Category:
Created:
Updated:
இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் இடம்பெற்ற கும்பமேளா மாபெரும் திருவிழாவின் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மகா கும்பமேளா நடக்கும் பகுதியில் அதிகாலை கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதும் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.