மன்மோகன் சிங்குக்கு அரசு மரியாயதையுடன் இறுதி அஞ்சலி
இரண்டு முறை பிரதமராக இருந்தவரும், பொருளாதார தாராள மயமாக்கலின் சிற்பியுமான மன்மோகன் சிங்கின் இறுதி சடங்குகள் சனிக்கிழமை முழு அரசு மரியாதையுடன் தில்லியில் நடைபெற்றன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினர்.
மூத்த தலைவருக்கு தனி இடம் ஒதுக்குமாறு காங்கிரஸ் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பேசினார், சிங்கின் இறுதி சடங்குகளை அவருக்கு நினைவுச்சின்னம் கட்டக்கூடிய இடத்தில் நடத்துமாறு கேட்டுக்கொண்டார். ஒரு நினைவிடத்திற்கான இடத்தை ஒதுக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இறுதிச் சடங்கு சம்பிரதாயங்களை இடைக்காலத்தில் முடிக்க முடியும் என்று பரிந்துரைத்தது.