Ads

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் இஸதலத்தில் பலி

0 0 0 0 0 0
 • 203
Info
Title:
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் இஸதலத்தில் பலி
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Duration:
00:45
Category:
Created:
Updated:
 ·   · 125 videos
 •  · 13 friends
 •  · 13 followers
Comments (0)
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் இஸதலத்தில் பலி
Empty
typing a message...
Connecting
Connection failed
Ads
Latest Videos
Advertisement
Ads
Featured Videos (Gallery View)
Ads
Added a news 
நேற்றைய தினம் (26)  இலங்கையில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,195 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 299,366 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 270,356 ஆக அதிகரித்துள்ளது.
 • 39
Added a news 
தமிழக பாடநூல் கழக தலைவராக சமீபத்தில் திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அறிவுரை குழுவில் சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் தமிழக பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டார். தற்போது அதை தொடர்ந்து தமிழக பாடநூல் கழக அறிவுரைக் குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். திராவிடர் கழகத்தை சேர்ந்தவரான சுப.வீரபாண்டியன் அரசியல், இலக்கியம் சார்ந்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 • 41
Added a news 
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவர்களை கவுரவிக்கும் விதமாக புதிய விருதை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில் பல்வேறு கலைஞர்கள், சமூக செயற்பாட்டளர்களுக்கு மாநில அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவர்களை கௌரவிக்கும் விதமாக புதிய விருதை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக வளர்ச்சியில் சிறப்பான பங்காற்றுபவர்களுக்கு தகைசால் என்ற புதிய விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்காக தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலாளரை உள்ளடக்கிய குழு ஒன்றையும் அமைக்க ஆணை பிறப்பித்துள்ளார்.
 • 39
Added a news 
திருக்கழுக்குன்றம் பகுதியில் இரவு நேரத்தில் பிரகாசமாக ஜொலித்தபடி மர்ம பொருள் ஒன்று விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் ஆடுகள் வளர்த்து வந்த நிலையில் வானிலிருந்து பிராகசமான வெளிச்சத்தோடு மர்ம பொருள் ஒன்று அப்பகுதியில் விழுவதை கண்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அப்பகுதிக்கு விரைந்த விஏஓ மற்றும் போலீஸார் 10 கிலோ எடை கொண்ட அந்த மர்ம பொருளை ஆய்வுக்கு உட்படுத்த எடுத்து சென்றுள்ளனர். வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 • 40
Added a news 
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. இரு நாடுகளின் உறவும் சுமூகமான நிலையில் இல்லை. இரு நாடுகளின் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை வெளியுறவு மந்திரி வெண்டி ஷெர்மன் சீனா சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற ஆறு மாதத்துக்கு பிறகு அமெரிக்காவின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் சீனாவுக்கு சென்று நேரடி பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறையாகும். வெண்டி ஷெர்மன் அங்கு அமெரிக்கா-சீனா உறவுக்கு பொறுப்பான சீனாவின் துணை வெளியுறவு மந்திரி ஸீ பெங் மற்றும் வெளியுறவு மந்திரி வாங் யி ஆகிய இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்க இருக்கும் சூழலில் இரு நாடுகளின் மோசமான உறவுக்கு அமெரிக்காவே காரணம் என சீனா குற்றம் சாட்டியுள்ளது.  மிகவும் தவறான வழிகாட்டுதலையும், ஆபத்தான கொள்கையையும் அமெரிக்கா மாற்றிக்கொள்ள வேண்டும் என சீனா கூறியுள்ளது.‌ துணை வெளியுறவு மந்திரி ஸீ பெங் கூறுகையில், “சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும், அடக்கவும் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முயற்சிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் கடுமையான சிரமங்களை எதிர் கொள்வதற்கான அடிப்படை காரணம், சில அமெரிக்கர்கள் சீனாவை கற்பனை செய்யப்பட்ட எதிரியாக சித்தரிப்பதே ஆகும்‌” என‌ கூறினார்.
 • 40
Added a news 
சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலினால் கேரம் விளையாடிய வைரல் வீடியோவை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றவர்களின் உத்வேகத்தை தூண்டும் விதமாக சில பாசிட்டிவ் ஆன போஸ்ட்களை தன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சச்சின் பகிர்ந்த வைரல் வீடியோவில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலால் கேரம் போர்டு விளையாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் சோகத்தையும் ஒருசேர எழுப்பியது.சச்சின் டெண்டுல்கர் வீடியோவை பகிர்ந்து அதில் ‘Here’s Harshad Gothankar who chose i-m-POSSIBLE as his motto’ என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். ஹர்ஷத் கோதாங்கர் என்ற அந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தன் நண்பர்களுடன் கேரம் விளையாடினார், மற்றவர்கள் கையால் விளையாடும் போது அவர் மட்டும் காலால் விளையாடியது தான் வியப்பு.சாத்தியமற்றதற்கும் சாத்தியத்துக்குமான வித்தியாசம் ஒருவரது உறுதிப்பாட்டைப் பொறுத்தது என்கிறார் சச்சின் டெண்டுல்கர். மாற்றுத் திறனாளியின் இந்த அதிசயத் திறனை வியந்த சச்சின், சாத்தியமாகக் கூடியதை நோக்கிய அவரது முயற்சியை நேசிக்கிறேன். இதிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ளலாம் என சச்சின் பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த ட்விட்டர் பதிவை 12,400 பேர் லைக் செய்துள்ளனர். 
 • 40
Added a news 
சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலினால் கேரம் விளையாடிய வைரல் வீடியோவை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றவர்களின் உத்வேகத்தை தூண்டும் விதமாக சில பாசிட்டிவ் ஆன போஸ்ட்களை தன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சச்சின் பகிர்ந்த வைரல் வீடியோவில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலால் கேரம் போர்டு விளையாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் சோகத்தையும் ஒருசேர எழுப்பியது.சச்சின் டெண்டுல்கர் வீடியோவை பகிர்ந்து அதில் ‘Here’s Harshad Gothankar who chose i-m-POSSIBLE as his motto’ என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். ஹர்ஷத் கோதாங்கர் என்ற அந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தன் நண்பர்களுடன் கேரம் விளையாடினார், மற்றவர்கள் கையால் விளையாடும் போது அவர் மட்டும் காலால் விளையாடியது தான் வியப்பு.சாத்தியமற்றதற்கும் சாத்தியத்துக்குமான வித்தியாசம் ஒருவரது உறுதிப்பாட்டைப் பொறுத்தது என்கிறார் சச்சின் டெண்டுல்கர். மாற்றுத் திறனாளியின் இந்த அதிசயத் திறனை வியந்த சச்சின், சாத்தியமாகக் கூடியதை நோக்கிய அவரது முயற்சியை நேசிக்கிறேன். இதிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ளலாம் என சச்சின் பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த ட்விட்டர் பதிவை 12,400 பேர் லைக் செய்துள்ளனர். 
 • 40
Added a news 
சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலினால் கேரம் விளையாடிய வைரல் வீடியோவை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றவர்களின் உத்வேகத்தை தூண்டும் விதமாக சில பாசிட்டிவ் ஆன போஸ்ட்களை தன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சச்சின் பகிர்ந்த வைரல் வீடியோவில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலால் கேரம் போர்டு விளையாடியது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் சோகத்தையும் ஒருசேர எழுப்பியது.சச்சின் டெண்டுல்கர் வீடியோவை பகிர்ந்து அதில் ‘Here’s Harshad Gothankar who chose i-m-POSSIBLE as his motto’ என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். ஹர்ஷத் கோதாங்கர் என்ற அந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தன் நண்பர்களுடன் கேரம் விளையாடினார், மற்றவர்கள் கையால் விளையாடும் போது அவர் மட்டும் காலால் விளையாடியது தான் வியப்பு.சாத்தியமற்றதற்கும் சாத்தியத்துக்குமான வித்தியாசம் ஒருவரது உறுதிப்பாட்டைப் பொறுத்தது என்கிறார் சச்சின் டெண்டுல்கர். மாற்றுத் திறனாளியின் இந்த அதிசயத் திறனை வியந்த சச்சின், சாத்தியமாகக் கூடியதை நோக்கிய அவரது முயற்சியை நேசிக்கிறேன். இதிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ளலாம் என சச்சின் பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த ட்விட்டர் பதிவை 12,400 பேர் லைக் செய்துள்ளனர். 
 • 39
Added article 
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி உள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். மேலும் சில செயலிகளிலும் ஆபாச படங்களை பதிவேற்றியதில் ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து அதுகுறித்தும் விசாரிக்கின்றனர்.ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ராஜ்குந்த்ரா அலுவலக ஊழியர்கள் 4 பேர் ‘அப்ரூவர்’ ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா? என்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆறு மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. ராஜ் குந்த்ராவை விசாரணைக்காக மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்பு புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு அதிகாரிகளால் ஏற்கெனவே ராஜ் குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டி வரவழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மும்பை  குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் தனக்கு தொடர்பு இல்லை என்று மறுத்து விட்டார். இந்த விசாரணையின்போது ராஜ்குந்த்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஷில்பா ஷெட்டி ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.போலீஸ் விசாரணையின்போது ஆபாசப் படங்கள் தயாரிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இல்லை என்று அழுத்தமாக நம்புவதாகக் கூறிய ஷில்பா ஷெட்டி, அது முழுக்க, முழுக்க லண்டனைச் சேர்ந்த நபரால் நிர்வகிக்கப்பட்ட செயலி என்றும் பண முதலீடு மட்டுமே ராஜ்குந்த்ரா தரப்பில் செய்யப்பட்டது என கூறி உள்ளார்.ஹாட்ஷாட்ஸ் செயலியில் பதிவேற்றப்படும் மாடல்களின் படங்கள் மற்றும் தங்களுடைய ஓடிடி படங்களில் நடிக்க வரும் மாடல்கள், நடிகைகளுக்கான கவர்ச்சி கட்டுப்பாடு தளர்வு தொடர்பாக ராஜ்குந்த்ரா நடத்தி வந்த வாட்ஸ் அப் குரூப்பில் கிடைத்த கடிதப் பரிவர்த்தனை நகலை ஷில்பா ஷெட்டியிடமும் ராஜ் குந்த்ராவிடமும் காட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.அந்த கடிதத்தில், ஓடிடி படங்களில் குறிப்பிட்ட நடிகையை வைத்து படம் எடுப்பதற்கு முன்பாக, அவரை பற்றிய குறிப்புகளை தயாரிப்பு நிறுவனமான தங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவரை இறுதி செய்வதில் ஹாட்ஷாட்ஸ் அணியின் முடிவே இறுதியானது. தேர்வாகும் நபர், சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படுபவராக இருக்க வேண்டும். துணிச்சலான காட்சிகளில் மேலாடையின்றியும், பின்புறம் நிர்வாணமாகவும் நடிக்கக் கூடியவராக அந்த நடிகை இருக்க வேண்டும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.ஷில்பா ஷெட்டி, இதுபோன்ற வரிகள் ஆபாசத்தை தூண்டக்கூடியவை கிடையாது என்றும் அவை முழுக்க, முழுக்க படத்தின் கதைக்கு தேவைப்படும் கவர்ச்சி மட்டுமே என்றும் இதை நீதிமன்றத்தில் உரிய வகையில் தங்களுடைய தரப்பு வாதிடும் என்றும் தெரிவித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.அவரது வாக்குமூலத்தை  பதிவு செய்த பின்னர், ஒரு மூத்த குற்றப்பிரிவு அதிகாரி, இந்த விஷயத்தில் நடிகைக்கு  இதுவரை எந்த தொடர்பும் இல்லை, மேலும் விசாரணை எதுவும் இருக்காது. இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டிக்கு எந்தப் பங்கும் இல்லை. இதுவரையில், இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டியின் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. எனவே நாங்கள் அவரை மீண்டும் விசாரிக்கப் போவதில்லை என்றார்.விசாரணையின் போது ஷில்பா ஷெட்டி உடைந்து கூச்சலிட்டார் என்றும், விசாரணையின் போது  உணர்ச்சிபூர்வமான ஷில்பா தனது கணவரிடம் இந்த விஷயம் குடும்பத்தை மோசமாக  சித்தரிப்பதாகவும், பல ஒப்புந்தங்கள் பாதிக்கப்பட்டு, என்னை நம்பி விளம்பர ஒப்பந்தம் செய்தவர்கள் கூட பின்வாங்கி விட்டனர் என  ஷில்பாஷெட்டி, ராஜ் குந்தராவை கடுமையாக திட்டினார். இந்த ஒரு சம்பவத்தால் இத்தனை ஆண்டுகளாக தான் சம்பாதித்த பேரும் புகழும்  பாதாளத்துக்கு சென்று விட்டதாகவும் அவர் கூறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 • 40
Added article 
முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் நடிப்பில் கடந்த 1972ஆம் ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று வரையிலும் ஒரு சிறந்த நகைச்சுவை படமாக இப்படம் திகழ்ந்து வருகிறது.தமிழில் சிறந்த காமெடி படம் என்றால் காசேதான் கடவுளடா படம் மட்டும்தான். இப்படத்திற்கு ஈடு வேறு எதுவும் இல்லை. இயக்குனர் கண்ணன் இப்படத்தை மீண்டும் ரீமேக் செய்ய உள்ளார். இதில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு நடிக்க உள்ளனர்.இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் நாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க உள்ளார். சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி மூலம் புகழ்பெற்ற சிவாங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்போது இப்படத்தில் மற்றொரு குக் வித் கோமாளி பிரபலமான புகழும் இணைந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.புகழ் மற்றும் சிவாங்கிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர்கள் இருவரின் காம்போ மிகவும் பிரபலமாகும். சிவாங்கி மற்றும் புகழ் இருவரும் தற்போது படங்களில் நடித்து வருகின்றனர். சிவாங்கி ஏற்கனவே சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் புகழும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் நடித்துள்ளார்.
 • 40
Added article 
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.பல சீரியல் நடிகைகளுக்கு சினிமா மீதான ஆசை முளைத்துள்ளது. முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு இலலேன்னா நடிகைகள் சீரியலுக்கு வருவார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படியே நேர்மாறாக இருக்கிறது. சீரியலில் இருந்து சினிமாவுக்கு போகிறார்கள் நம்ம சீரியல் நடிகைகள்.தமிழ், மலையாளம் என சீரியல்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை ரிந்தியாவுக்கும் சினிமாவுக்கு போக ஆசை போல. சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.மாடர்ன் உடை அணிந்து தனது தங்க உடலை மறைத்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் “சூட்டுல வீடே பத்திக்கும்” என்று வர்ணித்து வருகிறார்கள்.
 • 40
Added article 
கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள திரைப்படம் ஜோஸ்வா. இந்த படத்தை வருணின் மாமா ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ’யோகன் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டது. முழுக்க முழுக்க அமெரிக்காவில் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் உருவாக்க திட்டமிட்டிருந்த இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் சில நாட்கள் நடைபெற்ற நிலையில் திடீரென இந்த படம் டிராப் என அறிவிக்கப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இதே கதையை வருண் என்ற அறிமுக நடிகரின் நடிப்பில் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற பெயரில் கௌதம் மேனன் தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தினை ஓடிடியில் ரிலீஸ் செய்ய சில நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு வந்த போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்ன ஆனாலும் சரி இந்த படத்தை திரையரங்கில்தான் ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்து விட்டாராம். ஏனென்றால் இந்த படம் வருணுக்கு ஒரு அடையாளமாக அமையும் என எதிர்பார்க்கிறாராம்.
 • 39
Added article 
ரஜினி நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ள படத்தின் வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டினாலும் ரஜினியே போனில் அழைத்து பாராட்டியது கவனத்தை ஈர்த்தது.  அந்த உரையாடலில் ‘எனக்கும் ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க’ எனக் கூறியிருந்தார்.அண்ணாத்த படம் முடிந்த நிலையில் அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அடுத்த படத்தை இயக்க தேசிங்கு பெரியசாமி ஒப்பந்தம் ஆக, தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனம் ஒப்பந்தம் ஆகியது.  இதையடுத்து விறுவிறுவென திரைக்கதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டார் இயக்குனர். ஆனால் இப்போது படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  அதற்குக் காரணம் படத்தில் இடம்பெறும் ஒரு பிளாஷ்பேக் காட்சியை படமாக்க எக்கச்சக்கமாக செலவாகும் என தயாரிப்பு நிறுவனம் அஞ்சுகிறதாம்.ரஜினி சம்பளத்தோடு படத்தின் பட்ஜெட் எல்லாம் சேர்த்தால் 200 கோடிக்கு மேல் செல்ல அதை திரும்ப எடுக்க முடியுமா என்ற குழப்பத்தில் இருப்பதால் இப்போதைக்கு படத்தின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 
 • 38
Added a news 
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 98 லட்சத்து 80 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 1 கோடியே 95 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.ஜூலை மாத ஒதுக்கீடாக தமிழகத்துக்கு 71 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க முடிவு செய்தது. ஆனால் இதுவரை சுமார் 50 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே வழங்கி உள்ளது.இந்தநிலையில் புனேவில் இருந்து வந்த விமானத்தில் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக 34 பெட்டிகளில் 4 லட்சத்து 8 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் சென்னை வந்தன. விமான நிலையத்தில் இருந்து அவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் மத்திய தொகுப்பில் இருந்து ஜூலை மாத ஒதுக்கீட்டில் 54 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன.அதேநேரத்தில் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு இதுவரை 2 கோடியே 2 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன.
 • 105
Added a news 
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.47 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 19,53,18,895 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17 கோடியே 71 லட்சத்து 06 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 லட்சத்து 82 ஆயிரத்து 144 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,40,30,333 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 84,840 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 • 108
Added a news 
இன்று (27) காலை 6 மணி முதல் 3 மாவட்டங்களில் பல பகுதிகளில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.கொழும்பு, களுத்துறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 • 111
Added a news 
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கான அர்ப்பணிப்பான சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் திட்டமிடல் முகாமைத்துவ மேலதிக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் திலக் வீரகோன், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்திற்கு நேற்று (26) சந்தித்தார்.இதன்போது அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பீரங்கி படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் திலக் வீரகோன், ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள புதிய பாதுகாப்பு தலைமையக கட்டிடத் தொகுதியின் கட்டுமான பிரிவிலுள்ள தனக்கான உத்தியோகபூர்வ அலுவலகத்தை மீளக் கையளிக்கும் முன்பாக பல்வேறு நியமனங்களை வகித்துள்மை குறிப்பிடத்தக்கது.குறித்த சந்திப்பின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் திலக் வீரகோன் முன்ணுதாரமான சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, ஒய்வின் பின்னராக எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நியமனம் பெறுவதற்கு முன்பாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரி இராணுவம் மற்றும் இலங்கை பீரங்கி படைக்குள் பல முக்கிய நியமனங்களை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.அதனை அடுத்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரி தளபதியின் வழிகாட்டல்களுக்கும் பாராட்டுக்களுக்களுக்கு நன்றிகளை தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக இராணுவத் தளபதியிடமிருந்து கிடைக்கப்பபெற்ற ஊக்குவிப்பு தொடர்பிலும் நினைவு கூர்ந்தார்.
 • 111
GOOD MORNING.......
 • 108
Added a news 
பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு நியமிக்கப்படவுள்ள யாழ். மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதம் பின்வருமாறு,கௌரவ மஹிந்த ராஜபக்க்ஷபிரதமர்பிரதமர் அலுவலகம்கொழும்புமாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்மேற்குறித்த விடயம் தொடர்பில் உங்களது கவனத்திற்கு சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.எனக்கு அறிவிக்கப்பட்ட வகையில் மிக விரைவில், யாழ். மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவரை மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவியிக்கு நியமிக்கப்பட இருக்கிறார்.நீங்கள் அறிந்திருக்கின்ற பிரகாரம், யாழ். மாவட்டத்தில் 95% மானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர், மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தினை சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தினை சார்ந்தவர்களாவார்கள்.இந்த பின்னணியில் தமிழ் பேச தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராக யாழ். மாவட்டத்திற்கு நியமிப்பது பொருத்தமற்ற ஒரு விடயமாகும். மேலும் இது ஜனநாயக விரோதமான செயலாகும்.மாவட்டத்திலுள்ள உயர் பதவியில் இருக்கும் அரச உத்தியோகத்தர் தமிழ் பேசும் ஒருவராக இருக்கும் சந்தர்ப்பத்தில் தான் அவருடனான வாய்மூல மற்றும் எழுத்ததுமூல தொடர்பாடல்கள் பயனுள்ளதாக இருக்கும்.மேலும் தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய அரசியலமைப்பின் ஊடாக அதியுச்ச அதிகார பகிர்வினை வழங்க அரசாங்கம் முயற்சிகளை எடுக்கும் சந்தர்ப்பத்தில் இத்தகைய செயற்பாடுகள் எதிர்மறையான விளைவினையும் மக்களால் வரவேற்கப்பட முடியாத ஒன்றாகவுமே காணப்படுகின்றது.எனவே, அத்தகைய பிரேரணையை மீளாய்வு செய்து, மேற்குறித்த விடயங்களை கருத்திக்கொண்டு யாழ். மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராக அனுபவமும் செயற்திறனுமுள்ள தமிழ் பேசும் ஒரு அரச அதிகாரியை நியமிக்குமாறு நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.நன்றி இரா சம்பந்தன்பாராளுமன்ற உறுப்பினர் - திருகோணமலை மாவட்டம்தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு.
 • 168
Added a news 
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக டெல்லி எல்லைகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மத்திய அரசுடன் நடத்திய 10 சுற்று பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்கவில்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்றத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி கவர்னர் அனில் பைஜால் அனுமதி அளித்தார். இதன்படில் ஜந்தர் மந்தர் மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி டிராக்டரில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். 
 • 168
Added a news 
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றனர். இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் பிரதமர் மோடியை இருவரும் சந்தித்துப்பேசினர்.  இந்த சந்திப்பில் தமிழக அரசியல் சூழல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ அதிமுகவில் எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை. சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரம் செய்ததற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம்.  தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி தரக்கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தினோம். கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரினோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தினோம்” என்றார்.
 • 168
Added a news 
கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ம்  தேதி எடியூரப்பா நான்காவது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாரதீய ஜனதாவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால் அதில் இருந்து 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்-மந்திரி பதவியை பாரதீய ஜனதா மேலிடம் வழங்கியது. அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். எடியூரப்ப்பா முதல் மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்த நிலையில், முதல் மந்திரி பொறுப்பில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். 
 • 167
Added a news 
பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லைக்குட்பட்ட கார்கில் பகுதியை ஆக்கிரமித்ததால் 1999ல் இருநாடுகளுக்கிடையே போர் மூண்டது. இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற கார்கில் யுத்தத்தில் இந்தியா வெற்றிப்பெற்றதை தொடர்ந்து போர் முடிந்தது. போரில் இந்தியா வென்ற ஜூலை 26ம் தேதி கார்கில் நினைவு தினமாக கொண்டாடப்படுகிறது. 22 வது ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி லடாக்கின் த்ராஸ் பகுதியிலுள்ள நினைவுச் சின்னத்தில் கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த 559 வீரர்களை நினைவுகூறும் வகையில் 559 விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்நிகழ்வில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஸ்ரீநகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக ட்ராஸ் சென்றார். அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.கார்கில் வெற்றிவிழா அங்கு நடத்தப்படுகிறது. அதில் ராணுவ தளபதிகள், அதிகாரிகள், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக்கில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று மாலை அவர் ஸ்ரீநகர் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை மனோஜ் சின்கா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். நேற்று கவர்னர் மாளிகையில் தங்கினார். ஜனாதிபதி வருகையையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 • 165
Added a news 
தமிழறிஞா் புலவா் இரா. இளங்குமரனார் தனது 94வது வயதில் மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த இளங்குமரனார் தமிழாசிரியர், நூலாசிரியா், பதிப்பாசிரியா், தொகுப்பாசிரியா் மற்றும் இதழாசிரியா் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டவர். இளங்குமரனார் மறைவிற்கு, தமிழறிஞர்கள் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 • 168
Added article 
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி பெங்களூருவில் காலமானார்.  கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான யானைப் பாகன் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஜெயந்தி . இந்த படத்தை தொடர்ந்து நீர்குமிழி, பாமாவிஜயம், எதிர்நீச்சல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார. கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக கடந்த 1960-ல் வலம் வந்தார். இவர் இதுவரை சிறந்த நடிக்கைக்கான கன்னட அரசின் ஏழு விருதுகளை பெற்றுள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகியிருந்தார். 76 வயதாகும் ஜெயந்தி, ஆஸ்துமா பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை காலமானார்.இவரது மறைவுக்கு திரையுலகை சார்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வெள்ளி விழா படத்தில் வரும் காதோடுதான் நான் பாடுவேன் என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
 • 164
Added article 
கிரிக்கெட் வீரராக, கால்பந்து ஆட்டக்காரராக, நடிப்பு, பாக்ஸிங் என்று பல முகங்களைக் கொண்டவர் தான் பிரபல நடிகரான ஆர்யா.  ஒரு காலத்தில் ஜிம்மிற்கு 100 ரூபாய் கூட கட்ட முடியாத நிலையில் இருந்துள்ளார் ஆர்யா. பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்றே கூறலாம்.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக திகழ்ந்து வருகிறார். ஆக்சன் காமெடி என இரண்டு விதமான படைப்புகளுக்கும் பெஸ்ட் சாய்ஸ் ஆர்யா. கஜினிகாந்தின் கஜினியாகட்டும், டெடியின் சிவாவாகட்டும் படத்தின் கதாப்பாத்திரங்களோடு கச்சிதமாய் பொருந்தி விடுகிறார் ஆர்யா.நடிப்பு ஒரு பக்கம் என்றாலும் பிட்னஸ் மற்றும் சைக்கிளிங்கில் அதே போல ஈடுபாடு கொண்டவர் நடிகர் ஆர்யா. 1980ல் கேரளாவில் பிறந்த ஆர்யாவுக்கு வந்தவரை எல்லாம் வாழவைத்த சென்னை வாழ்வளிக்க மறக்கவில்லை. உள்ளம் கேட்குமே படத்தில் இயக்குனர் ஜீவாவால் அறிமுகம் செய்யப்பட்டாலும் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த அறிந்தும் அறியாமலும் தான் முதலில் ரிலீஸ் ஆனது. அந்த ஆண்டிற்கான சிறந்த அறிமுக நாயகன் என்கிற பதக்கம் வென்றார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் முதல்முறையாக படதயாரிப்பை துவங்கிய ஆர்யாவின் நிறுவனம் பல்வேறு வெற்றிகளை கண்டுள்ளது. நான் கடவுள், அவன் இவன் படங்களில் பாலாவுடன் பணியாற்றிய ஆர்யாவுக்கு பாலா மானசீக குருவாகவே மாறிவிட்டார்.ஆர்யா சென்னையில் திறந்த உணவக திறப்புவிழாவிற்கு வருகை தந்த இயக்குனர் பாலா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 2019-ல் உடன் நடித்த நடிகை சாயிஷாவை திருமணம் செய்த ஆர்யா இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் “சார்பட்டா பரம்பரை” படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கிறார்.ஆர்யா தற்போது டபுள் கொண்டாட்டத்தில் உள்ளார். ஒன்று சார்பட்டா மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது. மற்றொன்று  ஆர்யா மற்றும் சாயிஷா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
 • 165
Added article 
நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 19 வயதே நிரம்பிய யாஷிகா ஆனந்த் வயதிற்கு மீறிய கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். இவர் படங்களை விட விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமே மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே யாஷிகா ஆனந்த் தான் இளம்வயது போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஒரு சில புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ள யாஷிகா ஆனந்த் தற்போது எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  இவர்   தனது நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் பயணம் செய்திருக்கிறார். மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்றபோது அந்த கார் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார்.யாஷிகாவின் தோழி, வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு ஆண் நண்பர்கள் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் யாஷிகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
 • 167
Added article 
தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் 43 படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்டத்திற்காக காத்திருக்கிறேன் என கூறியிருந்தார்.ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். மலையாளம் மட்டுமில்லாமல், கன்னடம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.சமீபத்தில் மாடர்ன் டிரஸ் அணிந்து கொண்டு, முதுகுபுரம் தெரிய அங்கங்கள் அனைத்தையும் மறைத்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஏடாகூடமாக வர்ணித்து வருகிறார்கள்.
 • 168