சூப்பர் ஸ்டாருக்கு புத்திமதி சொல்லும் விஜய் சேதுபதி
மகளாக நடித்தவருடன் ஜோடி போடுவது, மனைவியாக நடித்தவர் அம்மா கேரக்டரில் நடிப்பது போன்ற எத்தனையோ விஷயங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் விஜய் சேதுபதி இதில் எந்த அளவுக்கு பக்குவமானவர் என்பதை தற்போது ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது.
இது சூப்பர் சூப்பர் ஸ்டாருக்கே புத்திமதி சொல்லும் விஷயமாகவும் இருக்கிறது. அதாவது ஒரு படத்தில் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டியை விஜய் சேதுபதிக்கு ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அதை கேட்டு பதறிப்போன மக்கள் செல்வன் அடுத்து சொன்ன விஷயம் தான் சபாஷ் போட வைத்திருக்கிறது.
தெலுங்கில் வெளிவந்த உப்பென்னா என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்திருப்பார். அதைப்பற்றி கூறிய அவர் எனக்கு மகளாக நடித்தவருடன் எப்படி காதல் வசனம் பேச முடியும். இது நடிப்பாக இருந்தாலும் சரி வராது. கீர்த்தி என்றைக்குமே என்னுடைய மகள் தான் என்று கூறி இருக்கிறார்.
இது முற்றிலும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஏனென்றால் தனக்கு மகளாக நடித்த மீனாவுடன் ரஜினி மூன்று படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். இது அந்த காலகட்டத்தில் சில விமர்சனங்களையும் சந்தித்தது. அதேபோன்று மகள் வயதுடைய சோனாக்ஷி சின்ஹாவுடன் சூப்பர் ஸ்டார் டூயட் பாடியதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
கோச்சடையானில் தீபிகா படுகோன், சிவாஜியில் ஸ்ரேயாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தது கூட பொருத்தமில்லை என்று பேசப்பட்டது. அதன் பிறகு தான் சூப்பர் ஸ்டார் ஹீரோயின் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க ஆரம்பித்ததோடு தன் வயதிற்கு ஏற்ற கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்தார். விஜய் சேதுபதியின் இந்த மனப்பான்மை அனைவரையும் சபாஷ் போட வைத்துள்ளது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva