Ads

புங்குடுதீவு, நடுத்துருத்தி கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

கரையொதுங்கிய கடலாமை 38 இஞ்சி நீளமும், 27 இஞ்சி அகலமும் மற்றும் 76 இஞ்சி சுற்றளவுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 0 0 0 0 0
 • 189
Info
Title:
புங்குடுதீவு, நடுத்துருத்தி கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

கரையொதுங்கிய கடலாமை 38 இஞ்சி நீளமும், 27 இஞ்சி அகலமும் மற்றும் 76 இஞ்சி சுற்றளவுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Duration:
01:51
Category:
Created:
Updated:
 ·   · 152 videos
 •  · 14 friends
 •  · 14 followers
Comments (0)
புங்குடுதீவு, நடுத்துருத்தி கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
Empty
typing a message...
Connecting
Connection failed
Ads
Latest Videos
Advertisement
Ads
Featured Videos (Gallery View)
Ads
 • 56
காலை வணக்கம்
 • 59
Added a news 
வல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தேர்தலில் தலைவராக திரு. செல்வேந்திரன் தெரிவு செய்யப்படுகின்றனர் இதுகுறித்துயாழ்ப்பாணம் பருத்தித்துறை முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
 • 60
Added a news 
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் இன்று (22-09-2021)-தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் 43 ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகி நடைபெற்றது.  இதில் உண்ணாநோன்பிருந்து மரணித்த தியாகி திலீபனுக்கு சுடரேற்றி சபை உறுப்பினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
 • 64
Added a news 
லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் 100 குடும்பங்களிற்கு உலருணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.இன்று காலை 10.30 மணியளவில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் மக்களிற்கு முதல் கட்டமாக குறித்த பொருட்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன், கிராமசேவையாளர், ஞானம் அறக்கட்டளை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 • 65
Added a news 
தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி - என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எனக்கு கடந்த 16ம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 7வது கடிதம் அனுப்பப்பட்டு என்னை அழைத்தார்கள். அங்கு, எனக்கு தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் என்ன தொடர்பு என்று கேட்டார்கள்.தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கையில் மௌனிக்கப்பட்டு 12 வருடங்கள் ஆகின்றது. 12 வருடமும் இத்த நாட்டிலே நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நினைக்கின்றோம். திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்வதுபோலத்தான் தெரிகின்றது.மக்கள் பிரதிநிதிகளைப்பொறுத்தவரையில் தொடர்ந்து விசாரணைகளிற்கு அழைப்புவிடுக்கப்பட்டு வருகின்றது. ஜனநாயக நாட்டிலே அரசியல்கட்சியில் இருப்பவர்களை துன்பப்படுத்துவதும், துயரப்படுத்துவதும் மன வேதனையாக இருக்கின்றது.வடக்கு கிழக்கிலே கொரோனா என்ற கொடிய நோய் வந்து எத்தனையோ மக்கள் பசி பட்டினியில் வாழ்கின்றார்கள். அதற்கு அயல் நாடுகளில் உள்ள உறவுகள் உதவிகளை புரிந்தால் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என பதியப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினாலும், இராணுவத்தினாலும் விசாரணை நடத்தப்படுகின்றது.