- · 5 friends
-
I
குல்பி
உளுந்தில் அதிகப்படியான மருத்துவ நலன்கள் உள்ளது. உளுந்தங்கஞ்சி, உளுந்தம்பால், உளுந்தங்களி என உளுந்து வைத்து பல வகையான உணவு முறைகள் செய்திருந்தாலும் உளுந்து வைத்து ஐஸ்கிரீம் என்பது புதுவிதமாக உள்ளது. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக உளுந்து ஐஸ்கிரீம் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
முதலில் இந்த உளுந்து ஐஸ்கிரீம் செய்வதற்கு அரைக்கப் உளுந்தம் பருப்பை மிதமான தீயில் நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொன்னிறமாக வறுத்த இந்த உளுந்தம் பருப்பை குளிர்ந்த நீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து உளுந்தை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்கு மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த உளுந்த மாவை ஒரு அகலமான கடாயில் சேர்த்துக் கொள்ளவும்.
கடாயில் மாவுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் நன்கு கலந்து கொடுக்க வேண்டும். பத்து நிமிடத்தில் உளுந்த மாவு நன்கு வெந்து தண்ணீர் வற்றி அல்வா பதத்திற்கு வந்து விடும். அந்த நேரத்தில் அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள், முக்கால் கப் நாட்டு சக்கரை சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.
சர்க்கரை நன்கு கரைந்து உளுந்து மாவுடன் ஒன்றாக இணைய வேண்டும். சர்க்கரை மாவுடன் நன்கு கலந்ததும் பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம்களை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு பத்து முதல் 15 நிமிடங்கள் நன்கு ஆறியதும் நம் வீட்டில் ஐஸ் கிரீம் செய்யும் மோல்டு இருந்தால் அதில் இதை ஊற்றி வைத்து நடுவில் ஒரு குச்சியை வைத்து இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து விடவும். ஐஸ்கிரீம் மோல்டு இல்லாத பட்சத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி நடுவில் ஒரு ஐஸ்கிரீம் குச்சியை வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம். பிரிட்ஜில் குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம் இருக்கும் பொழுது நன்கு கெட்டியாக மாறிவிடும்.
அதன் பின் நாம் வெளியே எடுத்துப் பார்த்தால் சுவையான உளுந்து ஐஸ்கிரீம் தயார். உளுந்து எனக்கு பிடிக்காது என சொல்லும் குழந்தைகள் கூட இந்த ஐஸ்கிரீமை மிக விரும்பி சாப்பிடுவார்கள்....