நடிகர் செந்தாமரையோடு நடிக்க மறுத்த நடிகை
நடிகர் செந்தாமரையின் மனைவி நடிகை கௌசல்யா சமீபத்தில் அவருடைய காதல் திருமண வாழ்க்கையை குறித்து பல தகவல்களை கூறியிருக்கிறார். நடிகர் செந்தாமரை பார்ப்பதற்கு ரவுடி போல இருக்கிறார் என்று அவரோடு நடிப்பதற்கு சம்மதிக்காமல் இருந்த எம் ஜி ஆர் பட நடிகை பிறகு செந்தாமரையை திருமணம் செய்வதற்காக பல முயற்சிகளை செய்தாராம்.
மிரட்டும் வில்லன்:
எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் ஒரு நாடக கலைஞராக இருந்த நடிகர் செந்தாமரை பிறகு திரைப்படங்களில் அறிமுகம் ஆகி அவருடைய கம்பீரமான குரல் வளத்தாலும், உடல்மொழியாலும் பலரையும் கண்களாலே மிரட்டி இருப்பார். அவரை இப்போது பார்த்தாலும் மனதிற்குள் டக்கென்று வில்லன் என்று அவர் மீது கோபம் வர தான் செய்கிறது. அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் தத்ரூபத்தை காட்டியிருக்கும் செந்தாமரை வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான கதைகளை அவருடைய மனைவி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
காதல் மனைவி:
நடிகர் செந்தாமரையின் மனைவி கௌசல்யாவும் ஒரு நாடக கலைஞராக இருந்து, பிறகு திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து தற்போது பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் வில்லி பாட்டியாக நடித்து பிரபலம் ஆகி இருந்தார். ஜீ தமிழில் அவருக்கு அவார்ட் கிடைத்திருந்தது.
நடிப்பதற்கு மறுப்பு:
இந்த நிலையில் நடிகர் செந்தாமரை தன்னுடைய 57வது வயதில் மாரடைப்பு காரணமாக நடித்துக் கொண்டிருக்கும் போது மரணம் அடைந்தார். அவருடைய மனைவி கௌசல்யா செந்தாமரையின் மறைவிற்குப் பிறகு தங்களுடைய காதல் கதை குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் நடிகர் செந்தாமரை ஆரம்பத்தில் கலைஞர் நாடக கம்பெனியில் இருந்திருக்கிறார். அவரிடம் இருந்து லெட்டர் வாங்கிக் கொண்டு எம்ஜிஆர் நாடக கம்பெனிக்கு வந்திருக்கிறார். அப்போது செந்தாமரையோடு நடிக்க நடிகை விஜய சகுந்தலாவிடம் கூறி இருக்கின்றனர். ஆனால் விஜய சகுந்தலா நான் இவருடன் நடிக்க மாட்டேன். பார்ப்பதற்கு ரவுடி போல இருக்கிறார் என்று மறுத்துவிட்டாராம்.
திருமணம் செய்ய முயற்சி:
பிறகு எம்ஜிஆர் தான் அந்த நடிகை விஜய சகுந்தலாவை சமாதானம் செய்தாராம். செந்தாமரை எங்கிருந்து வந்திருக்கிறார் தெரியுமா? கலைஞர் கடிதம் எல்லாம் கொடுத்து இருக்கிறார். அதனால் பயப்பட வேண்டாம் என்று சொன்னாராம். அதற்கு பிறகு தான் இருவரும் ஒரே படத்தில் நடித்து முடித்து இருந்தார்களாம். அதற்குப் பிறகு கௌசல்யாவை செந்தாமரை திருமணம் செய்வதற்கு முன்பு விஜய சகுந்தலா திருமணம் செய்வதற்காக முயற்சிகள் செய்தாராம். சில ஆட்களை வைத்து செந்தாமரையிடம் பேசி பார்த்தார்களாம். ஆனால் செந்தாமரைக்கும் நடிகை கௌசல்யாவிற்கும் வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் நடந்திருக்கிறது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva