Feed Item
·
Added a post

ஒருவன் பள்ளி முடிந்து மாநகர பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான்,

அடுத்த ஸ்டாப்பில் அவர் ஆசிரியர் ஏறினார், அந்த மாணவன் அமர்ந்து இருந்த சீட்டு காலியாக இருக்க அங்கே சென்று அமர்ந்தார் !

ஆசிரியரை பார்த்தவுடன் மாணவன் எழுந்தான் !

உடனே ஆசிரியர் அவன் தோலை பிடித்து அழுத்தி அமர வைத்தார் ! மாணவனிடம் நான் ஆசிரியர் நீ மாணவன் ! இங்கு எல்லாரும் பயணிகள் தான் ! என்றார் !

அடுத்த ஸ்டாப் வந்தது மறுபடியும் எழுந்திருக்க மீண்டும் ஆசிரியர் அவன் தோலை பிடித்து அழுத்தி அமர வைத்தார்!

பஸ் கிளப்பியது !

அடுத்த ஸ்டாப் வந்தது மறுபடியும் எழுந்திருக்க மீண்டும் ஆசிரியர் அவன் தோலை பிடித்து அழுத்தி அமர வைத்தார்!

இப்பொழுது மாணவன் அழ ஆரம்பித்தான் !

ஆசிரியர் என்னாச்சு என்று கேட்க !

ஐயா நீங்கள் பஸ்ஸில் ஏறிய ஸ்டாப்பிங்ல தான் இறங்கணும் நீங்க தான் இப்ப வரைக்கும் இறங்கவிடாமல் தடுக்கிறீர்கள் !

  • 361