Ads
வல்லிபுரமாயவனின் இன்றைய வீதி உலா
வல்லிபுரமாயவனின் இன்றைய வீதி உலாவின்போது
Empty
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவிர்தன். இவர், 'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவர் மனைவி சாந்தி, கடந்த 2021-ம் ஆண்டு கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை காதலித்து வந்தார். இருவீட்டு சம்மதத்துடன் புதுச்சேரியில் இவர்கள் திருமணம் சமீபத்தில் நடந்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. நிமிஷாவின் சொந்த ஊரான வயநாட்டில் கடந்த 18-ம் தேதி திருமண வரவேற்பு நடைபெற்றது. இதற்கிடையே ஹம்சவிர்தன், தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றி இருக்கிறார்.
- 31
உண்மை, பொய் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஐக்கிய இராச்சிய முதலீட்டாளரின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையொன்று இன்று முற்றிலுமாக மூடப்பட்டு 2000 பேர் வீதிக்கு வந்துள்ளனர். 2028 முதல் கடனை அடைக்க தற்போது 5% பொருளாதார வளர்ச்சி விகிதம் எமக்கு தேவையாக காணப்படுகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் போது இந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைவது சாத்தியமில்லை.200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, அதை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கு மிரட்டல் விடுத்தவர்களும் இருந்தனர். இத்தகைய சூழ்நிலையில், நாம் 5% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை கொண்டு வர வேண்டும். அவ்வாறு இல்லையெனில், 2028 முதல் நமது கடன்களை மீளச் செலுத்த முடியாமல் மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவோம். இது நடந்தால், நாடு பொருளாதார சுனாமிக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
- 51
1893-ஆம் ஆண்டு அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் இந்துமதம் பற்றிச் சொற்பொழிவுகள் செய்தார். அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். அப்போது அவர் பிரபலமாகவில்லை. அந்த நிலையில் ஒரு சமயம் விவேகானந்தர் ஓர் ஊரில் தங்கினார். அவரை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அவர் அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் இவ்விதம் கூறியிருக்கிறார்: நம்புவதற்கே உங்களுக்குக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் மூன்று நாள்கள் இரவும் பகலும் எனக்கு ஒரு விநாடிகூட ஓய்வே கிடைக்கவில்லை. தூக்கம், உணவு எவையும் அறவே எனக்கு இல்லாமற் போய்விட்டன. யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். நானும் அவர்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன். மூன்றாம் நாள் இரவு வந்தது. அநேகமாக எல்லோரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். நான் மட்டும் தனியாக இருந்தேன். அப்போது தாழ்ந்த சாதியைச் சேர்ந்த, செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவன் என்னிடம் வந்தான்.அவன் என்னிடம், சுவாமிஜி! நீங்கள் மூன்று நாள்களாக உணவு, தூக்கம் எதுவுமே இல்லாமல் பேசிக்கொண்டிருந்ததை நான் கவனித்தேன். அதனால் என் மனம் வேதனையில் துடிக்கிறது. பசியும் களைப்பும் உங்களுக்கும் இருக்கத்தானே செய்யும்! மூன்று நாள்களாக ஒரு டம்ளர் தண்ணீர்கூட நீங்கள் குடிக்கவில்லையே! என்று பரிவுடன் கூறினான். அவனது அன்பு என் மனத்தை நெகிழச் செய்தது. நான் அவனிடம், சாப்பிடுவதற்கு நீ எனக்கு ஏதாவது தருகிறாயா? என்று கேட்டேன். அதற்கு அவன், நீங்கள் சாப்பிடுவதற்கு ஏதாவது தர வேண்டும் என்றுதான் என் மனம் ஏங்குகிறது. ஆனால் என்ன செய்வேன்? நான் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன்; சக்கிலியன். நான் சப்பாத்தி செய்து உங்களுக்குத் தர முடியாது. கோதுமை மாவும் மற்ற பொருள்களும் நான் உங்களுக்குக் கொண்டுவந்து தருகிறேன். நீங்களே சமைத்துச் சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டான். நான் அவனிடம், பரவாயில்லை. நீயே சமையல் செய்துகொண்டு வா. நான் சாப்பிடுகிறேன் என்றேன். இவ்விதம் நான் கூறியதைக் கேட்டு அவன் நடுங்கிவிட்டான்.காரணம், சக்கிலியனான அவன் ஒரு துறவிக்கு உணவளித்தது மற்றவர்களுக்குத் தெரிந்தால் தண்டிக்கப்படுவான். ஏன், நாடு கடத்தவும் செய்வார்கள். ஆனால் நான் அவனைச் சமாதானப்படுத்தி, உனக்குத் தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்தேன். அவன் எனது உறுதியை அவ்வளவாக நம்பவில்லை. இருந்தாலும் அவனுக்கு என்மீதிருந்த அன்பு காரணமாகச் சப்பாத்தி செய்து கொண்டு வந்தான். அதை நானும் சாப்பிட்டேன். தேவர்களுக்குத் தலைவனான தேவேந்திரன் ஒரு தங்கக்குவளையில் தேவாமிர்தத்தை எனக்குத் தந்திருந்தால் – அதுகூட அப்போது அவ்வளவு ருசியாக இருந்திருக்காது என்றே எனக்குத் தோன்றியது. என் இதயம் அன்பாலும் நன்றியாலும் நிறைந்தது. என் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. இதற்கிடையில், விவேகானந்தர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவன் கொடுத்த உணவைச் சாப்பிடுவதைப் பார்த்த உயர் சாதியினர் சிலர் கோபம் கொண்டார்கள். அதை அவர்கள் விவேகானந்தரிடமே தெரிவித்தார்கள். அவர்கள் கூறியதைப் பொறுமையாகக் கேட்டார் விவேகானந்தர். பிறகு அவர்களைப் பார்த்துக் கூறினார்: நீங்கள் என்னை மூன்று நாள்கள் தொடர்ந்து பேச வைத்தீர்கள்!இடையில் நான் ஏதாவது சாப்பிட்டேனா, ஓய்வெடுத்தேனா என்று ஒருமுறைகூட நீங்கள் யாரும் கவலைப்படவில்லை. நீங்கள் பெரிய மனிதர்கள், உயர்ந்த சாதியினர்! ஆனால் இங்கே பாருங்கள், தனக்குத் தண்டனை கிடைக்கும்! என்று தெரிந்திருந்தும், மனிதநேயம் என்ற ஒரே காரணத்தால் அவன் எனக்கு உணவு தந்தான். அவனைத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் என்று நீங்கள் ஒதுக்குகிறீர்களே! இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சில நாட்களில் விவேகானந்தருக்கு கேத்ரி மன்னருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அப்போது விவேகானந்தர், செருப்பு தைக்கும் தொழிலாளி தனக்கு உதவியதைப் பற்றி மன்னரிடம் தெரிவித்தார். எனவே மன்னர், உடனடியாகச் செருப்பு தைக்கும் தொழிலாளியைத் தன் அரண்மனைக்கு வரவழைத்தார். தொழிலாளி, என்னை மன்னர் அழைத்திருக்கிறாரே! என் தவறுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ! என்று பயந்துகொண்டே வந்தான். ஆனால் கேத்ரி மன்னர் அவனுடைய பயத்தைப் போக்கியதுடன், அவனுடைய செயலைப் புகழ்ந்து பாராட்டினார். மேலும் அரசர் அவனுக்குப் பொன்னும் பொருளும் தாராளமாகக் கொடுத்தனுப்பினார்.
