Ads

மீசாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போலீஸ் பேருந்தை வேகமாக வந்த கன்டர் வாகனம் மோதியதில் மீசாலை நகரமே இருட்டில் மூழ்கியது!

0 0 0 0 0 0
 • 344
Info
Title:
மீசாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போலீஸ் பேருந்தை வேகமாக வந்த கன்டர் வாகனம் மோதியதில் மீசாலை நகரமே இருட்டில் மூழ்கியது!
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Duration:
01:08
Category:
Created:
Updated:
 ·   · 125 videos
 •  · 13 friends
 •  · 13 followers
Comments (0)
மீசாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போலீஸ் பேருந்தை வேகமாக வந்த கன்டர் வாகனம் மோதியதில் மீசாலை நகரமே இருட்டில் மூழ்கியது!
Empty
typing a message...
Connecting
Connection failed
Ads
Latest Videos
Advertisement
Ads
Featured Videos (Gallery View)
Ads
Added a news 
இலங்கையில் நேற்றைய தினம் (23) நாட்டில் மேலும் 52 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, 26 ஆண்களும் மற்றும் 26 பெண்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 294,333 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 266,665 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 • 30
Added a news 
இலங்கையில் மேலும் 487 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 1,707 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 294,820 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 266,665 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.மேலும் 4,054 பேர் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 • 30
Added a news 
மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலு குமார், உதயகுமார் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், சிறுமி ஹிஷாலினி தொடர்பில் வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள் என கூசாமல் பொய் பேசும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, பொதுஜன முன்னணி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, விமல் வீரவன்ச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஹமட் முசாம்பில் ஆகிய அரசாங்க கட்சி அரசியல்வாதிகள், தங்கள் அரசாங்கம் தோட்ட தொழிலாளருக்கு இழைத்துள்ள அநீதியை கணக்கில் எடுக்க தவறுவதேன்?சிறுமி ஹிஷாலினி தொடர்பாக நாம் எமது கடமையை சிறப்பாக செய்துள்ளோம்.அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம் போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.இவ்விவகாரம் பற்றி அவர் மேலும் கூறியதாவது, இன்று தோட்டத்தொழிலாளர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது வருமானம் எமது நல்லாட்சியின் 2019ம் ஆண்டை விட, இன்று வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு காரணம், ஒருபுறம், ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி தருகிறேன் என்று கூறிவிட்டு இந்த அரசாங்கம், வேலை நாள் எண்ணிக்கை மற்றும் கொழுந்து நிறை ஆகியவற்றை தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கி விட்டு, சும்மா இருக்கிறது. மறுபுறம், விலைவாசியோ பலமடங்கு உயர்ந்து விட்டது.சிறுமி ஹிஷாலினி உட்பட, தோட்டத்தொழிலாளர்களின், பிள்ளைகள் நகரப்பகுதிகளுக்கு தொழில் தேடி வந்து ஆபத்தில் விழுவதற்கு பெருந்தோட்டத்துறையில் இன்று நிலவும் அதிமோச வறுமைதான் காரணம். இந்த அதிமோச வறுமைக்கு காரணம் என்ன? இந்த அரசாங்கத்தின் தோட்டத்தொழிலாளர் தொடர்பான அக்கறையின்மை, அரசில் இருக்கின்ற இதொகாவின் மௌனம் ஆகியவையே பிரதான காரணங்கள் என்பதை, இன்று சிறுமி ஹிஷாலினி பற்றி பொய்யாக கூப்பாடு போடும் டிலான் பெரேரா, அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, முஹமட் முசாம்பில் போன்றவர்கள் உணர வேண்டும்.இது எமது கடமை. அதை தமிழ் முற்போக்கு கூட்டணி எவருக்காகவும் கைவிடாது. ஹிஷாலினி எமது இரத்தம். எமது மக்களுக்காக நாம் வாய் திறந்து பேசாவிட்டால், யார் பேசுவது? நாம் போராடாவிட்டால், யார் போராடுவது? என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள், நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம், சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.“இந்த பிரச்சினை தமிழ், முஸ்லிம், சிங்கள இனப்பிரச்சினை அல்ல. இது ஒரு சட்டம், ஒழுங்கு பிரச்சினை” என கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் இலங்கை பாராளுமன்றத்தில், மிக நிதானமாகவும், மிக பொறுப்புடனும் தெளிவாக பலமுறை எடுத்து கூறி விட்டேன்.ஹிஷாலினி வீட்டுக்கு சென்று மௌன அஞ்சலி செலுத்தியதை தவிர, அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் இதொகா, இந்த பிரச்சினை பற்றி கூறும்படியாக இதுவரை ஒன்றும் செய்யவில்லை. எதுவாயினும், இப்போது விசாரணை நடக்கின்றது. அதற்கு அனைவரும் கண்காணிப்புடன் கூடிய பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.சிங்கள, முஸ்லிம் மக்கள் தொடர்பிலே மிகக்கூடிய கரிசனை கொண்டவர்கள். தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்க வேண்டும் என வெளிப்படையாக இதய சுத்தியுடன் செயற்படுகின்றவர்கள் நாங்கள்.நாங்கள் இது எந்த வகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனுக்கோ அல்லது அவருடைய கட்சிக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ ஒரு சமூகத்திற்கெதிரானது அல்ல. நீதிவேண்டிய ஒரு பயணம். அந்த நீதியை அவர் நிலைநாட்ட வேண்டும் என்பதைதான் கட்டாயமாக நாங்கள் வலியுறுத்துகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.
 • 33
Added a news 
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன், இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி மாளிகையாக விளங்கி வருகிறது. மொத்தம் 340 அறைகளைக் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடம், ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இருவரால் வடிவமைக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் 14 முதல்  பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.   டெல்லியில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்காக வரும் ஆகஸ்ட் 1 முதல் ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகமும் மீண்டும் திறக்கப்படுகின்றன. காலை 10.30 முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 12.30 முதல் 1.30 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரையிலான முன்பே பதிவு செய்யப்பட்ட மூன்று நேரப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு 25 பேர் என சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (அரசு விடுமுறைகள் தவிர்த்து) ஜனாதிபதி மாளிகைக்கு சுற்றுலா அனுமதிக்கப்படும். செவ்வாய் முதல் ஞாயிறு வரை வாரத்தின் ஆறு நாட்களில் (அரசு விடுமுறைகள் தவிர்த்து), காலை 9.30 முதல் 11 மணி வரை, காலை 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 1.30 முதல் 3 மணி வரை மற்றும் பிற்பகல் 3.30 முதல் மாலை 5 மணி வரையிலான முன்பே பதிவு செய்யப்பட்ட நான்கு நேரப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு 50 பேருக்கு ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகம் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • 36
Added a news 
லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் என, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஒரு உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டத்தில் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது, தனியாரை நுழைய அனுமதித்து லாட்டரி சீட்டு திட்டத்தை சீரழித்தார். அப்போதுதான் வெளிமாநில லாட்டரிகள் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டன.ஒரு சீட்டின் விலை 10 ரூபாய் என்றும், பரிசு ஒரு கோடி ரூபாய் என்றும் மக்களிடையே பேராசை தூண்டப்பட்டது. ஒரு ரூபாய்க்கு ஒரு லட்சம், மாதம் ஒருமுறை குலுக்கல் என்ற நிலை மாறி, ஒரு நம்பர் லாட்டரி முதல் பல கோடி ரூபாய் வரை பரிசு என்று ஒரு நாளைக்கு குறைந்தது 50 விதமான லாட்டரிகள் விற்பனை தமிழகத்தில் நடைபெற்றது.குதிரை ரேஸ், சீட்டாட்டம் போல் லாட்டரி சீட்டு தமிழகத்தில் மாபெரும் சூதாட்டமாக மாறியது. தனியார் லாட்டரி ஏஜெண்டுகள், வெளிமாநில லாட்டரி சீட்டுகளை, கள்ள நோட்டு அச்சடிப்பது போல் அச்சிட்டு மக்களிடம் விற்றார்கள். உடனடியாக கோடீஸ்வரர்கள் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பிய அப்பாவி ஏழை எளிய மக்கள், லாட்டரி மயக்கத்தில் தங்கள் குடும்பத்தையும், வாழ்வையும் இழந்தார்கள். இந்தத் தீமை, சமுதாயத்தில் புரையோடிப் போய் பல ஆண்டுகள் நம் மக்களைச் சீரழித்தது. பல்வேறு காலகட்டங்களில் தனியார் லாட்டரியால் பணம் இழந்த பல அப்பாவிகள் தற்கொலை செய்துகொண்ட அவலமும் நிகழ்ந்தது. எம்ஜிஆருக்குப் பின், நம் இயக்கத்தையும், தமிழகத்தையும் காத்த ஜெயலலிதா, இரண்டாவது முறையாக 2001-ல் ஆட்சி அமைத்தபின், லாட்டரி கொள்ளையின் பிடியில் இருந்து மக்களைக் காக்க முடிவு செய்தார். அதன்படி, 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு கொள்கை முடிவு எடுத்து ஒரே கையெழுத்தில், ஒரே இரவில் லாட்டரி சீட்டை தமிழகத்தில் ஒழித்த பெருமை ஜெயலலிதாவையே சாரும். இந்தச் சட்டத்துக்கு எதிராக லாட்டரி கொள்ளையர்கள் உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்து தோல்வியைச் சந்தித்தனர். ஜெயலலிதாவின் ஆட்சியில், ஏழை, எளிய மக்கள், பல ஆண்டுகளாக லாட்டரி அரக்கனின் பிடியில் இருந்து தப்பி நல்வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். மக்களின் தலையில் மண்ணை வாரிக்கொட்ட, சந்தர்ப்பவசத்தால் தற்போது பதவியில் அமர்ந்துள்ள திமுகவின் விடியா அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. ஆட்சிக்கு வருவதற்கு முன், அரசுக்கு வருவாயைப் பெருக்கும் வழி எங்களுக்குத் தெரியும் என்று கொக்கரித்த இவர்கள், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவந்து நாட்டை சுடுகாடாக்க முடிவு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. தனியார் லாட்டரி ஏஜெண்டுகள் கொள்ளை அடிக்கவும், அதன் மூலம் ஆட்சியாளர்கள் பெருத்த ஆதாயம் பெறுவதற்குமான, இந்த அதிகாரபூர்வ லாட்டரி சீட்டு திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும். அரசின் வருவாயைப் பெருக்க வேறு பல நல்ல வழிகளைத் தேட வேண்டும். தமிழகத்தின் ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற, ஜெயலலிதா ஒழித்த லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டு வந்தால், தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்ப்பை ஸ்டாலின் அரசு சந்திக்க நேரிடும். எனவே, லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டு வர முயல வேண்டாம் என்று அதிமுகவின் சார்பில் எச்சரிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
