-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 1.5.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். சிந்தனையின் போக்கில் தெளிவு ஏற்படும். புதிய செயல்களில் கவனம் வேண்டும். எதிர்ப்புகளால் இருந்துவந்த தாமதம் விலகும். திடீர் வரவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவரைப் பற்றிய புரிதல் உண்டாகும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
ரிஷபம்
மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
மிதுனம்
சூழ்நிலை அறிந்த கருத்துக்களை வெளிப்படுத்தவும். சிந்தனைகளில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். வரவுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தம்பதிகளுக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வேலையாட்களால் அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் பொறுமை வேண்டும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கடகம்
நினைத்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாகனம் சார்ந்த பயணத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது குறைத்துக் கொள்ளவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
மனதளவில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். சுப காரியங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கன்னி
சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். காரிய தடைகளை வெற்றி கொள்வீர்கள். பத்திரிக்கை துறையில் சாதகமான சூழல் அமையும். புதுவிதமான அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
துலாம்
மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விருச்சிகம்
பலதரப்பட்ட சிந்தனைகளால் மன அமைதி குறையும். காப்பீடு துறைகளில் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் அலைச்சலும், மாற்றமும் பிறக்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் சிந்தித்து செயல்படவும். செயல்பாடுகளில் சிறு சிறு தாமதங்கள் உண்டாகும். அஞ்ஞான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். விலை உயர்ந்த பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் கவனம் வேண்டும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் சில உதவிகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மகரம்
எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக எண்ணிய எண்ணம் நிறைவேறும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
வரவுக்கு ஏற்ப செலவுகளும் இருக்கும். அரசுவழி செயல்களில் பொறுமை வேண்டும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணங்கள் உண்டாகும். இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை
மீனம்
நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். திருப்பணி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செயல்படவும். குடும்ப பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வித்தியாசமான கற்பனைகள் மனதில் மேம்படும். குழப்பம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·