- · 0 friends
இன்றைய ராசி பலன்கள் - 23.11.2026
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். திடீர் பயணம் வரும். பிள்ளைகள் உடல்நலத்தில் அக்கறை தேவை. வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் வேலைச்சுமை கூடும்.
ரிஷபம்: இழுபறியாக இருந்த கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தொழில், வியாபாரம் திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்: குடும்பத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கு விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டு. வியாபார வளர்ச்சிக்கு புதிய உத்திகளைக் கையாளுவீர்கள்.
கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பல வகையிலும் பண வரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி ஆதரவாக இருப்பார்.
சிம்மம்: பிரச்சினையில் இருந்து விடுபட மாற்று வழியைக் கண்டறிவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலைகளை விரைந்து முடித்து அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.
கன்னி: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். பணம், நகை, முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். வீண் கோபம் வந்துபோகும். அலுவலகத்தில் அலைச்சல் இருக்கும்.
துலாம்: உங்கள் வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபங்கள் நீங்கி அன்யோன் யம் பிறக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள்.
விருச்சிகம்: மனதுக்கு இதமான செய்தி வெளியூரில் இருந்து வரும். உடல் சோர்வு, வயிற்றுவலி வந்து நீங்கும். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
தனுசு: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். தாய் உடல்நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
மகரம்: புது வகை மின்னணு, மின்சார சாதனங்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் பண உதவி கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பதால் ஆதாயம் உண்டு.
கும்பம்: வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். நண்பர் களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. பொருட்கள் சேரும்.
மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீண், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியா பாரத்தை விரிவுபடுத்த முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். அலுவலக ரீதியான பிரச்சினைகள் ஓயும். ஆன்மிக நாட்டம் கூடும்.