- 74
“மழைல நனைஞ்சு நனைஞ்சு சுரேஷ் நினைக்கிறார், இப்பவே 6 ஆகுது..மதியம் சாப்பிட வேற செய்யல! பசிக்குது! ... கடைசி பார்சல் இருக்குது சாப்பிட்டுவிட்டு நாளை போய் கொடுக்கலாமா? அல்லது இப்போ கொடுத்து முடிக்கலாமா ? என்று.ரவி மாமாவுக்கு.இதயமருந்து வேற. டெய்லி எடுத்தா தான் அவருக்கு முடியும்னு சொன்னாங்க.மருந்து இல்லை என்றால் ஆபத்துன்னு கூட சொன்னாங்க.சரி... இந்த ஒரு டெலிவரி முடிச்சா தான் நிம்மதியா தூங்க முடியும்னு தோணுது.”(வீட்டுக்குப் போறாரு – கதவைத் தட்டுறாரு)“மாமா... கூரியர் … கதவ திறங்க!”(ஒரு நிமிஷம் கழியிது)(மறுபடி)“மாமா... மருந்து பாக்ஸு கொண்டு வந்தாச்சு மாமா...”(மூணு நிமிஷம் கழிச்சும் இன்னும் பதிலே இல்ல)“ஏதோ சரியில்லை போல இருக்கு…”(ஜன்னல வழியா உள்ளே பார்க்க)“ஒளி இருக்கே... ஆனா... ஒரு சத்தம்கூட இல்ல. நிழலும் தெரியலை...” மாமா மதியம் மட்டும் தானே தூங்குவாரு! சரியில்லை என்று எண்ணி..(அயலவரிடமே போய்ப் பேசுறாரு)“அம்மா, ரவி மாமா உள்ளே இருக்குற மாதிரி தான் இருக்கு. ஆனா கதவ திறக்கல. மூணு முறை தட்டினேன். பதிலை இல்ல…”(அயல்வீட்டு பாட்டி)“ஐயையோ... நானும் அவர இரண்டு நாளா வீட்டில இருந்து வெளிய வந்தத பார்கல ப.. நானும் வறேன். என்ன என்று பார்க்கலாம் ...அனைவரும் குரல் கொடுத்தும் பலனில்லை!அவங்க போலீஸுக்கும் ஆம்புலன்ஸுக்கும் கூப்பிட்டாங்க.சுரேஷ் கூடவே பயத்தோட, பதற்றத்தோட கதவு முன்பே நின்னான்.கதவுத் தட்டும் கையால இப்போ உள்ளே நுழைய போறான்.கதவு உடைக்கப்படுது...அந்த நொடி...வீட்டுக்குள்ள – அமைதி...ஒரு சத்தமும் இல்லாத அமைதி...தரையில ரவி மாமா சாய்ந்தே கிடந்தார்.கண்ணை மூடாம விழிச்ச மாதிரி. ஆனா அந்த விழிப்புல உயிர் இல்ல.(சுரேஷ் மெதுவா நடக்கிறான், அதிர்ச்சியோட சொல்லுறான்)“மாமா... மாமா! என்னங்க இது? இப்படி...”மாமாவால பேசவே முடியல. கையை அசைக்க கூட முடியல. மூச்சே மெதுவா தான் இருக்கு... உயிர் உள்ளதா இல்லையா என்பதையே புரிஞ்சுக்க முடியலை.கண்ணில் ஒரு கேள்வி மட்டும் தெரிஞ்சுது...“யாராவது வருவாங்களா?”(சுரேஷ், மெல்ல கீழே விழுந்துகிட்டு அழுகிற மாதிரி கவலை கொண்டார்)“ஒரே ஒரு கதவுதான்... அது திறக்காம நின்னதால இப்படி ஒரு நிலைமையா என்று...”(அடுத்த நாள், மருத்துவமனையில்... ரவி மாமா சிரிக்கிற மாதிரி, மெதுவா சொல்லுறாங்க)“அய்யா... நீ கதைவை தட்டிட்டு அப்படியே போயிருந்தா?நான் உயிர் பிளைத்திருப்பேனா ?நன்றிகள் கோடி உனக்கு என்று கையில் முத்தம் கொடுத்தார் ரவி மாமா!ஒரு கதவைத்தட்டியதால ஒரு உயிர் பிழைத்தது.நம்மால ஒரு நிமிஷம் நேரம் பொருக்க முடியாம போயிருச்சுனா, இன்னொரு உயிர் போயிருக்கும்னு யோசிக்கணும்.சில நேரம்...ஒரு சின்ன தட்டுதல் தான் — ஒரே பெரிய உதவி ஆகிடும்,உண்மைதானே?