 • 38
Added a news 
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், ஓ.டி.டி.யில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வடசென்னை மக்களிடையே எழுபதுகளில் குத்துச்சண்டை போட்டி மீது இருந்த ஆர்வம் குறித்து இந்த திரைப்படம் விரிவாக சித்தரிக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழலை பா. ரஞ்சித், வெளிப்படையாக காட்சிப்படுத்தியுள்ளார். இது ஒரு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றாலும், சிலர் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதை வைத்து இணையத்தில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. சார்பட்டா பரம்பரை படத்துக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் எம்.ஜி.ஆர் க்கும் விளையாட்டுத் துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இத்திரைப்படம் முழுக்க முழுக்க தி.மு.க.வின் பிரச்சாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் எம்.ஜி.ஆர் தான் என்றும் 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்துச் சண்டையில் பங்கேற்பதாக நாக் அவுட் நாயகன் முகமது அலியை எம்.ஜி.ஆர் சென்னைக்கு அழைத்து வந்தார் என்றும் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார். சார்பட்டா பரம்பரை திரைப்படம் தி.மு.க. ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போலவும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த எம்.ஜி.ஆரை ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் தவறாகச் சித்திரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 • 36
Added a news 
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு பிரதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவிற்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் மீராபாய் சானு. மகளிர் 49 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.2021 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த மீராபாய் சானுவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இதைவிட ஒரு மகிழ்ச்சியான தொடக்கம் இருக்க முடியாது. மீராபாய் சானுவின் சிறப்பான செயல்பாடுகளால் இந்தியா உற்சாகமடைந்துள்ளது. பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்கப்படுத்தும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 • 38
Added a news 
சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.  இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர்.  பொருட்களும் சேதமடைகின்றன.  இந்த நிலையில், ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்தது. கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனாவில் ஏற்பட்ட மிக அதிகபட்ச மழை இதுவாகும். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் பலியானார்கள். அவா்களில் 12 பேர் சுரங்க ரெயில் பயணிகள் ஆகும்.  வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மேலும் 18 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், இந்த பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33 ஆக உயா்ந்துள்ளது. சீனாவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக ரூ.75,000 கோடி அளவுக்கு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.  மழையை முன்னிட்டு ஹெனான் பகுதியில் வசிக்கும் 3.76 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா். மொத்தம் 12.4 லட்சம் பேர் மழை, வெள்ளத்தில் பாதிப்படைந்து உள்ளனர்.  சுரங்க பாதைகள், தெருக்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன.  இதனால் பொது போக்குவரத்து பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானது. புத்த துறவிகள் சரணாலயங்களில் ஒன்றான சாவோலின் கோவிலும் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்க கூடும் என வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணி நடந்து வருகிறது.
 • 38
Added a news 
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பவழ நகரை சேர்ந்துவர் சிவசண்முகம். இவர் தனது தாய் ராஜவேனி உடன் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு ராஜவேனி வீட்டில் அமர்ந்திருந்த போது மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை அறுத்து கொண்டு சென்றுள்ளார்.இது குறித்து சிவசண்முகம் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து யார்யார் அவர்கள் வீட்டுக்கு வந்து சென்றனர் என்ற கோணத்தில் விசாரணை செய்தனர்.சில தினங்களுக்கு முன்னர் குமார் என்ற நபர் அவர்கள் வீட்டின் மேல் பகுதிக்கு பெயிண்ட் அடிப்பதற்காக வந்து சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து வாழைக்குளம் பகுதியை சேர்ந்த குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரரணையில் குமார் தான் பெயிண்ட் வேலைக்கு சென்ற போது மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்க செயினை நோட்டமிட்டு, இரவு மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது தங்க செயினை அறுத்து சென்றதாகவும், அறுத்து சென்ற செயினை அடகு கடையில் 27000 ஆயிரம் ரூபாய்க்கு அடக்கு வைத்து பணத்தை தனது சொந்த செலவிற்கு பயன்படுத்தி உள்ளதாக ஒப்புகொண்டான்.அடமானத்தில் இருந்த செயினை மீட்ட போலீசார் அவனின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிந்து குமாரை சிறையில் அடைத்தனர்.
 • 38
Added article 
நடிகர் ரஞ்சித் சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். பாண்டவர் பூமி, பசுபதி ராசக்காபாளையம், நினைத்தேன் வந்தாய், நட்புக்காக, சேரன் சோழன் பாண்டியன் போன்ற படங்களில் நடித்துள்ளார் ரஞ்சித்.இவருடன் நேசம் புதுசு படத்தில் இணைந்து நடித்தவர் பிரியா ராமன். இதுமட்டுமில்லாமல் வள்ளி, சூரிய வம்சம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இருவரும் 1999இல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.இருவரும் சின்னத்திரையில் செம பிஸியாக உள்ளனர். ரஞ்சித் விஜய் டிவியில் ஒரு சீரியலிலும், பிரியா ராமன் ஜீ தமிழ் சீரியலிலும் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இவர்களது திருமண நாள் வந்தபோது அதை இருவரும் சேர்ந்து கொண்டாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ரஞ்சித் நடித்து வரும் “செந்தூர பூவே’ தொடரில் சிறப்பு தோற்றத்தில் ப்ரியாராமன் நடிக்கிறார். இவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 • 37
Added article 
நடிகர் நாகேஷின் மகனான ஆனந்த்பாபு தங்கைக்கோர் கீதம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மிக நன்றாக நடனம் ஆடக்கூடியவர். இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. ஆனந்த்பாபுவிற்கு தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவு இருந்தது.இவர் தேர்ந்தெடுத்த கதைகளில் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்ததை அடுத்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைய தொடங்கியது. இருப்பினும் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தார்.அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி தனது தொழிலில் கவனம் செலுத்தி வந்த ஆனந்த்பாபுவை விஜய் டிவி மீண்டும் அழைத்து மௌன ராகம் சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது.இந்த கதாபாத்திரத்தில் நடித்த ஆனந்த்பாபுவிற்கு பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு கிடைக்காவிட்டாலும் ஆனந்த்பாபுவை சரியாக பயன்படுத்திக் கொண்டது விஜய் டிவி. நடிகர்களை பற்றி வெளிப்படையாக பேசும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஆனந்த்பாபு சினிமாவில் சாதிக்க முடியாமல் போனதற்கு காரணம் அவருடைய குடிப்பழக்கம் என தெரிவித்துள்ளார். இதனால் பல பட வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறியுள்ளார்.பல நடிகர்களை பற்றி வெளிப்படையாக பேசும் பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் இவர் என்னென்ன தவறு செய்துள்ளார் என்பதை இதுவரை யாரும் வெளிப்படையாக கூறாததால் தற்போது வரை தப்பித்து வருகிறார். ஏதாவது ஒரு பிரபலம் பயில்வான் ரங்கநாதன் பற்றிய தகவல்களை பகிர்ந்து விட்டால் அதன் பிறகு பயில்வான் ரங்கநாதன் இப்படி தைரியமாக பேசுவாரா என்பது தெரியவில்லை.
 • 37
Added article 
ஆர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் மனரீதியாக ஒத்துப் போனதால் திருமணம் செய்து கொண்டனர்.மலையாளத்தில் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா காதல் எப்படி அமைந்ததோ அதே போல்தான் ஆர்யா மற்றும் சாயிஷாவின் காதல் கதையும் அமைந்தது. சாயிஷா வந்த நேரமோ என்னமோ தொடர் தோல்விகளில் சிக்கியிருந்த ஆர்யா இப்பொழுது தொடர் வெற்றி படங்களை கொடுத்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.திருமணத்திற்குப் பிறகு வெளியான மகாமுனி, டெடி, சார்பட்டா பரம்பரை போன்ற அனைத்து படங்களுமே ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இணையதளம் முழுவதும் சார்பட்டா பரம்பரை படத்தைப் பற்றிய பேச்சுகள்தான்.பா. ரஞ்சித் மற்றும் ஆர்யா கூட்டணியில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று ஆர்யாவின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது சார்பட்டா பரம்பரை.ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதியினருக்கு நேற்று நள்ளிரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவரது நண்பரும் நலம் விரும்பியான நடிகர் விஷால் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.அந்த குழந்தையை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் திருமணம் செய்தபோது வயது வித்தியாசத்தை காரணம் காட்டி பலரும் அவர்களை கிண்டல் செய்தனர். ஆனால் அவர்களது ஒட்டுமொத்த விமர்சனங்களையும் அடித்து நொறுக்கி தற்போது நல்ல தம்பதிகளாக வலம் வருகின்றனர்.
 • 37
Added article 
பைக்கின் மீது தீராத காதல் கொண்ட அஜித் பிரம்மாண்ட டெர்மினேட்டர் பைக்கில் அழகாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். அஜித்குமார் பைக் ஓட்டும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கின்றன.வலிமை அப்டேட்டிற்காக தல ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தொடர்ந்து மகிழ்ச்சியான செய்திகள் வெளியாகி வருகின்றன. வலிமை அப்டேட் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது தல அஜித் பைக் டிரிப் சென்ற புகைப்படங்கள் கிடைத்துள்ளன.அஜித்குமார் இருசக்கர வாகனத்தில் வெகு தொலைவு செல்வது வழக்கமான ஒன்று. அவ்வாறு சிக்கிமிற்கு சென்றபோது தான் இந்த புகைப்படங்கள் வெளியாகின என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அஜித் பயன்படுத்தியிருப்பது பிஎம்டபிள்யூ ஆர்1200 ஜிஎஸ் அட்வென்ஜர் பைக் ஆகும். இந்த பைக் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை.இந்தியாவில் இதனை விற்பனை செய்யும் பொழுது மூன்றுவித மாடல்களில் விற்பனை செய்யப்பட்டது. மூன்று மாடல்களிலும் 1170 சிசி இன்ஜின்தான் பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 125 பிஎஸ் பவரையும்,125 என்எம் டார்க் திறனையும் உருவாக்க வல்லது.இந்த பைக் ஒரு லிட்டருக்கு 16 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்க கூடியது. இந்த பைக்கின் ஆரம்ப விலை 17.25 லட்ச ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 21.30 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைக்கேட்ட தல ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்துள்ளனர்.
 • 38
இனிய காலை வணக்கம்
 • 98
 • 98
 • 98
Added a news 
கல்விசாரா ஊழியர்களின் சேவைக்காலத்தினை அடிப்படையாகக்கொண்டு பதவி உயர்வு வழங்குங்கள் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் இணைத்தலைவர் ஆறுமுகம் புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் அதி உயர் பீடத்தில் உள்ள உறுப்பினர்கள் நேற்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர்.இதன்போது, வட கிழக்கு மாகாணங்களில் அரச திணைக்களங்களில் ஆளணி நீண்ட காலமாக நிரப்பப்படாது இருப்பது தொடர்பில் அவரிடம் எடுத்து கூறப்பட்டுள்ளது. அதனை வலியுறுத்தி கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்திருந்தோம்.அதனடிப்படையில் வட கிழக்கில் அரச திணைக்களங்களிலே வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் நீண்டகாலமாக இருந்துகொண்டிருக்கின்றது. அங்கு காணப்படும் வெற்றிடங்களிற்கு எவ்வளவு கூடிய விரைவில் நிரப்புமாறு கூறியிருந்தோம்.அந்த வகையில் வடக்கு மகாணத்தில் கல்விசாரா ஊழியர்கள் வருடமாக 2013ம் ஆண்டு நியமனம் வழங்கியிருந்தார்கள். கல்வி திணைக்களத்தினால் 8 வருடங்களாக அவர்களிற்கான பதவி உறுதிப்படுத்தப்படவில்லை.8ம் ஆண்டு கல்வி தகைமையுடன் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் சாதாரண தர சான்றிதழ்கள் கோரியுள்ளமையால் சிலருக்கு பணிநிலை உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை. அதனையும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.உள்ளுராட்சி மன்றங்களிலும் வெற்றிடங்கள் காணப்படுவதுடன், பதவி நிலைகள் உயர்த்தப்படாமலும் காணப்படுகின்றது. இந்த நிலையில் வீதி தொழிலாளர்கள், சுகாதார தொழிலாளர்களை மேற்பார்வை செய்வதற்கான பணிநிலை வெற்றிடத்திற்கு வெளியிலிருந்து ஆட்சேர்ப்புக்கு கோரியுள்ளனர்.நீண்ட காலமாக பணிபுரியும் அவர்களிற்கே குறித்த பணிநிலை வழங்கப்பட வேண்டும். அதற்கு கல்வி தராதரம் பார்க்காது அவர்களிற்கு பதவி உயர்வினை வழங்க வேண்டும். பணியில் உள்ளவர்களிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.அரச திணைக்களங்களிற்கான இடமாற்றங்களை மேற்கொள்வதற்கான கட்டமைப்பு உள்ளது. இடமாற்ற சபையில் 2019ம் ஆண்டு வரை அந்த இடமாற்ற சபைக்கு நாங்கள் போயிருக்கின்றோம். ஆனால் மீண்டும் சில வருடங்களாக எங்களை அங்கு கூப்பிடப்படவில்லை.தொழிற்சங்கங்களை வைத்துக்கொண்டுதான் இடமாற்ற சபை தீர்மானிக்க வேண்டும். அந்த விடயத்தினையும் அமைச்சரிடம் நாங்கள் வலியுறுத்தி கூறியிருக்கின்றோம்.குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்தல் வகையில் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளருடன் எமது தொழிற்சங்கள் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கும், பேச்சுவார்தை நடார்த்தவும் அமைச்சர் இணங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.உள்ளுராட்சி மன்றங்களில் பணி புரிபவர்களிற்கு அரச வேலை வாய்ப்பு திட்டத்தில் வழங்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெற்றிடத்திற்கு ஏற்ற வகையில் ஆளணி தரப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.ஆனாலும் 2018ம் ஆண்டுக்கு பின்னர் சேவையில் இணைந்தவர்கள் குறித்த வேலைவாய்ப்பிற்குள் இணைப்பதற்கான தீர்மானம் அவர்களிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஆனாலும் 2018ம் ஆண்டுக்கு பின்னர் இணைந்தவர்களையும் வேலைவாய்ப்புக்குள் இணைத்துக்கொள்ளுமாறும் நாங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளோம் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 • 102
Added a news 
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான இரு நோயாளர் விடுதிகள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டது. எஸ்.கே அறக்கட்டளையின் ஸ்தாபகர் எஸ் கே நாதன் அவர்களின் 55 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இரு நோயாளர் விடுதிகளே இவ்வாறு இன்றைய தினம் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.குறித்த நகழ்வு இன்று காலை 11 மணியளவில் வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தலைமையில் ஆரம்பமானது. குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்பாசன பொறியியலாளர் என்.சுதாகரன், வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.ராகுலன், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சுமார் 27.5 மில்லியன் செலவில் என்பு முறி, நெரிவு சிகிச்சைகளிற்கான வைத்திய விடுதி மற்றும் 27.5 மில்லியன் செலவிலான கண் சிகிச்சை மருத்துவ விடுதி ஆகியனவே இன்று பகல் 12 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
