ஒரு பெரியவர் ரோட்டில் நொண்டி நொண்டி நடந்து கொண்டு இருக்க!
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு நல்ல மனதுக்காரர் வண்டியை நிறுத்தி, ஐயா ! என்னாச்சு என்று அன்புடன் கேட்க!
அதற்கு அந்த பெரியவர் ஒரு ஆட்டோ காலில் ஏற்றி விட்டு சென்று விட்டார் என்று சொல்ல!
அவரோ ஐயா ! எனக்கு பக்கத்து தெருவில் இருக்கும் டாக்டர் என் நண்பர் தான் வாருங்கள் காலுக்கு வைத்தியம் பார்த்து விட்டு நீங்கள் வீடு செல்லலாம் என்று சொல்ல!
அந்த பெரியவர் வேண்டாம் ப்பா! நேரம் ஆகுது வீட்டுக்கு போகனும் என்று சொல்ல!
இவர் இல்லை பத்து நிமிடம் தான் ஆகும் என்று வலுக்கட்டாயமாக அவரை வண்டியில் அமர வைத்து மருத்துவமனை சென்று காலுக்கு மருந்து போட்டு முடிக்க !
பெரியவர் மறுபடியும் தம்பி ரொம்ப நன்றிப்பா நான் சீக்கிரம் வீட்டுக்கு மனைவிக்கு இட்லி வாங்கிட்டு போகனும் ரொம்ப பசியுடன் இருப்பார் என்று சொல்ல!
அதற்கு அவர் சார் உங்களுக்கு காலில் அடி பட்டு இருக்கு என்று தெரிந்தால் உங்கள் மனைவி உங்கள் மேல் கோபம் கொள்ள மாட்டார், என்று சொல்ல!
அதற்கு அந்த பெரியவர் தம்பி என் மனைவி மன நலம் குன்றியவர்கள் நான் யார் என்றே அவர்களுக்கு தெரியாது என்று சொல்ல!
அதற்கு அவர் ஐயா ! அவர்களுக்கு உங்களை தெரியாது என்று சொல்கிறீர்கள் அப்புறம் ஏன் இந்த அவசரம் என்று சொல்ல !
அதற்கு அந்த பெரியவர், தம்பி என் மனைவிக்கு என்னை தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவரை எனக்கு நன்றாக தெரியுமே! என்றார் அமைதியாக!
- 408