-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 29.4.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றம் உண்டாகும். உழைப்புக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். முகத்தில் தெளிவு ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
ரிஷபம்
சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். உறவுகள் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகளில் தாமதம் ஏற்படும். சமூகம் சார்ந்த பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். புரிதல் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
பாகப்பிரிவினை விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சிறு மற்றும் குறுந்தொழிலில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளுடன் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். கலை செயல்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சில செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். பழக்கவழக்கங்களால் மாற்றமான சூழல் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கடகம்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரம் சார்ந்த பொருட்சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். நண்பர்களின் வருகை தெளிவை ஏற்படுத்தும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வரவுகள் தேவைக்கு போதுமானதாக இருக்கும். சுபகாரியங்களில் இருந்துவந்த மந்தநிலை விலகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
சிம்மம்
நண்பர்கள் ஆதரவாக பேசுவார்கள். சமூகம் சார்ந்த பணிகளில் மரியாதை உயரும். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். பெரியோர்களின் சந்திப்பால் மனமாற்றம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அலுவலகத்தில் சில நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் கிடைக்கும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கன்னி
மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பம் உண்டாகும். உறவுகளின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் விமர்சனங்கள் தோன்றி மறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
துலாம்
மனதளவில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை கொள்வதை தவிர்க்கவும். வரவேண்டிய சில வரவுகள் தாமதமாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விருச்சிகம்
வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். தைரியமான செயல்பாடுகளின் மூலம் பொறுப்பு உண்டாகும். கடினமான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்களின் வகையில் உதவி கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். நண்பர்கள் மத்தியில் மதிப்புகள் உயரும். அரசு பணிகளில் அனுகூலம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகள் பிறக்கும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மகரம்
திட்டமிட்ட காரியம் நிறைவேறும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் உண்டாகும். மறைமுகமான தடைகளை அறிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆடம்பரம் சார்ந்த செலவுகளை குறைப்பீர்கள். அலுவலகத்தில் பொறுப்பு மேம்படும். கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
பெரியோர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். அலுவலகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
மீனம்
உயர் அதிகாரிகளின் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். செல்வசேர்க்கை குறித்த எண்ணங்கள் உண்டாகும். நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சிறு மற்றும் குறு தொழில் குறித்த எண்ணங்கள் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·