ஒரு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எம்மிடம் ஒரு லட்சம் ரூபா பணத்தை நிவாரணம் கொடுக்குமாறு வழங்கினால், நிவாரணம் கொடுத்த பின்னர் இராணுவ முகாமிலிருந்து வருகை தந்து விசாரணை மேற்கொள்கின்றனர்.இந்த ஜனநாயக நாட்டிலே ஜனநாயகமாக மக்கள் பேசுவதற்கும் பழகுவதற்கும் இந்த நாட்டில் இடமில்லை. இவ்வாறு தமிழ் மக்களிற்கு இடமில்லை என்றால் ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்புகொண்டு அவர்களிடம் தமிழர்களை ஒப்படைத்துவிட்டால் அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.மான்புமிகு ஸ்ராலினிற்கு நான் நன்றி கூறுகின்றேன். அகதிகளாக போன தமிழ் மக்களிற்கு சொந்த இடத்தை கொடுத்த வாழ்வதற்கான வழியை அமைத்து கொடுத்திருக்கின்றார். அதேபோல் ஐரோப்பிய நாடுகளில் உள்ள திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். அண்மையில் ஜேர்மனியிலிருந்தும் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் புலிச்சாயம் பூசப்பட்டு விசாரணை என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார்கள். காணாமல் போனவர்கள் இன்று வீதிகளிலே இருக்கின்றார்கள். அவர்களின் ஆர்ப்பாட்டங்களிற்கு போனாலும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற போர்வையில்தான் வருகின்றார்கள்.தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை என்று இந்த அரசாங்கம் நினைக்காது விடுகின்றதோ அன்றுதான் நிம்மதி. இறந்த மக்களிற்கு அஞ்சலி செலுத்தலாம் என 7 வருடங்களிற்கு முன்னர் மங்கள சமரவீர ஐநாவிலே கூறியிருந்தார். இன்று அந்த சட்டம் மாற்றப்பட்டுள்ளது.இலங்கை தீவிலே எந்த அரசாங்கம் மாறுகின்றதோ அந்த அரசாங்கத்திற்கு ஏற்ற வகையில் சட்டம் மாறுகின்றது. சட்டங்கள் மாறுபட மக்கள் பாதிக்கின்றார்கள். இந்த கொரோனா காலத்திலும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் விசாரணை என்ற போர்வையிலே மக்கள் விசாரிக்கப்படுகின்றார்கள். மக்கள் பிரதிநிதிகளை பயமுறுத்துகின்றார்கள்.இந்த நாட்டு ஜனாதிபதியிடம் கையெடுத்து நான் கேட்கின்றேன், நீங்கள் உலக நாடுகளிடம் போய் தமிழ் மக்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை செய்ய வேண்டும், இந்த நாட்டில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று கூறுகின்றீர்கள். ஆனால் எமக்கு வங்கி கணக்கிற்கு ஒரு லட்சம் ரூபா வந்தாலும் விசாரணை நடைபெறுகின்றது. இந்த விசாரணைகள் என்று இல்லாது போகின்றதோ அன்றுதான் தமிழரின் தீர்க்கதரிசனமான முடிவு வரும் என நான் பதிவிட விரும்புகின்றேன்.கடந்த 9ம் மாதம் 16ம் திகதி விசாரணைக்காக எனக்க அழைப்பு வந்தது. குறித்த விசாரணை கிளிநொச்சியில் உள்ள பயங்கரவாத விசாரணைபிரிவில் 3 மணிநேரம் விசாரணை இடம்பெற்றது. குறித்த விசாரணையில் எவ்வாறு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றது, அந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் எனக்கும் உள்ள உறவுகள் தொடர்பாகவும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு தொடர்பிலும் விசாரணை இடம்பெற்றது.சிவஞானம் சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளாது என்னிடம் விசாரிப்பதானது நியாயமற்றது என அவர்களிடம் கூறியிருந்தேன். மக்கள் பிரதிநிதிகள் அடங்கி போனால் பொதுவாக அரசியல் அடங்கி போகும் என்று நினைக்கின்றார்கள்.பொதுவாக குறித்த விசாரணையில் 14 கேள்விகள் கேட்கப்பட்டது. நிவாரணம் வழங்குவதற்கு எவ்வாறு பணம் வருகின்றது எனவும், வெளிநாடுகளில் உங்களிற்கு தொடர்பு உள்ளதா எனவும் வினவியிருந்தார்கள். தமிழ் மக்களை பொறுத்தவரையில் அதிகமாக இன்று ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்கின்றார்கள். நாங்கள் பசி பட்டினியில் இருக்கும்பொழுது அவர்கள் அள்ளி கொடுக்கும் பணம்தான் இன்று வடக்கு கிழக்கிலே தமிழ் மக்கள் வாழக்கூடியதாக இருக்கின்றது.பொதுவாக சொல்லப்போனால் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கும் உதவிகளை புரிகின்றார்கள். யாழ் போதனா வைத்தியசாலை உள்ளிட்டவற்றுக்கு மருத்துவ உதவிகளெல்லாம் புரிகின்றார்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
 • 66
Added a news 
தமிழகத்தின் 26-வது கவர்னராக கடந்த 11-ம் தேதி ஆர்.என். ரவி பதவியேற்றார். இந்தநிலையில்  கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார்.  கவர்னராக பதவியேற்ற பின் முதல் முறையாக டெல்லி செல்லும் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 • 69
Added a post 
தாய், தந்தை, மகள் மூவருமே ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பக்தர்கள். குருவை வணங்குவதில் பணக்காரராக இருந்தாலும் வறுமையில் வாழ்ந்து வந்தனர்.பெண் நல்ல அழகானவள் மட்டுமல்ல நல்ல குணமும் கொண்டவள். நன்றாக அவள் படித்தாலும் மேற்கொண்டு அவள் தந்தையால் படிக்க வைக்க முடியவில்லை.படிப்புக்கு ஏற்றபடி வரன் பார்க்க வேண்டுமே என்பதை காட்டிலும் வறுமையே முதல் காரணமாய் அங்கு நர்த்தனம் ஆடியது.பெண் பருவ வயது வந்ததும் தீவிரமாய் வரன் பார்க்க தொடங்கினர்.நாட்கள் கடந்தது.  நல்ல வரன். குருவின் அருளால் இனிதாய் அமைந்தது.பிள்ளை வீட்டாரும் வரதட்சினை எதுவும் வேண்டாமென்றும் உங்களுக்கு எங்கு விருப்பமோ அங்கு திருமணத்தை நடத்துங்கள் என கூறி விட்டனர்.எல்லாம் குருராயர் அருள்தான் என நினைத்திருந்தநினைத்திருந்த சமயத்தில் அவர்களின் அடுத்த வார்த்தை பெரிய பாறையையே தலையில் தூக்கி வைத்ததை போல உணர்ந்தனர்.திருமணத்திற்கு வருபவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும். அவர்கள் வயிராற உணவு அருந்த வேண்டும் என தெரிவித்தனர்.இவர்களும் சரி என்ற உடன் தேதி குறிக்கப் பட்டது. தந்தைக்கோ தன்னுடைய வறுமையிலும் பெண்ணை சிறப்பாக கரையேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் புரட்டலானார்.தெரிந்தவரிடத்திலும் கடன் வாங்கினார்.  அப்படியும் ₹ 60000 கு பணம் அதிகமாக தேவைப்பட்டது......குரு ராஜா இந்த பணத்தை யாரிடம் கேட்பேன்,.....எந்நிலை அறிந்து இதை யார் தருவார்கள் என தினந்தோறும் கவலை பட்டனர்.......குடும்பத்தினர்.....சரி நாம் போய் நேரிடையாக மந்த்ராலயத்திற்கு சென்று ஸ்ரீ ராகவேந்திர சுவாமியிடம் சென்று முறையிடுவோம். ....  மடாதிபதியிடம் ஆசி வாங்கி மங்கள அக்ஷதை வாங்கி வருவோம் என மூவரும் கிளம்பினர்...அதிகாலையிலேயே துங்கபத்ராவில் குளித்தனர். மூலராமர் பூஜையை கண்டு களித்தனர். பிருந்தாவனத்திலேயே மனமுருகி வேண்டினர்.....மாலை... மறுபடியும் துங்கையில் குளியல்....அன்றைய இரவு தேரோட்டம் எல்லாம் கண்டு களித்தனர்.ஆலய இடதுபுறம் உள்ள ஒரு சிறிய அறையில் அன்றைய மடாதிபதி பிரசாதம் வழங்குவார்.....இது அனைவருக்கும் கிடைக்காது.... டிக்கெட் வைத்திருப்பவர்களை மட்டுமே அந்த அறையில் அனுமதிப்பார்கள். அன்றைய தினம் மடத்தின் தலைமை குருவாக இருந்தவர் சுஷ்மீந்திர தீர்த்தர்.இவர்களும் ஒரு தட்டில் பழம் திருமண பத்திரிக்கை வைத்திருந்தனர். எப்படியாவது இதை குருவிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பது இவர்களின் எண்ணம்.இவர்களுக்கு முன் வரிசையில் நின்றவர்கள் எல்லாம் நிறைய பழங்கள், சால்வைகள் என அவர்கள் கையில் வைத்திருந்த தட்டுகளே அவர்களை அடையாளம் காட்டியது.ஒவ்வொருவராய் குருவிடம் காணிக்கைகளை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினர். இவர்களது முறை வந்ததும் இவர்களும் பத்திரிக்கை தாங்கிய தட்டை கொடுத்து திருமணத்திற்கு பணம் தடையாக இருக்கிறது ஸ்வாமி. நீங்கள் தான் என் பெண்ணை ஆசிர்வதிக்க வேண்டும் கண்ணீர் மல்க உருகினர் தாய், தந்தையர். மகளின் கண்ணீரும் கரைந்தது.உடனே தலைமை குரு எல்லாம் அவர் பார்த்து கொள்வார் என கூறி மந்திராக்ஷதையை கொடுத்து ஆசிர்வதித்து இவர்களுக்கு முன்னால் ஒரு தம்பதியர் கொடுத்த தட்டை இவர்களிடத்திலே கொடுத்து இது தான் அவருடைய ஆசி என கூறி ஆசிர்வதித்தார்..இவர்களும் பயபக்தியுடன் வாங்கி கொண்டு அறையை விட்டு வெளியே வந்தனர். ஆனால் தட்டை கொடுத்த தம்பதிக்கோ அவமானமாகி விட்டதே... நாம் குருவுக்கு கொடுத்ததை அவர் யாருக்கோ அப்படியே கொடுத்து விட்டாரே? என்ன இருக்கிறது அந்த தட்டில் என பார்க்க கூட இல்லையே என சங்கடத்தில் நெளிந்தனர்.உடனே குருவின் பக்கத்தில் இருந்த சீடரிடம் விஷயத்தை கூறினர். அவரும் அப்படியா என ஆச்சரியப்பட்டு தலைமை பீடாதிபதியிடம் "குருவே இவர்கள் மஹான் பெயரில் அந்த தட்டில்  ரூ 60000 க்கான செக் வைத்துள்ளனர். அதை கவனிக்காமல் அதை அப்படியே அவர்களுக்கு கொடுத்து விட்டீர்கள்" என்று கூற, குருவும் " அவர்கள் இருக்கிறார்களா என பார்த்து இருந்தால் அவர்களை அழைத்து வா " என கட்டளை இட்டார்.சீடரும் உடனே நாலைந்து சீடர்களை அழைத்து கொண்டு பிருந்தாவனம் முழுவதும் தேடி கண்டுபிடித்து அவர்களை குருவிடம் அழைத்து வந்தனர்.அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு மறுபடியும் நம்மை அழைத்திருக்கிறார் என்று.  உடனே சீடர் அவர்களிடம் குரு உங்களுக்கு கொடுத்த பிரசாத தட்டை கொடுங்கள் என கேட்டு வாங்கி குருவின் முன்னால் வைத்தார்.அவர்கள் அதை கொடுத்தவுடன் அவர்களை வெளியில் நிற்க வைத்து முகவரியை வாங்கி கொண்டு சிறிது நேரம் காத்திருங்கள் என கூறி வெளியில் நிற்க வைத்தனர்.உடனே குரு முன்பு அந்த தட்டை அளித்த தம்பதியை வரவழைத்து அதில் இருந்த அந்த வெள்ளை கவரை எடுக்க செய்து செக்கின் பின்னால் குருவின் கையெழுத்தும், அன்பளிப்பாக அளித்தவரின் கையெழுத்தும் அதில் இடம்பெற செய்து அந்த பணம் முழுவதும் அந்த வறுமையான குடும்பத்திற்கே வழங்கிட வழி செய்தார்.பிறகு அந்த குடும்பத்தை உள்ளே அழைத்து விவரமாக நடந்ததை கூறினர். ஐயா நீங்கள் உங்கள் மகளுக்கு திருமண செலவுக்கு பணம் தேவை என்று ஸ்ரீ ராகவேந்திரரிடம் கோரிக்கை வைத்தீர்கள். அந்த கோரிக்கைதான் இப்போது அவரின் கையாலே நடத்தி வைக்கப்பட்டது. மஹானின் பெயரால் இருந்த செக்கை உங்கள் பெயரில் மாற்ற முடியாது என்பதால் பணம் கொடுத்த அந்த தம்பதியர் அனுமதியுடன் தலைமை குருவின் கையெழுத்து அடங்கிய செக்கை மறுபடியும் அந்த குடும்பத்திற்கு வழங்கி இதுதான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் பரிபூரண ஆசிகள் என கூறி மீண்டும் அந்த செக்கை மந்திராக்ஷதை கொடுத்து குரு வழங்கினார்.அந்த குடும்பத்தினர் ஓம் ஸ்ரீ ராகவேந்திராயா என கதறியது மந்த்ராலயம் முழுக்க ஒலித்தது.இது கற்பனை அல்ல.....1992 - 93 வருடத்தில் நடந்ததாக " மந்திராலய மகானின் பெருமைகளை ஆராய்ச்சி செய்து ஒன்பது பதிப்புகளை வெளியிட்டு விரைவில் தமது பத்தாவது பதிப்பை வெளியிட ஏற்பாடுகளை செய்து வரும் திருமிகு அம்மன் சத்தியநாதன் அவர்களின் இரண்டாம் பாகத்தில் இது இடம்பெற்றுள்ளது. குரு ஸ்ரீ ராகவேந்திர மகான் இன்னும் என்னென்ன அற்புதங்கள் செய்ய போகிறாரோ?..குருவே சரணம்....
 • 65
Added a news 
தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையானது, விசேடமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. இது, 2030இல் அடைய எதிர்பார்த்திருக்கும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதற்குப் பாதகமாக அமைந்திருக்கின்றது.அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள், இவ்வாறான நிலையற்ற தன்மையிலிருந்து மீள்வதற்காக, சர்வதேசப் பொறிமுறையொன்றின் ஊடாக அபிவிருத்திக்கான நிதி மற்றும் கடன் சலுகை உள்ளிட்ட மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அத்தியாவசியமாகியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 • 66
Added a news 
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்கள், எந்த நேரத்திலும் 247 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து மருத்துவர் ஒருவரை தொடர்பு கொள்ளலாம் என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும், குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மருத்துவரை தொடர்பு கொண்டதன் பின்னர், நோயாளியின் நோய் நிலைக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 • 67
Added a news 
செவிப்புலனற்றவர்கள் மற்றும் சைகை  மொழிப் பயன்பாட்டளர்களின் மொழியியல் அடையாளம் சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.மனிதர்களின் சகல செயற்பாடுகளுக்கும் கேட்டல் திறனும், மொழி புரிதலும் அவசியமாகும். எனவே எமது சமூகத்தில் உள்ள பிறப்பிலேயே கேட்கும் திறனை இழந்த செவிப்புலனற்ற அனைவருக்கும் பிறரை போன்றே உலகை அறிவதற்கு நாம் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.மேற்படி தேவைக்காக உருவான சைகை மொழியானது தற்போது இயற்கை சைகை மொழியாக முன்னேற்றமடைந்துள்ளது. இந்நாட்டின் அனைத்து இனத்தவர்களுக்காகவும் உருவாக்கப்பட்ட ´இலங்கை சைகை மொழி´ காலத்தின் மாற்றங்களுடன் வளர்ச்சியடைந்து பொதுவாக செவிப்புலனற்ற நபர்களுக்கு நன்மையாக அமைந்துள்ளது என்பது எனது நம்பிக்கையாகும்.செவிப்புலனற்ற நபர்கள் எவ்வித பாகுபாடும் இன்றி சாதாரணமாக சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான வலிமையை ஒரு அரசாங்கமாக நாம் தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுப்போம் என்பதை இந்த சிறப்பான நாளில் நினைவூட்டுகின்றேன்.சைகை மொழியின் வளர்ச்சிக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதுடன், முடிந்தவரை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஏனைய மொழிகள் போன்றே சைகை மொழிக்கும் முன்னுரிமை வழங்கி எமது சக குடிமக்களுக்காக தமது கடமைகளை நிறைவேற்றுமாறு பொறுப்புவாய்ந்த அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதும் வாழும் 70 மில்லியனுக்கும் அதிகமான செவிப்புலனற்றவர்களின் குரலாக விளங்கும் சைகை மொழி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, சமூகத்தில் நீங்கள் அனைவரும் சமமாக செயற்படுவதற்கு வாய்ப்பு கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
 • 68
Added a news 
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் நேற்று (22) கலந்துகொண்ட அமைச்சர் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் என்ற வகையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்க கூடிய உயர்ந்த பட்ச தீர்வை வழங்கி உள்ளது. இதனை ஏற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.ஆசிரியர் மற்றும் அதிபர்களின் பணிப் பகிஷ்கரிப்பை அரசாங்கம் குறைத்து மதிப்பிடவில்லை அதனால் நாட்டின் சிறுவர்களது கல்வி நடவடிக்கைகள் சீர்குலையும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அவர் அனைத்து தரப்புகளையும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 • 69
Good Morning.....
 • 67
Added a news 
இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் செப்டம்பர் 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டை பொறுத்தவரை, மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ரூ.2120.54 கோடி மதிப்பீட்டில் 24 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன. 41,695 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  முதலீட்டாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். சர்வதேச தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வர வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாடு ஏற்றுமதியில் மூன்றாவது பெரிய மாநிலமாக உள்ளது. மோட்டார் வாகனங்கள் ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. ஏற்றுமதி துறை பாதிக்க கூடாது என்பதால் தான் கொரோனா காலத்திலும் அனுமதி வழங்கினோம்.  தலைமை செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைக்கப்படும். ஏற்றுமதி திறனை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழக தயாரிப்புகள் (Made in TamilNadu )என்ற நிலை உருவாக வேண்டும். மாவட்ட ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. பொது,தனியார் நிறுவனங்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று கூறினார்.
 • 127
Added a news 
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  செப்டம்பர் 15 முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் 22-ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிகிறது. செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும் செப்டம்பர் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்பகுதிகளில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட உள்ளார். தற்போது சேலத்தில் இருக்கும் அவர், நாளை காலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 • 126
Added a news 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சித்தூர் மாவட்ட பக்தர்கள் மட்டும் ஒரு நாளைக்கு இரண்டாயிரம்பேர் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது வெளி மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஏழுமலையான் கோவிலில் 31,558 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அவர்களில் 14,247 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியிருக்கிறார்கள். நேற்று முன்தினம் மட்டும் ரூ.2 கோடியே 77 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
 • 125
Added a news 
இமாச்சல பிரதேசத்தில் செல்பி மோகத்தால் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இன்று நான்கு பேர் உயிரை பறித்துள்ளது. அம்மாநிலத்தின் குலு மாவட்டம் பஹாங் என்ற இடத்தில் ஓடும் ஆற்றக்கரையோரம் நின்று அம்மா, மகன் மற்றும் இரு சுற்றுலாப் பயணிகள் என நான்கு பேர் செல்பி எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளனர்.  உலக அளவில் செல்பி எடுக்க முயன்று பலியானவர்களின் எண்ணிக்கையில் இந்தியா தான் அதிகம் என ஆய்வு ஒன்று முன்னர் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 • 126
Added a news 
அமெரிக்கா சென்றுள்ள பிரேசில் அதிபர் போல்சனேரோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தினால் அமெரிக்காவில் உள்ள உணவு விடுதிக்குள் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டு சாலையோர உணவகத்தில் உணவருந்தும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றுள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ, தன் சக மந்திரிகளுடன் சேர்ந்து இரவு நேர உணவுக்காக விடுதி ஒன்றுக்குள் நுழைந்துள்ளார். அப்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டதற்கான சான்றிதழை கேட்டுள்ளனர். பிரேசில் அதிபர் சான்றிதழ் இல்லை, நான் தடுப்பூசி இன்னும் செலுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போல்சனேரோ உள்ளிட்ட தலைவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென  நியூயார்க் மேயர்  பில் டே பலசியோ அறிவுறுத்தி உள்ளார். 
 • 127
Added a news 
கனடாவில் 2015-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜஸ்டீன் ட்ரூடோ பிரதமரானார். ஆனால், 2019 தேர்தலில் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் சிறிய கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டு ஆட்சி அமைத்தார் ஜஸ்டின் ட்ரூடோ. கனடா அரசு சார்ந்த ஒவ்வொரு விஷயத்திலும் கூட்டணி கட்சிகளோடு இணைந்து முடிவெடுக்க வேண்டிய சூழலே நிலவிவந்தது. கொரோனா தடுப்பு பணிகளால் மக்கள் மத்தியில் தனக்கு கிடைத்திருக்கும் நற்பெயரைக்கொண்டு தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் திட்டத்தில் இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே, அதாவது 2023-ல் நடைபெற வேண்டிய தேர்தலை இந்த ஆண்டே நடத்த ஜஸ்டீன் ட்ரூடோ முடிவு செய்தார்.அதன்படி 338 இடங்களை கொண்ட கனடா நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடத்தது. வாக்குப்பதிவு முடிவடைந்தததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜஸ்டீன் ட்ரூடோ தொடர்ந்து மூன்றாவது முறையாக கனடாவின் பிரதமராகிறார். தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை லிபரல் கட்சி பெறவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 170 இடங்கள் தேவை என்கிற சூழலில் லிபரல் கட்சி 156 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு தேர்தலை போலவே இந்த முறையும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் நிர்ப்பந்தத்துக்கு ஜஸ்டீன் ட்ரூடோ தள்ளப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 122 இடங்களில் வெற்றி பெற்றதாக தெரிகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது முறையாக கனடாவில் ஆட்சியை தீர்மானிக்கும் கிங்மேக்கராக ஜக்மீத் சிங் உருவாகியுள்ளார். முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது ஆட்சியை தீர்மானிக்கும் கிங்மேக்கராக ஜக்மீத் சிங் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜக்மீத் சிங் உள்பட இந்திய வம்சாவளியினர் 17 பேர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தேர்தல் வெற்றி குறித்து ஜஸ்டீன் ட்ரூடோ டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “லிபரல் கட்சி மீது நம்பிக்கை வைத்து, ஒளிமயமான எதிர்காலத்தை தேர்வு செய்து வாக்குகளைப் பதிவு செய்த கனடா மக்களுக்கு நன்றி. கொரோனா தொற்றை நாங்கள்தான் அழிக்கப்போகிறோம், கனடாவை நாங்கள்தான் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
 • 127
Added article 
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் நடித்திருந்த திரிஷா, விஜய் சேதுபதி மற்றும் அவர்களின் இளைய கதாபாத்திரங்களாக வரும் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷான் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக பேசப்பட்டது. இந்த படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் தமிழில் இயக்கிய பிரேம்குமாரே இயக்கினார். ஆனால் இரண்டு மொழிகளிலும் தமிழில் பெற்ற வெற்றியைப் பெறவில்லை. இப்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. பிரபல தயாரிப்பாளர் அஜக் கபூர் இதன் உரிமையை வாங்கி ரீமேக் செய்ய உள்ளார்.  விரைவில் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
 • 126
Added article 
வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வெறும் 25 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்த ரஜினிகாந்தை வைத்து டைரக்டர் சிவா படத்தில் தேவையான அனைத்து காட்சிகளும் எடுத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்திற்கு ஸ்டெப் தங்கச்சியாக நடித்திருப்பதாகவும், இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என பலரும் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் பாசத்தை பொழிந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இயக்குனர் சிவா சரியாக திட்டமிட்டு படத்திற்கு தேவையான காட்சிகளை குறைந்த நேரத்திலேயே எடுத்து விட்டதாகவும். இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் அளவில் பொருட்செலவு ஏற்படவில்லை என்பதால் அண்ணாத்த படத்தின் தயாரிப்பாளர் டைரக்டர் சிவாவை கூப்பிட்டு பாராட்டியுள்ளார்.அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள சிவா நயன்தாராவிற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தரவில்லையாம். படத்தில் ஒரு சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளில் மட்டுமே நடிக்க வைத்துள்ளார். அண்ணாத்த படம் வெளியானால் நயன்தாராவிற்கான வரவேற்பு குறையும் என்பதால் இயக்குனர் சிவா மீது நயன்தாரா கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் இடம் பெற்றதால்தான் நயன்தாராவிற்கான காட்சிகள் குறைந்தது என தெரிகிறது. படத்திற்கு கீர்த்தி சுரேஷ் காட்சிகள் மிகவும் முக்கியமாம் அதனால்தான் அவரது காட்சிகள் அதிகமாக இடம் பெற்றதாம்.
 • 126
Added article 
மராத்திய நடிகையான ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் சிக்கி இன்று காலை உயிரிழந்துள்ளார்.கோவாவின் அர்போரா பகுதியில் தனது காதலருடன் காரில் சென்றுள்ளார் ஈஷ்வரி தேஷ்பாண்டே. நள்ளிரவு விருந்து ஒன்றுக்கு சென்று திரும்பிய நிலையில்(அவர்கள் கைகளில் அதற்கான பேண்ட் இருந்துள்ளது) அதிகாலை நேரத்தில் நீர் பகுதிக்குள் கார் விழுந்து மூழ்கியுள்ளது. அதிகாலை 5 மணியளவில் நடந்த இந்த விபத்தில் ஈஷ்வரி தேஷ்பாண்டேவும் (25), அவரது காதலர் சுப்பம் டெட்ஜ்(28)  என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் மராத்தி திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 • 126
Added article 
விஜய் டிவியை பொறுத்தவரை நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தான் ஒளிபரப்பாகும். ஆனால் இப்போதெல்லாம் காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட சீரியல்களை விஜய் டிவி ஒளிபரப்புகிறது. இருப்பினும் எல்லா சீரியல்களுக்கும் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருந்த ஜாக்குலின் திடீரென்று சீரியலின் கதாநாயகியாக தேன்மொழி பிஏ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட நாட்களிலிருந்தே அடிக்கடி நேரம் மாற்றப்பட்டு கொண்டிருந்தது.ஏனென்றால் எப்படியாவது இந்த சீரியலை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்றால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட காலங்களில் நீண்ட நாள் ஒளிபரப்பாகாமல் இருந்தது. தற்போது தேன்மொழி சீரியலை முடித்துவிடலாம் என்ற முடிவில் விஜய்டிவி உள்ளதாம்.இந்த தகவலை சீரியலின் கதாநாயகியான ஜாக்குலின் உறுதிப்படுத்தியுள்ளார். ஜாக்குலினிடம் இதைப்பற்றி கேட்கும்போது, கடந்த பிக்பாஸ் சீசன்4 ஒளிபரப்பானபோது தற்காலிகமாக இரண்டு வாரம் தேன்மொழி சீரியல் நிறுத்தி வைக்கப்பட்டது.இப்பொழுது பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் மாதம் துவங்கப் போவதால் சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாறுகின்றது. மேலும் தேன்மொழி பிஏ சீரியல் போர் அடிப்பதாக ரசிகர்கள் நினைப்பதால், அதனை நிறைவு  செய்ய நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.போன வருஷம் கோடு போட்டாங்க. அது கூட பரவாயில்லை இந்த வருஷம் ரோடே போட்டு அனுப்பிட்டாங்க. அதனால் பிஏ வரைக்கும் படிச்சது போதும் என்று நானும் மனதை தேற்றி கொண்டேன் என்று ஜாக்குலின் ஜாலியாக பதில் அளித்துள்ளார்.
 • 128
Added a video 
Vijay Sethupathi | Anirudh | Vignesh Shivan
 • 173
Added a news 
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்பின் இணைப்பாளர் கலாறஞ்சினி தெரிவித்துள்ளார்இன்று பிற்பகல் அவரது வீட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
 • 181
Added a news 
முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.5 அடி நீளம் கொண்ட குறித்த பெண் சிறுத்தை புலி வேட்டைக்காக கட்டப்பட்டிருந்த தடத்தில் சிக்கியுள்ளது.இந்த நிலையில் இன்று பகல் குறித்த சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.குறித்த சிறுத்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் வில்பத்து காட்டில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
 • 182
Added a news 
இன்றைய அவசர நிலையில்  பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள்  பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் அவ்வாறில்லாது பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி பகுதியில் கடந்த வாரம் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்த ஒருவரின் சடலம் தகனம் செய்வதற்காக வைத்தியசாலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சமயம் குறித்த சடலம் அவரது வீட்டுக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டமை தொடர்பில் மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரிடத்திலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விடயம் தொடர்பில் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த கொவிட் -19 னால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவ்வாறான எந்த முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை உண்மையில் கொவிட்-19 தொற்றுக்காரணமாக மரணித்தவரின் சடலத்தை கொண்டு செல்வது அல்லது கையாளுதல் தொடர்பாக சுகாதார நடைமுறைகளை பேணிக் கொள்வது வைத்தியசாலை மற்றும் சுகாதாரத் திணைக்களம் அதேவேளை அதனை போலீஸ் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என்றும்இது தொடர்பாக எந்தவிதமான முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை இதுதொடர்பாக நான் தற்போது கருத்துக்கள் எதனையும் கூற முடியாது.  இந்த நோய்த்தொற்று தொடர்பில் சரியான முறையில் கண்டறிந்து பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய அதிகாரிகள் இந்த விடயத்தில் பொறுப்பற்ற விதத்தில் நடந்திருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 • 187
Added a news 
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19  தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவலை தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 256 பேர் கொவிட் தொற்றறக்கு இலக்காகி இருப்பதாகவும் இதில் தற்போது 537 பேர் சிகிச்சை பெற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அத்துடன் மாவட்டத்தில் இதுவரை எழுபத்தி மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளது, அத்துடன் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  அந்த வகையில் முதலாவது தடுப்பூசியினை 61 ஆயிரத்து 894 பேர் பெற்றுள்ளனர் அதேபோல முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளை 43 ஆயிரத்து 507 பேர் பெற்றுக் கொண்டுள்ளனர்.அத்துடன் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட இருபது தொடக்கம் முப்பது இதற்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  இதுவரை 107 பேர் மட்டும தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
 • 186