Feed Item
·
Added a news

உண்மை, பொய் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஐக்கிய இராச்சிய முதலீட்டாளரின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையொன்று இன்று முற்றிலுமாக மூடப்பட்டு 2000 பேர் வீதிக்கு வந்துள்ளனர். 2028 முதல் கடனை அடைக்க தற்போது 5% பொருளாதார வளர்ச்சி விகிதம் எமக்கு தேவையாக காணப்படுகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் போது இந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைவது சாத்தியமில்லை.

200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, ​​அதை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கு மிரட்டல் விடுத்தவர்களும் இருந்தனர். இத்தகைய சூழ்நிலையில், நாம் 5% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை கொண்டு வர வேண்டும். அவ்வாறு இல்லையெனில், 2028 முதல் நமது கடன்களை மீளச் செலுத்த முடியாமல் மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவோம். இது நடந்தால், நாடு பொருளாதார சுனாமிக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

  • 168