கனடாவின் பல பிரதேசங்களில் இன்று இரவு பனிக்கட்டி (frost) ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக சுற்றுச்சூழல் கனடா அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மக்கள் தங்கள் தோட்டத் தாவரங்களை மூடி பாதுகாப்பதற்கான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பனிக்கட்டி எச்சரிக்கை தென்கிழக்கு ஒண்டாரியோ மற்றும் வடக்கு ஒண்டாரியோ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், டொரண்டோ பெரும்பாக பகுதியில் உள்ள ப்ரான்ட் ஃபோர்ட் – ப்ரான்ட் கவுண்டி, காலிடன், ஹால்டன் ஹில்ஸ் – மில்டன், மற்றும் நியூமார்கெட் – ஜியோர்ஜினா – வட யோர்க் பகுதி ஆகியவை அடங்குகின்றன.
“பனிக்கட்டுக்கு பாதிக்கக்கூடிய பகுதிகளில் இருக்கும் தாவரங்களை மூடி பாதுகாக்கவும்,” எனவும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். வளரும் பருவங்களில் வெப்பநிலை உறைவுக்கு (0°C) கீழ் சென்றால் பனிக்கட்டி உருவாகும் வாய்ப்பு இருப்பதால், இது தாவரங்கள் மற்றும் பயிர்களுக்கு சேதம் அல்லது அழிவை ஏற்படுத்தும் அபாயம் உண்டு என்று சுற்றுச்சூழல் கனடா கூறியுள்ளது.
- 129