+1
 • 101
Added a news 
கொரோனா வைரஸ் தொற்று பரவல் எப்போது முடிவிற்கு வரும் என்பது இன்று பலர் மத்தியில் உள்ள கேள்வியாகும்.உலகம் முழுக்க கொரோனா பரவல் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. அதிகம் தடுப்பூசி ஏற்றப்பட்ட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கூட கொரோனா பரவல் இன்னும் முடிவிற்கு வரவில்லை. உலகம் முழுக்க 192,848,567 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ராஸ் ஆதனாம் [Tudors Adhanom Ghebreyesus] இதற்கு பதில் அளித்துள்ளார்.4,142,769 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க தற்போது பல நாடுகளில் மூன்றாம் அலை, நான்காம் அலை கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,341,682 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ராஸ் ஆதனாம் கொரோனா பரவல் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், நான் ஒரு முக்கியமான அறிவிப்போடு உங்களை சந்திக்கிறேன். உலகம் முழுக்க கொரோனா பரவலை மொத்தமாக தடுக்க மக்கள் உதவ வேண்டும். கொரோனாவிற்கு எதிராக மக்கள் முறையாக செயல்பட்டால் புதிய அலைகளில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியும என்று தெரிவித்துள்ளார்.புதியதாக தொற்றுக்குள்ளாவோரை வேகமாக கண்டுபிடிக்க வேண்டும். உடனே கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா மேலும் பரவுவது தடுக்கப்படும். வேகமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரை கண்டுபிடிப்பதன் மூலம் கொரோனா சங்கிலியை உடைக்க முடியும்.
 • 104
Added a news 
பயண கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.மாத்தறை பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலார்களை சந்தித்த உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், சமீபத்தில் நடைபெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதற்கமைவாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் வரையறுக்கப்பட்ட வகையில் இடம்பெறும். பயண கட்டுப்பாடு நீக்கப்பட்டால் வழமை போன்று பொது போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
 • 104
Added a news 
மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு வடமராட்சி கடல் பிரதேசத்தில் கடலட்டை தொழிலுக்கான அனுமதியை வழங்கியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் நல்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.வடமாராட்சி பிரதேச கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.கடற்றொழில் அமைச்சரின் யாழ். செயலகத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,பிரதேச மக்களில் பெரும்பாலானவர்களின் கருத்தினை கடற்றொழிலாளர் சங்கங்கள் பிரதிபலிக்கின்றன என்ற வகையிலும், மக்களின் தற்போதயை பொருளாதார நிலைமையையும கருத்தில் கொண்டு, கடற்றொழில் திணைக்களத்தினால் வரையறுக்கப்படும் நிபந்தனைகளை பின்பற்றி கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்குவதாக தெரிவித்தார்.மேலும், மக்களின் நலன்களின் அடிப்படையிலேய தன்னுடைய தீர்மானங்கள் அமையும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர், வெளிச்சம் பாய்ச்சுதல் குலை போட்டுப் பிடித்தல் போன்ற தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை முற்றாக தடை செய்வதற்கு கடற்றொழிலாளர் சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.மேலும், கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற படகுகள் பதிவு செய்யப்படும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 40 குதிரைவலுவிற்கு உட்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.இன்றைய கலந்துரையாடலில் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்டப் பிரதாணி ஜெ. சுதாகரன் மற்றும் வடமாராட்சிப் பிரதேச கடற்றொழில் உத்தியோகஸ்தர்கள் ஆகியோருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாராட்சிப் பிரதேச நிர்வாக அமைப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வனும் கலந்து கொண்டிருந்தார்.
 • 102
Good Morning....
 • 106
Added a news 
291 அடி உயரமுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்து காணாமல் போன யுவதியை தேடுவதற்காக இராணுவம் இன்று (23) சிறப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட போதிலும், யுவதி குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.தொடர்ச்சியாக 4 நாட்கள் தேடிய பின்னர், சுமார் 200 பேர் அடங்கிய இராணுவ குழு நீர்வீழ்ச்சியின் மேல் மற்றும் கீழ் பகுதிகளைத் இன்றைய தினம் தேடியது.நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியை குறுகிய தூரத்திற்கும், நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியையும் கீழ் பகுதியிலிருந்து மேலே தேடுவதற்கு இராணுவத்தினர் கயிறுகளைப் பயன்படுத்தினர். ஆனால் காணாமல் போன யுவதியின் எந்த தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தேடல் குழு தெரிவித்தது.கடந்த 18 ஆம் திகதி பிற்பகல் நான்கு இளம் பெண்கள் டெவோன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிட சென்றிருந்தனர். அதுமட்டுமல்லாமல் நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் இருந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டமையும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
 • 180
Added a news 
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் ”திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விலைவாசி, கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து விடுகிறது. அதுபோல நீட் தேர்வு, காவிரி அணை விவகாரம் உள்ளிட்டவற்றிலும் திமுக செயல்பாடு அலட்சியமாக உள்ளது. "விடியல்" தரப்போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக அரசே ! வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களை வஞ்சிக்காதே” என கூறப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளையும், தமிழகத்தின் தேவைகளையும், மேற்சொன்ன கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி 28.07.2021 புதன்கிழமை அன்று  அதிமுக உடன்பிறப்புகள் அனைவரும் தங்களது வீடுகள் முன்னே பதாதைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி தமிழக மக்களின் உரிமைக்குரலாய் ஒலிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • 181
Added a news 
நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கை முடக்கியது யார் என கேட்டு ட்விட்டர் நிர்வாகத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியதாக தகவல் வெளிவந்துள்ளது நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடக்கப்பட்டது. இதனை அடுத்து தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாகவும், தனது ட்விட்டர் பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாகவும் கடந்த 20ஆம் தேதி  டிஜிபியிடம்  குஷ்பு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தற்போது நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கை முடக்கியது யாரென்று டுவிட்டர் நிர்வாகத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த கடிதத்திற்கு டுவிட்டர் நிர்வாகம் அளிக்கும் பதிலை அடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கையை சைபர் கிரைம் போலீசார் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 • 184
Added a news 
சீனாவின் ஊகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில் இதுவரை 3.50 கோடி பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுள்ளது.  கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால், சமீப காலமாக அமெரிக்காவில் தொற்று பரவல் கணிசமாக குறைந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாக தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 60,986- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 359- பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகளிலேயே தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது.  புதிதாக ஏற்படும் பாதிப்புகளில் 80 சதவீதம் டெல்டா வகை கொரோனா பாதிப்பே என அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
 • 184
Added a post 
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 12 மாதங்களிலும் அம்மனை வழிபட எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்து போனாலும், ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை தனிப்பெருமை பெற்று விளங்குகிறது. ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிகச் சிறப்பானது. தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில் தான் தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும். அந்த சமயத்தில் பூஜைகள், வேத பாராயணங்கள், ஜபங்கள், நீத்தார் வழிபாடுகள்  செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும். பிராண வாயு அதிகமாக கிடைக்கும் மாதமும் இது தான். பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு தனிச்சிறப்பு கொண்டவையாக கருதப்படுகின்றன.ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும். ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும். ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.
 • 182
Added a news 
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் வசித்து வரும் சுகந்தியின் ஏழு வயது மகள் தியாமிகா சாய். தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.தியாமிகசாய் தனது தாத்தாவின்  உதவியுடன் சிறுவயது முதல் தோட்டத்து கிணற்றில் நீச்சல் பழகி உள்ளார். தந்தை பூவராகவன் மற்றும் தாய் சுகந்தியின் ஊக்கத்தால் யோகாசனங்கள் செய்ய கற்றுக்கொண்ட சிறுமி, அதனை கிணற்றில் நீந்தியபடி செய்து பார்த்துள்ளார்.கிணற்று நீரில் மிதந்தபடி யோகாக்களை பழகிய சிறுமி, தற்போது ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக கிணற்றில் பத்மாசனம் செய்து அசத்தி வருகிறார். சிறுமி தியாமிகசாய் கூறுகையில், கிணற்றில் தனது தாத்தா கற்றுக்கொடுத்த நீச்சல் மூலம் யோகாசனங்களை செய்து வருவதாகவும், தற்போது நான்கு வகையான ஆசனங்களை கிணற்றில் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
 • 185