·   ·  116 posts
  •  ·  1 friends
  • 1 followers

பூதம் கொடுத்த வரம்

ஒரு ஓட்டலுக்குள்ள தன்னோட தீக்கோழியோட நுழைஞ்சு அவன் ஓரமா இருக்குற டேபிள்ல போய் உட்காந்தான்.

என்ன சாப்புடறீங்கன்னு கேட்ட லேடி சர்வரை பாத்து...... ஒரு ஆனியன் ரவா தோசை, மெது போண்டா ஒரு பிளேட், ஒரு பில்ட்டர் காபின்னு சொல்லிட்டு உனக்கு என்ன வேணும்னு தீக்கோழிகிட்ட கேட்டான். எனக்கும் சேம் foodனு அது சொல்லுச்சு. தின்னு முடிச்சதும் அந்த லேடி சர்வர் பில் கொண்டு வந்துட்டு சார்...243 ரூபாய் ஆச்சு சார்னு சொன்னா.

பேன்ட் பாக்கெட்ல கை விட்டவன் கரெக்ட்டா 243 ரூபாயை எடுத்தான். குடுத்துட்டு போயிட்டே இருந்தான்.

மறுநாள் வந்தான். அதே ஆர்டர் ரிப்பீட்டு. அதே பில் அமவுண்ட் ரிப்பீட்டு.

அதுக்கு அடுத்த நாளும் அதே ஆர்டர் ரிப்பீட்டு. அதே பில் அமவுண்ட் ரிப்பீட்டு. இப்படியே 10 நாள் போச்சு.

11 வது நாள் வந்தவன் பொங்கல், ஒரு மசால் தோசை , 2 சாம்பார் வடை, ஒரு டீன்னு ஆர்டர் பண்ணான். தீக்கோழிகிட்ட உனக்கு என்ன வேணும்னு கேட்டான்.

நீங்க சொன்ன அதே ஆர்டர்தான் எனக்கும்னு அது சொல்லுச்சு. இந்த 382 ரூபாய் பில் வந்துச்சு. வழக்கம் போல பேன்ட் பாக்கெட்ல கை விட்டவன் கரெக்ட்டா 382 ரூபாய் எடுத்து குடுத்தான்.

அதை பாத்த லேடி சர்வர் ஆர்வம் தாங்க முடியாம எப்படி சார் ஒவ்வொரு வாட்டியும் பில் தொகையை கரெக்ட்டா பேன்ட்லேருந்து எடுத்து குடுக்குறீங்கன்னு கேட்டா.

அதுக்கு அவன், ரெண்டு வருஷம் முன்னாடி ...... ஒரு பழைய விளக்கை துடைச்சிக்கிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு பூதம் வெளிய வந்து, என்னை விடுதலை பண்ணதுக்கு நன்றி. எதாவது ரெண்டு வரம் கேளு. தர்றேன்ன்னு சொல்லுச்சு. ரொம்ப யோசிச்சிட்டு நான் எப்ப வேணும்னாலும் எதை வாங்கினாலும் அந்த பில் அமவுண்ட் என் பேன்ட் பாக்கெட்டிலிருந்து வரணும்னு வரம் கேட்டேன். காபி குடிச்சாலும் சரி., கார் வாங்கினாலும் சரி. பில் அமவுண்ட் என் பேன்ட் பாக்கெட்ல வந்துடும்னு சொன்னான்.

ஆச்சரியப்பட்ட லேடி சர்வர், சரி. இதென்ன தீக்கோழின்னு கேட்டா.

நீளமா ஒரு பெருமூச்சு விட்டுட்டு, நீளமான கொழுத்த காலோட, புஸ்சுபுசு உடம்போட , செம்ம கட்டையா இருக்குற,நான் என்ன சொன்னாலும் கேக்குற, எப்பவும் எனக்கு சரிங்குற பதிலை மட்டுமே தர்ற சூப்பர் ஃபிகர் வேணும்னு கேட்டேன்.

இதை குடுத்துட்டு அந்த பாழா போன பூதம் மறைஞ்சு போயிடுச்சுன்னு சொன்னான்.

  • 40
  • More
Comments (0)
Login or Join to comment.