கனடாவின் ஒண்டாரியோவில், ஒட்டாவாவை சேர்ந்த டோ டிரக் சாரதி ஒருவர் வண்டி ஓட்டும் போது யூடியூப் வீடியோக்களை பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த சாரதி கடும் தண்டனை எதிர்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை அதிவேக நெடுஞ்சாலை வே 416ல் ஒரு அதிகாரி சந்தேகத்துக்கிடமான நிலையில் டிரக் சாரதியை நிறுத்தியுள்ளார். முன் பயணியரின் இருக்கை அருகே ஒரு டேப்லட் சாதனம் பொருத்தப்பட்டுள்ள காட்சி அடங்கிய புகைப்படமொன்றை பொலிஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்காக, குறித்த சாரதிக்கு "திசைதிருப்பு ஓட்டுதல்" குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 615 டொலர் தண்டம், மூன்று டிமெரிட் புள்ளிகள் மற்றும் மூன்று நாட்கள் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஒண்டாரியோ மாகாணத்தில் வாகனம் ஓட்டும் போது கைப்பேசிகள் மற்றும் மின்முனை பொழுதுபோக்கு சாதனங்களை பயன்படுத்துவது சட்டத்துக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.
- 130