“மழைல நனைஞ்சு நனைஞ்சு சுரேஷ் நினைக்கிறார், இப்பவே 6 ஆகுது..
மதியம் சாப்பிட வேற செய்யல! பசிக்குது! ... கடைசி பார்சல் இருக்குது சாப்பிட்டுவிட்டு நாளை போய் கொடுக்கலாமா? அல்லது இப்போ கொடுத்து முடிக்கலாமா ? என்று.
ரவி மாமாவுக்கு.
இதயமருந்து வேற. டெய்லி எடுத்தா தான் அவருக்கு முடியும்னு சொன்னாங்க.
மருந்து இல்லை என்றால் ஆபத்துன்னு கூட சொன்னாங்க.
சரி... இந்த ஒரு டெலிவரி முடிச்சா தான் நிம்மதியா தூங்க முடியும்னு தோணுது.”
(வீட்டுக்குப் போறாரு – கதவைத் தட்டுறாரு)
“மாமா... கூரியர் … கதவ திறங்க!”
(ஒரு நிமிஷம் கழியிது)
(மறுபடி)
“மாமா... மருந்து பாக்ஸு கொண்டு வந்தாச்சு மாமா...”
(மூணு நிமிஷம் கழிச்சும் இன்னும் பதிலே இல்ல)
“ஏதோ சரியில்லை போல இருக்கு…”
(ஜன்னல வழியா உள்ளே பார்க்க)
“ஒளி இருக்கே... ஆனா... ஒரு சத்தம்கூட இல்ல. நிழலும் தெரியலை...” மாமா மதியம் மட்டும் தானே தூங்குவாரு! சரியில்லை என்று எண்ணி..
(அயலவரிடமே போய்ப் பேசுறாரு)
“அம்மா, ரவி மாமா உள்ளே இருக்குற மாதிரி தான் இருக்கு. ஆனா கதவ திறக்கல. மூணு முறை தட்டினேன். பதிலை இல்ல…”
(அயல்வீட்டு பாட்டி)
“ஐயையோ... நானும் அவர இரண்டு நாளா வீட்டில இருந்து வெளிய வந்தத பார்கல ப.. நானும் வறேன். என்ன என்று பார்க்கலாம் ...
அனைவரும் குரல் கொடுத்தும் பலனில்லை!
அவங்க போலீஸுக்கும் ஆம்புலன்ஸுக்கும் கூப்பிட்டாங்க.
சுரேஷ் கூடவே பயத்தோட, பதற்றத்தோட கதவு முன்பே நின்னான்.
கதவுத் தட்டும் கையால இப்போ உள்ளே நுழைய போறான்.
கதவு உடைக்கப்படுது...
அந்த நொடி...வீட்டுக்குள்ள – அமைதி...ஒரு சத்தமும் இல்லாத அமைதி...
தரையில ரவி மாமா சாய்ந்தே கிடந்தார்.
கண்ணை மூடாம விழிச்ச மாதிரி. ஆனா அந்த விழிப்புல உயிர் இல்ல.
(சுரேஷ் மெதுவா நடக்கிறான், அதிர்ச்சியோட சொல்லுறான்)
“மாமா... மாமா! என்னங்க இது? இப்படி...”
மாமாவால பேசவே முடியல. கையை அசைக்க கூட முடியல. மூச்சே மெதுவா தான் இருக்கு... உயிர் உள்ளதா இல்லையா என்பதையே புரிஞ்சுக்க முடியலை.
கண்ணில் ஒரு கேள்வி மட்டும் தெரிஞ்சுது...
“யாராவது வருவாங்களா?”
(சுரேஷ், மெல்ல கீழே விழுந்துகிட்டு அழுகிற மாதிரி கவலை கொண்டார்)
“ஒரே ஒரு கதவுதான்... அது திறக்காம நின்னதால இப்படி ஒரு நிலைமையா என்று...”
(அடுத்த நாள், மருத்துவமனையில்... ரவி மாமா சிரிக்கிற மாதிரி, மெதுவா சொல்லுறாங்க)
“அய்யா... நீ கதைவை தட்டிட்டு அப்படியே போயிருந்தா?
நான் உயிர் பிளைத்திருப்பேனா ?
நன்றிகள் கோடி உனக்கு என்று கையில் முத்தம் கொடுத்தார் ரவி மாமா!
ஒரு கதவைத்தட்டியதால ஒரு உயிர் பிழைத்தது.
நம்மால ஒரு நிமிஷம் நேரம் பொருக்க முடியாம போயிருச்சுனா, இன்னொரு உயிர் போயிருக்கும்னு யோசிக்கணும்.
சில நேரம்...ஒரு சின்ன தட்டுதல் தான் — ஒரே பெரிய உதவி ஆகிடும்,உண்மைதானே?
- 193