- 81
மறந்துவிட நினைப்பதை மறக்கமுடியாமல் தவிப்பதும்மறக்காமல் இருக்க வேண்டியது பலவற்றை மறந்து போவதும் மனித இயல்பு.
- 86
ஆன்மீகம் குறித்து ஒருவனுக்கு சந்தேகம் வந்தது. யாரிடம் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம் எனக் குழம்பிக் கொண்டிருந்தவன் மூளைக்குள் விவேகானந்தர் பளிச்சிட்டார்.உடனே விவேகானந்தரை தேடிச்சென்று வணங்கி கேட்டான்,'சாமி எனக்கு ஆன்மீகத்தில் ஒரு பெரிய சந்தேகம் இருக்கிறது.போன வாரம் எங்கள் கிராமத்திற்கு வந்திருந்த ஆன்மீக பெரியவர் ஒருவர் சொற்பொழிவாற்றும் போது ஒரு மனிதன் சதாகாலமும் இறைவனை நினைக்கவில்லை என்றால் அவன் பிறப்பெடுத்ததில் பயனில்லை எனச் சொன்னார்.அடுத்த நாள் வந்திருந்த ஒரு இலக்கிய பேச்சாளர் பேசும்பொழுது மனிதன் பூமியில் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் போனால் அவன் பிறப்பெடுத்ததில் பயனில்லை எனச் சொன்னார்.இதில் எது சரி என எனக்குத் தெரியவில்லை.நான் சதாகாலமும் இறைவனை நினைப்பதா? அல்லது என்னுடைய கடமைகளை மட்டும் செய்வதா?எனக்கு விளக்கம் தாருங்கள் சுவாமி'சற்று நேரம் அவனை உற்றுப் பார்த்த சுவாமி விவேகானந்தர் அவனிடம் கேட்டார்,'நான் உனக்கு ஒரு கதை சொல்லி அதன் முடிவில் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்கிறாயா?'வந்தவன் சொல்கிறேன் என்பது போல் தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தான்.விவேகானந்தர் கதை சொல்ல ஆரம்பித்தார்.'ஒரு விவசாய இடம் இரண்டு பேர் வேலை கேட்டு வருகிறார்கள்.அவர்களில் ஒருவன் எந்த வேலையும் செய்யாமல் விவசாயின் காலடியில் அமர்ந்து அவரை புகழ்ந்து துதி பாடிக் கொண்டு பொழுதை கழிக்கிறான்.இன்னொருவன் விவசாயியை கண்டு கொள்ளாமல் கலப்பையை எடுத்துக்கொண்டு நிலத்தில் இறங்கி நிலத்தை உழுது, களை எடுத்து, பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி மடையை அடைத்து வேலை முடித்து திரும்புகிறான்.இருவரில் வந்த விவசாயி மாலையில் யாருக்கு சம்பளம் தருவான்?'சந்தேகம் கேட்டு வந்தவன் பளிச்சென சொன்னான்,'நிலத்தில் இறங்கி யார் வேலை செய்தாரோ அவருக்கு தான் சம்பளம் தருவார்'விவேகானந்தர் பதில் கேள்வி கேட்டார்,'ஏன்..?'வந்தவன் தயக்கத்தோடு பணிவாகச் சொன்னான்,'என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்களே ஏன்னு என்கிட்ட கேட்கலாமா? அந்த விவசாயி வேலைக்கு ஆள் வச்சதே விவசாயத்தை பார்த்துக் கொள்ளத்தானே.அப்படி இருக்கும்போது வந்த வேலையை விட்டுவிட்டு வெறுமனே விவசாயியை புகழ்ந்து பாடினால் விவசாயிக்கு என்ன லாபம்?அவருடைய நோக்கம் நிறைவேறவில்லையே..!அதனால் வயக்காட்டில் இறங்கி வேலை பார்த்தவருக்கு தான் சம்பளம் கிடைக்கும்'விவேகானந்தர் புன்னகைத்தை படி சொன்னார்,'நீ சொன்ன பதிலிலேயே உன் கேள்விக்கான விடையும் இருக்கிறது.இறைவன் உன்னை பூமிக்கு அனுப்பியதே உன்னுடைய உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், பூமியில் உள்ள மக்களுக்கும், இன்ன பிற உயிர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதற்காகத் தான்.என்ன நோக்கத்திற்காக அவர் உன்னை அனுப்பினாரோ அதை நிறைவேற்றாமல் வெறுமனே இறைவனை நினைத்துக் கொண்டும், புகழ்ந்து பாடிக்கொண்டும் இருந்தால் இறைவனுடைய அருள் பார்வை உனக்கு எப்படி கிடைக்கும்?எங்கிருந்து வந்தோமோ அங்கேயே தான் போகப் போகிறோம்.பிரபஞ்ச கால அளவை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பூமியில் நம்முடைய மனித ஆயுட்காலம் சொற்பத்திலும் சொற்ப அளவே.அதனால் நீ உன்னுடைய கடமைகளை செய்வதுதான் . இடையில் நேரம் கிடைக்கும் பொழுது இறைவனை நினைத்தால் போதுமானது.அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் நீ செய்கின்ற கடமைகளிலும் நிறைந்து இருக்கிறான். அதனால் நீ கடமையை செய்தாலும் இறைவனுக்கான சேவையை தான் செய்து கொண்டிருக்கிறாய்.உன்னுடைய கடமைகளை மட்டும் செய்ய பார்'வந்தவன் தெளிவடைந்தான். விவேகானந்தரிடம் பணிவாக கேட்டான்,'அப்படியானால் சதாகாலமும் இறைவனை நினைத்துக் கொண்டிருப்பதால் எந்த புண்ணியமும் கிடையாதா?'விவேகானந்தர் சொன்னார்,'கண்டிப்பாக உண்டு. ஆனால் மனிதப் பிறவியில் செய்ய விட்ட கடமைகளை மறு பிறவிகளில் பல்வேறு உயிரினங்களாக பிறந்து அந்த கடமைகளை எல்லாம் தீர்க்க வேண்டி வரும்.இறைவனை சென்றடைய நேர்வழி இருக்கும் பொழுது சுற்று வழியில் செல்ல உனக்கு விருப்பமா?'வந்தவன் வணங்கி விடைபெற்று விவேகானந்தரிடம் சொன்னான்,'நான் மட்டுமல்ல; இனி என் பரம்பரையே கடமையை செய்து முடித்து இறைவனை சென்றடைய நேர்வழியிலேயே நடப்போம்'
- 96
படித்ததில் பிடித்தது......பூமியில் ஒருவரின் வாழ்க்கை நேற்று, இன்று, நாளை என்ற மூன்று பகுதிகளுக்குள்ளையே அடங்கி விடும்.நேற்றைய தோல்வி இன்று வெற்றியாகவே மாறலாம். நாளைய பொழுதில் அந்த வெற்றி நினைத்தும் நிற்கலாம், திசை மாறியும் போகலாம்.ஆகவே, நேற்றைய சூழ்நிலையை வைத்து இன்றைய தினத்தை தீர்மானித்து விடாதே, நாளைய தினம் உனக்கு ஏற்ற போலவே மாறலாம்.இதனால், வாழ்க்கை என்பது ஒருமுறை தான். அதை நீ மற்றவர்கள் ஏதும் நினைப்பார்கள் என்று நினைத்து அவர்களுக்காக மட்டும் வாழ்ந்து விடாமல், நீ நீயாகவே வாழ்ந்து பார்..... மகிழ்ச்சி உன் பக்கம் நிலைத்து நிற்கும்.
- 102
மாநகர சபையால் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் சேகரித்த கழிவுப் பொருட்களை உழவு இயந்திரத்தில் எடுத்துச் செல்லும்போது உரிய முறையை பின்பற்றாது மக்கள் அதிகம் புழக்கத்திலுள்ள பிரதான வீதிகளால் எடுத்துச் செல்லப்படுவதால் துர்நாற்றம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார பாதிப்புகளால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.குறிப்பாக உழவு இயந்திரத்தின் பெட்டிக்குள் கழிவுப் பொருட்களை ஏற்றிய பின்னர் அதனை மூடாமல் திறந்த வண்ணம், கழிவுப் பொருட்கள் சேமிக்கும் இடத்திற்கு கொண்டு செல்வதை அவதானிக்க முடிந்தது. இதன்போது பொலுத்தீன் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் காற்றில் பறந்து வீதிகளில் பரவுவதை அவதானிக்க முடிந்தது. அதுமட்டுமல்லாது திரவ வடிவிலான கழிவுகளை எடுத்துச் செல்லும்போதும் அதிகளவான துர்நாற்றம் வீசுவதை காணமுடிகின்றது.இதேவேளை உழவு இயந்திரத்துக்கு உறுதியான இலக்க தகடுகளும் காணப்படுவதில்லை. குறிப்பாக மாநகர சபையின் கழிவக்கற்றும் பல வாகனங்களானது இவ்வாறு இலக்க தகடு இல்லாமலே பணியில் ஈடுபடுகின்றது எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.அதுமட்டுமல்லாது யாழ். மாநகர சபையினரே இவ்வாறு தொடர்ச்சியாக தவறிழைக்கும்போது அவர்கள் எவ்வாறு மக்களை நல்வழிப்படுத்த தகுதியுடையவர்கள் என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர்.இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு யாழ். மாநகரசபை ஆணையாளர் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.எனவே இவ்வாறான முறைகேடுகளை சீர் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- 198
யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து புறப்படும் 764 வழித்தட பேருந்துகள் கடந்த காலங்களில், வசாவிளான் சந்தியில் இருந்து , பருத்தித்துறை - பொன்னாலை வீதி வரையிலான பலாலி வீதி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்டமையால் ,வசாவிளான் சந்தியுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்தி இருந்தன. அதனால் மயிலிட்டி பகுதியில் வசிக்கும் மக்களின் நலன்கருதி , யாழ்ப்பாண நகரில் இருந்து புறப்படும் ,769 வழித்தட பேருந்துகள் மயிலிட்டி வரையில் சேவையில் ஈடுபட்டது. தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் பலாலி வீதி திறக்கப்பட்டுள்ளமையால் , யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764 வழித்தட பேருந்துகள் யாழ்ப்பாண நகரில் இருந்து புறப்பட்டு பலாலி வீதியூடாக பருத்தித்துறை - பொன்னாலை வீதியை அடைந்து அதனூடாக காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் வரையில் சேவையில் ஈடுபடுகிறது. அதேபோன்று காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைகிறது. இந்நிலையில் 769 வழித்தட அனுமதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் தாம் இதுவரை காலமும் மயிலிட்டியில் இருந்து சேவையை ஆரம்பித்தது போன்று ஆரம்பிக்கவும் , யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு , காங்கேசன்துறை வீதி வழியாக மயிலிட்டி வரையில் சேவையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என கோரியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- 230
யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கலைச்செல்வன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் நேற்றையதினம் அதிகாலை 4 மணியளவில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி பி.ப 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சியங்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.000
- 304
யாழில், கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை - கூளாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன் (வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இவருக்கு கடந்த 17ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்காக நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.கிருமித்தொற்றினால் உடற்கூறுகள் செயலிழந்ததால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.000
- 306
தோல்வியுற்ற உள்நாட்டு பொறிமுறைகளை செயற்படுத்துவதாகப் பாசாங்கு செய்வதற்குப் பதிலாக, பொறுப்பு கூறலுக்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்ட பின்னணியில் அறிக்கையொன்றை வெளியிட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் 16 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமைக் குழுக்களும் போர்க்குற்றங்கள் மற்றும் அரச பாதுகாப்புப் படையின் மனித உரிமை மீறல்கள் குறித்து பல ஆதாரங்களைச் சேகரித்தன. எனினும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் நம்பகமான பொறுப்புக்கூறல் செயல்முறையை ஆரம்பிக்கத் தவறிவிட்டன. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சமூகங்கள் தொடர்ந்தும் அடக்குமுறை மற்றும் பிற மீறல்களை எதிர்கொள்கின்றன. கடந்த ஆண்டு பல தமிழ் மக்கள் அனுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக்குவதற்கு வாக்களித்தனர். அவர் முந்தைய அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டு அடக்குமுறை மற்றும் பாகுபாட்டு மரபை நிவர்த்தி செய்வார் என்று அந்த மக்கள் நம்பிய போதிலும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட முந்தைய அரசாங்கங்களின் தோல்வியுற்ற முயற்சிகளை அனுர குமார திசாநாயக்க அரசாங்கம் ஆதரித்துள்ளது. எனினும் அவை எந்தவொரு முன்னேற்றத்தையும் கொண்டுவரவில்லை. இந்த பொறிமுறைகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், தமிழர்களைக் குறிவைக்க நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் தொடர்ந்தும் அமுல்படுத்தி வருகிறது. ஜீஎஸ்பி பிளஸ் என்ற ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கான வரி இல்லாத அணுகலைத் தக்கவைத்துக் கொள்வதற்கான நிபந்தனையாக இந்த கடுமையான சட்டத்தை ரத்து செய்வதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அரசாங்கம் உறுதியளித்திருந்தது. அத்துடன் பொறுப்பு கூறலை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் யோசனையை இந்த அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதேநேரம் மதிப்பிழந்த உள்நாட்டு முயற்சிகளைச் செயற்படுத்துவதாக அரசாங்கம் பாசாங்கு செய்கிறது. பொறுப்புக்கூறல் திட்டத்தைப் புதுப்பிப்பதற்கான தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் பொறுப்புக்கூறலுக்கான தமது உறுதிப்பாட்டை அரசாங்கம் நிரூபித்து, தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
- 306
உலகின் முதல் AI நகரத்தை அபுதாபி உருவாக்கி வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 2027 ஆம் ஆண்டில் இந்த நகரம் யதார்த்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவாற்றல் தொழில்நுட்பம் மூலம் நகர்ப்புற வாழ்க்கையை மறுவரையறை செய்யும் குறிக்கோளுடன் இந்த நகரம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.ஓட்டுநர் இல்லாத போக்குவரத்து அமைப்புகள், ஸ்மார்ட் வீடுகள், சுகாதாரம், கல்வி மற்றும் எரிசக்தி என அனைத்திற்கும் இந்த நகரம் AI-அடிப்படையிலான தீர்வுகளைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.செயற்கை நுண்ணறிவின் முழு திறனையும் பயன்படுத்தும் ஒரு நகரத்தை அபுதாபி திட்டமிட்டுள்ளது. இந்த AI ஸ்மார்ட் நகரத்தின் பெயர் ‘அயன் சென்சியா’ ஆகும்.இந்த நகரத்தை அபுதாபியை தளமாகக் கொண்ட போல்ட் டெக்னாலஜிஸ் மற்றும் இத்தாலிய ரியல் எஸ்டேட் டெவலப்பர் மி ஆன் ஆகிய நிறுவனங்கள் கட்டமைத்து வருகின்றனர்.அயன் சென்சியா ஸ்மார்ட் நகரமாக மட்டுமல்லாமல், அறிவியல் நகரமாகவும் இருக்கும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் மரினெல்லி கூறினார்.கட்டமைத்தல், இயக்குதல் மற்றும் பரிமாற்றம் என்ற மாதிரியில் கட்டமைக்கப்படும் இந்த நகரத் திட்டத்தின் செலவு 250 மில்லியன் டொலர் ஆகும். AI கையடக்க தொலைபேசி செயலியான MAIA, நகரத்தில் வசிப்பவர்களை இணைத்து ஈடுபடுத்தும்.இது அனைத்து சேவைகளும் ஒரே குடையின் கீழ் கிடைக்கும் ஒரு அமைப்பாக இருக்கும். பாரம்பரிய AI தளங்களைப் போலன்றி, இந்தப் பயன்பாடு பயனர்களைப் பற்றிய தகவல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் தளமாக இருக்கும்.இந்த செயலி, வருடத்தில் இரவு உணவிற்கு எங்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்பதை பயனருக்கு பரிந்துரைக்கும் என்றும், பயனரை குழப்பமடையச் செய்யாமல் தானாகவே முன்பதிவு செய்யும் என்றும் டேனியல் மரினெல்லி விளக்கினார்.இந்த செயலி, இயக்கம், எரிசக்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.அபுதாபியில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பின்னர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.AI இன் உலகளாவிய தலைமையகமாக மாறுவதற்கான அபுதாபியின் முயற்சிகளுக்கு அயன் சென்சியா பங்களிக்கும். ஓபன் AI உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் அபுதாபியில் AI துறையில் முதலீடு செய்கின்றன000
- 307
வடக்கு மாகாண பிரதம செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வடக்கு மாகாண பிரதம செயலாளராக பணியாற்றிய இலட்சுமணன் இளங்கோவன் கடந்த 06.05.2025 அன்று ஓய்வுபெற்றிருந்த நிலையில் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அவருக்கு வழங்கப்பட்டது.முன்னதாக தனுஜா முருகேசன் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் மேலதிக செயலாளராக கடமையாற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.00
- 308
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் புதன்கிழமை (21) எண்ணெய் விலைகள் 1% க்கும் அதிகமாக உயர்ந்தன.இது மத்திய கிழக்கு உற்பத்தி செய்யும் முக்கிய பிராந்தியத்தில் விநியோக கிடைப்பைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 00.03 GMT மணியளவில் 86 காசுகள் அல்லது 1.32% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு $66.24 ஆக இருந்தது.அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெய் 90 காசுகள் அல்லது 1.45% உயர்ந்து $62.93 ஆக இருந்தது.அமெரிக்காவிற்கு கிடைத்த புதிய உளவுத்துறை தகவல்கள், இஸ்ரேல் ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் தயாராகி வருவதாகக் கூறுகின்றன என்று, இந்த விடயத்தை நன்கு அறிந்த பல அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, CNN செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது.எனினும், இது குறித்து இஸ்ரேலிய தலைவர்கள் இறுதி முடிவை எடுத்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி CNN மேலும் கூறியது.பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பின் உறுப்பினர்களில் ஈரான் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது.மேலும், இஸ்ரேலிய தாக்குதல் நாட்டிலிருந்து எண்ணெய் ஓட்டத்தை சீர்குலைக்கக்கூடும்.சவுதி அரேபியா, குவைத், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை ஏற்றுமதி செய்யும் வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் நீரிணையின் வழியாக எண்ணெய் கப்பல் ஓட்டத்தைத் தடுப்பதன் மூலம் ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்ற கவலையும் உள்ளது.எனினும், மசகு எண்ணெய் விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சில அறிகுறிகளும் இருந்தன.செவ்வாயன்று அமெரிக்க பெட்ரோலிய நிறுவனத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, கடந்த வாரம் அமெரிக்க மசகு எண்ணெய் கையிருப்பு உயர்ந்தது.உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான அமெரிக்காவில், மே 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் மசகு எண்ணெய் இருப்பு 2.5 மில்லியன் பீப்பாய்கள் அதிகரித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்கள் தெரிவித்தன.புதன்கிழமை பிற்பகுதியில் எரிசக்தி தகவல் நிர்வாகத்திடமிருந்து அமெரிக்க அரசாங்க எண்ணெய் இருப்பு தரவுகளையும் முதலீட்டாளர்கள் எதிர்நோக்குகின்றனர்.மேலும், கஜகஸ்தானின் எண்ணெய் உற்பத்தி மே மாதத்தில் 2% அதிகரித்துள்ளது என்று ஒரு தொழில்துறை வட்டாரம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. இது OPEC+ இன் உற்பத்தியைக் குறைக்கும் அழுத்தத்தை மீறுவதாகும்.000
- 308
*நிலக்கடலை மிட்டாய் சாப்பிடுங்க நீண்ட நாள் வாழலாம்!**மாரடைப்பும் வராதாம்!!*நிலக்கடலை மிட்டாய் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் நீண்ட நாள் வாழலாம் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.நிலக்கடலை மிட்டாய் அல்லது வேர்க்கடலை மிட்டாய் என்று அழைக்கப்படும் இந்த கடலையை சாப்பிடாதவர்கள் யாருக்கம் இருக்க முடியாது. பேருந்து நிலையங்களிலும் தள்ளுவண்டியிலும் எண்ணற்றோர் விற்பனை செய்கின்றனர்.பசிக்கு எளிய உணவாகவும் இருக்கிறது வேர்க்கடலை.மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.நிலக்கடலை உலகெல்லாம் பரவியது பதினாறாம் நூற்றாண்டில்தான். இதன் தாய் நிலம், பிரேசில். அங்கிருந்து போர்ச்சுகீசியர் பல்வேறு நாடுகளுக்கு இதனை எடுத்துச் சென்றனர்.இந்தியாவிலும் விருந்தாளியாய் வேர்விட்டது வேர்க்க்கடலை!*நோய் நீக்கும் வல்லமை*உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் கொண்டது வேர்க்கடலை மிட்டாய் என்கின்றனர் நிபுணர்கள்.எண்ணெய் சத்துசக்தி, புரதம், பாஸ்பரஸ், தையாமின்,நையாசின் ஆகிய ஐந்து சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் விளங்குகிறது வேர்க்கடலை மிட்டாய். இதில் உள்ள எண்ணெய்ச்சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது.நோய் எதிர்ப்பு சக்திசிறந்த மலமிளக்கியாகவும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது.இது வளரும் குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் அருமருந்து.பல தொற்றுநோய்கள், ஹெபடைடிஸ், காசநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை மிட்டாய் அளிக்கிறது.பெண்களுக்கு நன்மைஹீமோஃபீலியா என்ற நோயில் அவதிப்படுபவர்களுக்கு அடிபட்டால் அவ்வளவு எளிதில் ரத்தம் உறையாது. அதனைக் குணப்படுத்தவும், பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும், நீரிழிவு நோயாளிகளுக்கும் வேர்க்கடலை சிறந்த உணவாகும்.ஊட்டச்சத்துக்கள்நிலக்கடலையில் நிறைவுறா கொழுப்புஅமிலம், நார்ச்சத்து, வைட்டமின்கள், பினோலிக் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், பைடோகெமிக் கல்ஸ் உள்ளிட்ட நிறைய ஊட்டச் சத்துகள் உள்ளன.அடித்தட்டுமக்கள்இதற்கு முன்பு இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவைஅனைத்துமே வருவாய் அதிகம் உள்ள மக்களிடையே தான் நடத்தப்பட்டுள்ளன. இந்தப் புதிய ஆய்வில் கருப்பர்கள், வெள்ளையர்கள், ஆசியர்கள் என பல இன மக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.மாரடைப்பு வராதுஇந்த ஆய்வின் மூலம் நிலக்கடலையைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் 23 முதல் 38 சதவீதம் வரை குறைகின்றன என்பது தெரியவந்துள்ளது*விலையும் குறைவு.....*பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு போல நிலக்கடலை மிட்டாயின் விலை அதிகம் இல்லை. தவிர அது பல இடங்களிலும் எளிதாக கிடைப்பதால் பலரும் அதைத் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். நிலக்கடலை மிட்டாயைத் தொடர்ந்து பயன்படுத்த நாம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், மக்களின் இதய நலத்தை மேம்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.குழந்தைகளுக்கு சாக்லேட், பிசா போன்றவற்றை நொறுக்குத்தீனியாக வாங்கி கொடுப்பதற்கு பதில், நிலக்கடலை மிட்டாய் வாங்கி கொடுத்து சாப்பிட பழக்கப்படுத்துங்கள்..
- 342
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். சுபகாரியம் எண்ணங்கள் கைகூடும். புதிய பொருட்கள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு ரிஷபம்புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் அமையும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். அறப்பணி விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மிதுனம்எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிறமொழி மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். வர்த்தகத்தில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பச்சை கடகம்சிந்தனைகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். மனதளவில் ஒருவிதமான பதட்டம் ஏற்பட்டு நீங்கும். கணிதம் தொடர்பான துறைகளில் அலட்சியமின்றி செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : சந்தன ம் சிம்மம்கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வருத்தங்கள் நீங்கும். தன வரவுகள் தேவைக்கு கிடைக்கும். இழுபறியான சில வேலைகள் முடியும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளின் வருகையால் சில மாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். திறமை வெளிப்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சில்வர் கன்னிசுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். கடன் சார்ந்த சில உதவிகள் சிலருக்கு சாதகமாகும். உற்சாகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை துலாம்எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உழைப்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு விருச்சிகம்வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உறவினர்களின் வழியில் சில உதவிகள் சாதகமாகும். விளையாட்டு துறையில் மேன்மை ஏற்படும். உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் தனுசுசுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். புதிய முயற்சிகளை சூழ்நிலை அறிந்து செயல்படுத்தவும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கோபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மகரம்உயர் அதிகாரிகளிடம் பொறுமை வேண்டும். திறமைக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். சலனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை கும்பம்குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படவும். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்கள் பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் மீனம்வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். உறவுகளுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆவணம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். பற்கள் தொடர்பான இன்னல்கள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் பயணற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஊக்கம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- 348
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 7 ஆம் தேதி புதன்கிழமை 21.5.2025.நாள் - மேல் நோக்கு நாள் பிறை - தேய்பிறைதிதிகிருஷ்ண பக்ஷ நவமி - May 21 04:55 AM – May 22 03:22 AMகிருஷ்ண பக்ஷ தசமி - May 22 03:22 AM – May 23 01:12 AMநட்சத்திரம்சதயம் - May 20 07:32 PM – May 21 06:58 PMபூரட்டாதி - May 21 06:58 PM – May 22 05:47 PMகரணம்சைதுளை - May 21 04:56 AM – May 21 04:13 PMகரசை - May 21 04:13 PM – May 22 03:22 AMவனசை - May 22 03:22 AM – May 22 02:21 PMயோகம்வைத்ருதி - May 21 02:50 AM – May 22 12:34 AMவிஷ்கம்பம் - May 22 12:34 AM – May 22 09:49 PM
- 370
பெரியார் கடைசிவரை... பதில் சொல்லாமல் முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)...நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால், சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,ஆகையால் எனக்கு 'கை' உண்டு.என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..இது என்ன பூ எனக்கேட்டால்அதன் பெயரை சொல்லலாம்..!நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்...அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்!
- 375
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தை மணிரத்னம் இயக்கும் நிலையில், அந்தப் படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் இணைந்திருந்தார்.‘தக் லைஃப்’ திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஏ.ஆர் ரகுமான் தான் ஏன் குறைவாக பேசுகிறேன் என்பது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். மேலும் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் ஆகியோருடனான தனது நட்பு குறித்தும் அவர் விரிவாக கூறியுள்ளார்.நாங்கள் எப்போதும் வேலையிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறோம். அதன் பொருள் நாங்கள் புறம் பேசுவதையோ அல்லது கிசுகிசுப்பதையோ விரும்புவதில்லை. வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். அடிப்படையில் இந்த பழக்கத்தை ரமலான் காலத்திலேயே கற்றுக் கொண்டேன். அந்த மாதத்தில் நீங்கள் யாரைப் பற்றியும் தவறாக பேசக்கூடாது. எனவே ஒவ்வொரு வருடமும் அந்த பழக்கம் எனக்குள் மீண்டும் மீண்டும் புகுத்தப்பட்டு விட்டது. தற்போது அது என்னுடைய ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது என்றார்.அதேபோல் மணிரத்னத்துடன் நான் அதிகம் பேசுவதில்லை. குறைவாக பேசினாலும் அது பெரும்பாலும் திரைப்படங்களை பற்றியதாகவே இருக்கும். நாங்கள் ஒன்றாக காட்சிகளை பார்ப்போம். எங்கள் உரையாடல்கள் மிகக் குறுகியதாக இருக்கும். இதை மாற்ற முடியுமா? இது நன்றாக இருக்கிறதா? போன்ற விஷயங்களை மட்டுமே நாங்கள் பேசிக் கொள்வோம். நான் ஒலிக்கலவை அல்லது புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் பொழுது அவர் இதையெல்லாம் செய்ய உங்களுக்கு எங்கிருந்து நேரம் இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே இருப்பார் என்று மணிரத்னம் குறித்து ஏ.ஆர். ரகுமான் பேசினார்.‘தக் லைஃப்’ திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில், கமலஹாசன் திரைக்கதையில் உருவாகி உள்ள திரைப்படமாகும். இந்த படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், நாசர், அலிஃபசல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் மூவிஸ் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரித்துள்ளன. ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு கமலஹாசனும், மணிரத்னமும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
- 558
கனடாவின் பல பிரதேசங்களில் இன்று இரவு பனிக்கட்டி (frost) ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக சுற்றுச்சூழல் கனடா அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மக்கள் தங்கள் தோட்டத் தாவரங்களை மூடி பாதுகாப்பதற்கான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த பனிக்கட்டி எச்சரிக்கை தென்கிழக்கு ஒண்டாரியோ மற்றும் வடக்கு ஒண்டாரியோ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது.அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், டொரண்டோ பெரும்பாக பகுதியில் உள்ள ப்ரான்ட் ஃபோர்ட் – ப்ரான்ட் கவுண்டி, காலிடன், ஹால்டன் ஹில்ஸ் – மில்டன், மற்றும் நியூமார்கெட் – ஜியோர்ஜினா – வட யோர்க் பகுதி ஆகியவை அடங்குகின்றன.“பனிக்கட்டுக்கு பாதிக்கக்கூடிய பகுதிகளில் இருக்கும் தாவரங்களை மூடி பாதுகாக்கவும்,” எனவும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். வளரும் பருவங்களில் வெப்பநிலை உறைவுக்கு (0°C) கீழ் சென்றால் பனிக்கட்டி உருவாகும் வாய்ப்பு இருப்பதால், இது தாவரங்கள் மற்றும் பயிர்களுக்கு சேதம் அல்லது அழிவை ஏற்படுத்தும் அபாயம் உண்டு என்று சுற்றுச்சூழல் கனடா கூறியுள்ளது.
- 564
கனடாவின் ஒண்டாரியோவில், ஒட்டாவாவை சேர்ந்த டோ டிரக் சாரதி ஒருவர் வண்டி ஓட்டும் போது யூடியூப் வீடியோக்களை பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த சாரதி கடும் தண்டனை எதிர்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த திங்கட்கிழமை அதிவேக நெடுஞ்சாலை வே 416ல் ஒரு அதிகாரி சந்தேகத்துக்கிடமான நிலையில் டிரக் சாரதியை நிறுத்தியுள்ளார். முன் பயணியரின் இருக்கை அருகே ஒரு டேப்லட் சாதனம் பொருத்தப்பட்டுள்ள காட்சி அடங்கிய புகைப்படமொன்றை பொலிஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்காக, குறித்த சாரதிக்கு "திசைதிருப்பு ஓட்டுதல்" குற்றம் சாட்டப்பட்டுள்ளது.நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 615 டொலர் தண்டம், மூன்று டிமெரிட் புள்ளிகள் மற்றும் மூன்று நாட்கள் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.ஒண்டாரியோ மாகாணத்தில் வாகனம் ஓட்டும் போது கைப்பேசிகள் மற்றும் மின்முனை பொழுதுபோக்கு சாதனங்களை பயன்படுத்துவது சட்டத்துக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.
- 565
காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர்.தமிழ்த் திரையுலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.இயக்குநர் கே. பாலசந்தரின் ‘பொய்க்கால் குதிரை’ திரைப்படம் மூலம் 1983-ம் ஆண்டில் அறிமுகமானவர்.நகைச்சுவை, குணசித்திரம் என்று பல பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அவர் தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி."42 வருட திரைப்பயணத்தில் கிசுகிசுக்களில் சிக்காமல் இருக்கிறீர்களே, எப்படி?"நான் முரண்பாடுகளைத் தவிர்த்துவிடுவேன். கழுவுற மீனில் நழுவுற மீன் இல்லை நான். நல்லெண்ணமே, சமூகத்தை உருவாக்கும். இன்னொரு நடிகரின் வீழ்ச்சி எனது வளர்ச்சி ஆகாது. சக நடிகர்கள் பற்றிய பிடிக்காத விஷயங்களையும் மற்றவர்களிடம் பகிரமாட்டேன். மற்றவர்களை விமர்சிக்க எனக்கு எந்தத் தகுதியும் கிடையாது."வாய்ப்பைத் தவறவிட்டு பின்னர் வருத்தப்பட்ட படங்கள் இருக்கிறதா?"வருத்தப்பட்டது கிடையாது. எனது பயணம் நெடிய பயணம் அல்ல. இனிய பயணம். பிடித்த வேலை என்றுமே நம்மை களைப்படையச் செய்யாது."நகைச்சுவை தாண்டி, இப்போது குணச்சித்திர வேடங்களிலேயே நடித்து வருகிறீர்களே... என்ன காரணம்?"டிரெண்டுக்கு ஏற்றபடி அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறித்தான் ஆகவேண்டும். நான் இப்போது காலேஜ் ஸ்டூடண்ட் ஆக நடிக்க முடியுமா? அதைவிட பைத்தியக்காரத்தனம் இருக்குமா? டிரெண்டுக்கு ஒத்துப் போவதுதான் வளர்ச்சி."அப்படி என்றால் ஹீரோவாக நடிக்கலாமே..."ஹீரோவாக நடிப்பது மிகவும் கடினமான பணி. ஒட்டுமொத்த படத்தின் பொறுப்பும் ஹீரோவின் தோளில் தான் இருக்கிறது. நான் ஹீரோவாக நடிக்கவில்லை. எனக்கு ஏற்றபடி மைய கதாபாத்திரங்கள் தருகிறார்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சி."நான் ஹீரோவாக நடிக்கமாட்டேன் என்று சொல்லவில்லை. அதற்கான கதாபாத்திரங்கள் இன்னும் டைரக்டர்களால் உருவாக்கப்படவில்லை. டைரக்டர்களுக்கு வேண்டுமானால் நான் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் எனக்கு கதை தான் எப்போதுமே ஹீரோ.""திடீரென்று படிப்பில் நாட்டம் காட்டுவது ஏன்?"நான் பல ஆண்டுகளாக புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமலையின் வேண்டுகோளை ஏற்று, அங்கு ஆய்வு மாணவராக இணைந்தேன். முனைவர் பட்டமும் பெற்றேன். படிப்பு என்பது என்னை நானே எளிமைப்படுத்திக் கொள்ளும், வலிமைப்படுத்திக் கொள்ளும் ஆயுதமாகவே பார்க்கிறேன்."எந்த விஷயத்தில் நம்பிக்கையாக இருக்கிறீர்கள்?""கூடுமானவரை இன்னொருவரை என்னுடைய சுயநலத்துக்காக ஏமாற்ற விரும்பாதவன். இப்படி நான் இருக்கும்போது, அடுத்தவர்கள் நிச்சயம் என்னை ஏமாற்ற மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை."குடும்பம் பற்றி சொல்லுங்க..."எனது பெற்றோர் இருவருமே கோவில்பட்டியில் ஆசிரியர்கள். 3 தங்கைகள், ஒரு தம்பி. எனக்கு அன்பான மனைவி, 2 பாசமான மகன்கள்.மூத்தவருக்கு திருமணமாகிவிட்டது. இளையவருக்கு ஜூன் மாதத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது."திருப்புமுனை ஏற்படுத்திய படம் எது?"'நியாயத் தராசு' படம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத படம். காரணம், அந்த படத்துக்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. எனக்கு திருப்பு முனைத்தந்த படம் அது.
- 566