Ads
 ·   ·  39 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

தேங்காய் அல்வா

ஒரு கப் தேங்காயை அதன் பின்பகுதி உள்ள தோள்களை நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு ஏலக்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதிலிருந்து ஒருமுறை பால் பிழிந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தனியாக ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி கான்பிளார் மாவு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் விடாத வண்ணம் கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கரைத்து வைத்திருக்கும் கார்ன்ஃப்ளார் மாவு கலவையை தேங்காய் பாலுடன் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் பால், கான்பிளார் மாவு கரைசல் இரண்டும் ஒரு சேர வரும்படி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு அடி கனமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ஐந்து முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக கரைத்து வைத்திருக்கும் மாவு கலவையை அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த கலவையை ஐந்து முதல் பத்து நிமிடம் கைவிடாமல் தொடர்ந்து கிளற வேண்டும். பத்து நிமிடங்களில் நன்கு வெந்துவிடும். இந்த நேரத்தில் கூடுதலாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து மீண்டும் கிளர வேண்டும்.

இப்பொழுது மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் கழித்து ஒரு கப் சர்க்கரை சேர்த்து மீண்டும் கிளர வேண்டும். இப்பொழுது மாவு அல்வா பதத்திற்கு கடாயில் ஒட்டாமல் நன்கு உருண்டு திரண்டு வரும். இறுதியாக அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான தேங்காய் அல்வா தயார். இந்த தேங்காய் அல்வா சுவையானதாக மட்டுமல்லாமல் சத்து நிறைந்ததாக இருப்பதால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடலாம்.

  • 1957
  • More
Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads