரீத் சிங்
நடிகை ரகுல் பிரீத் சிங் சமீபத்தில் தன்னுடைய பேட்டி ஒன்றில் Chhatriwali என்ற படத்தில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டேன் என்ற காரணத்தை பதிவு செய்திருக்கிறார்.அ
பின்னணி பாடகியான ரம்யா நம்பீசன் தன்னுடைய நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களே கவர்ந்திருக்கிறார். நடிகை ரம்யா நம்பீசன் பார்ப்பதற்கு நல்ல பருமனா
குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்த ஹீரோ - பானுமதியின் கோபம்
50களில் தமிழ் திரையுலகில் பெரிய ஆளுமையாக இருந்தவர் பானுமதி. பாடகி, நடிகை, கதாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர
கேப்ரில்லாவுக்கு லண்டனில் கிடைத்த மோசமான அனுபவம்
அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களையும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் கேப்ரில்லாவுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற
சுந்தர் சி யை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன் - எதற்காக தெரியுமா?
ஈரோட்டில் பிறந்த விநாயக சுந்தரவேல் என்பவர் தனது தந்தையின் பெயரான சிதம்பரம் என்பதன் முதலெழுத்தைச் சேர்த்து சுந்தர் சி ஆக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குந
விசுவின் பார்வையில் கண்ணதாசன்
ஒரு பாடலை வாங்கி வருவதற்காக கண்ணதாசனிடம் அனுப்புகிறார் இயக்குநர். விசுவிற்கு மிகுந்த தயக்கம். இருந்தாலும் ‘நாடக உலகப்’புகழ் தந்த துணிச்சலில் சென்று வி
மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் ’மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள குறித்து கூ
75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்
42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..?
பில்லா, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால் ருத்ரமா
கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அத
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு