Ads
 ·   ·  2 recipes
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

மசால் வடை எப்படி செய்வது?

மசால் வடை செய்ய தேவையான‌ பொருட்கள்

கடலைப்பருப்பு 1/4 கிலோ

பெரிய வெங்காயம் 3 (நறுக்கியது)

பச்சை மிளகாய் நறுக்கியது சிறிதளவு....

இஞ்சி சிறிதளவு..

பூண்டு 4-5 பல் (நறுக்கியது)

சோம்பு - ஒரு தேக்கரண்டி

கொத்துமல்லி சிறிது

கறிவேப்பிலை ஒரு கொத்து

உப்பு - தேவையான அளவு

கடலைப் பருப்பை சுமார் இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து சுத்தம் செய்து நீரை வடித்து உப்பு சேர்த்து நறநறவென்று அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை மெலிதாய் நீளமாகவும், பச்சைமிளகைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும். சோம்புத் தூள் செய்யவும். நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் மாவினை பிசைந்து கொள்ளவும்.

மாவை எலுமிச்சம் அளவு சிறு சிறு உருண்டைகளாகச் பிரித்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு உருண்டையை எடுத்து கையினால் தட்டி / அழுத்தி பொரிய‌ விடவும்.

ஒரு பக்கம் சிவந்தபின் வடையினை திருப்பி விட்டு மறுபக்கமும் சிவப்பு நிறமாக‌ வரும்வரை பொரிக்கவும். பின்னர் வடையினை எடுத்து எண்ணையை வடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். சூடான‌ மொறுமொறு மாசால் வடை ரெடி !!!

  • 1048
  • More
Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads