Ads

புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயம்

புளியம்பொக்கனை நாகதம்பிரான்  ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 589
 • More
 • 356
 • More
 • 370
 • More
 • 359
 • More
 • 355
 • More
 • 362
 • More
 • 352
 • More
 • 353
 • More
 • 343
 • More
 • 356
 • More
 • 320
 • More
Comments (0)
  Author
   ·   · 18 albums
  •  · 15 friends
  • S

   18 followers
  Info
  Created:
  Updated:
  Recent Images
  • 83
  • More
  • 85
  • More
  • 80
  • More
  • 79
  • More
  • 79
  • More
  • 76
  • More
  • 109
  • More
  • 115
  • More
  • 102
  • More
  • 117
  • More
  • 111
  • More
  • 128
  • More
  • 127
  • More
  • 115
  • More
  • 121
  • More
  • 127
  • More
  • 132
  • More
  • 126
  • More
  • 128
  • More
  • 134
  • More
  • 125
  • More
  • 125
  • More
  • 281
  • More
  • 269
  • More
  • 285
  • More
  • 288
  • More
  • 374
  • More
  • 349
  • More
  • 367
  • More
  • 365
  • More
  • 352
  • More
  • 364
  • More
  Added a news 
  இங்கிலாந்து நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை தற்போது ஆயிரத்திற்கும் கூடுதலாக பதிவாகி உள்ளது. அந்நாட்டில் கடந்த 26ந்தேதி வரையில் 1,076 பேருக்கு பாதிப்பு இருப்பது ஆய்வக பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் கனடாவில் அதிக அளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆப்பிரிக்காவில் உள்ள எட்டு நாடுகளில் இதுவரை 1500-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன் ஆகிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இதன் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நோய் பாதிப்பு பெருமளவில் எலிகள் போன்ற வன விலங்குகளிடம் காணப்படுகிறது. அவற்றில் இருந்து மனிதர்களுக்கு பரவ கூடும் என கூறப்படுகிறது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தோலில் அரிப்பு மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை காணப்படும். இதுதவிர மருத்துவ சிக்கலான நிலைக்கும் கொண்டு செல்ல கூடும். இதன் பாதிப்பு 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 27 பேர் ஸ்காட்லாந்திலும், 5 பேர் வடக்கு அயர்லாந்திலும், 9 பேர் வேல்சிலும் மற்றும் 1,035 பேர் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் உள்ளனர். இதுபற்றி இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு கழகத்தின் இயக்குனர் சோபியா மக்கி கூறும்போது, வருகிற நாட்கள் மற்றும் வாரங்களில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.
  • 39
  Added article 
  நடிகை மீனாவின் கணவர் நேற்று இரவு காலமான நிலையில் இன்று அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனை அடுத்து சற்று முன்னர் நடிகை மீனா கணவர் வித்யாசாகரின் அஸ்தியுடன் வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. நுரையீரல் மற்றும் இருதய பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து அவரது உடல் இன்று மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இரண்டு மணி நேரம் மின் மயானத்தில் காத்திருந்து கணவரின் அஸ்தியை வாங்கிக்கொண்டு நடிகை மீனா வீடு திரும்பினார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
  • 39
  Added article 
  நடிகை மீனாவின் கணவர் திடீரென நேற்று இரவு உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மீனா கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய் நடித்த தெறி உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகை மீனாவின் கணவர் காலமானதை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்
  • 40
  Added article 
  கோலிவிட்டில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமன இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தில் படங்கள் வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார்.பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் பொய்க்கால் குதிரை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை இருட்டறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் P ஜெயக்குமார் இயக்க, இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் இசை உரிமையை MRT Music நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை இசையமைப்பாளர் டி இமான் அறிவித்துள்ளார்.
  • 42
  Added article 
  இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தற்காலிகமாக “தலைவர் 169” என்று அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் டைட்டில் ”ஜெயிலர்” என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான  போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. போஸ்டரில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் பெயர் தவிர மற்றவர்கள் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.இந்நிலையில் இப்போது ஜெயிலர் தலைப்புக்கு ஒரு சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் மலையாளத்தில் தற்போது ஜெயிலர் என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறதாம். இதனால் ஜெயிலர் படத்தை மலையாளத்தில் என்ன பெயரில் ரிலீஸ் செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
  • 42
  Added a news 
  அரிசி, பருப்புக்கு 5% ஜி.எஸ்.டி வரி என்ற அறிவிப்புக்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைத்திருப்பது கவலை அளிக்கிறது.தொழில்நுட்பமும், நாகரிகமும் அதிகரித்து விட்ட நிலையில் குக்கிராமங்களில் கூட வணிக முத்திரையற்ற உணவுப் பொருட்கள் பொட்டலத்தில் அடைக்கப்பட்டு தான் விற்கப்படுகின்றன. அவற்றுக்கு 5% வரி விதிக்கப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.இந்தியாவில் பணவீக்கம் ஏற்கனவே உச்சத்தில் உள்ளது.  இத்தகைய சூழலில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், பிற அத்தியாவசியத் தேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டால் அது பணவீக்கமும், அதன் விளைவாக விலைவாசியும் கடுமையாக அதிகரிக்கும்; மக்கள் பாதிக்கப்படுவார்கள்.மக்களை பாதிக்கும் வகையிலான இந்த வரி உயர்வு பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்கக் கூடாது. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்.
  • 42
  Added a news 
  69 இலட்சம் மக்கள் 2 கோடுகளை தவறாக பயன்படுத்தியதால் இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, கோடுகள் தானே என்று இனிமேலும் அலட்சியமாக செயற்படக் கூடாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.நாட்டின் இன்றைய நிலைமை தொடர்பாக அவர் இன்று (29) கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு விடயத்தையும் அலட்சியமாக பார்க்கவோ செயற்படவோ கூடாது. அப்படி செயற்பட்டதால் தான் இன்றைய நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. வாக்களித்தவர்கள் மாத்திரம் அல்ல அனைவருமே இன்றைய நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.இந்த அரசாங்கத்தின் எந்தவிதமான திட்டமிடலும் இல்லை. டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் கடைசி கட்டத்தை அடையும் அதனை கொண்டு வருவதற்கு எந்தவிதமான திட்டத்தையும் முயற்சி செய்யாமல் இன்று கட்டாருக்கும் ரஷ்யாவுக்கும் ஒடிக் கொண்டிருக்கின்றார்கள்.அரசாங்கத்தின் நட்டமீட்டுகின்ற அனைத்து துறைகளையும் தனியாருக்கு வழங்கு வேண்டும். இன்று அபிவிருத்தி அடைந்துள்ள அனைத்து நாடுகளிலும் இந்த நிலைமையே காணப்படுகின்றது. அனைத்தையும் அரசாங்கம் செய்ய முடியாது. நிர்வகிக்கவும் முடியாது. எனவே, சரியான திட்டமிடலுடன் தனியாருக்கு வழங்கி நட்டமீட்டுகின்ற துறைகளை இலாபமீட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் என்றுமே அபிவிருத்தியை நோக்கி முன் செல்ல முடியாது. எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
  • 48
  Added a news 
  நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில், அந்நெருக்கடியை பொருட்டாக வைத்து, நாட்டின் பெறுமதியான வளங்களில் ஒன்றான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ராஜபக்ஸ குடும்பத்தினர் தலைமையிலான இந்த அரசின் முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாகவும், இதில் சம்பந்தப்படும் சகல அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியினால் அமையப்பெறும் அரசாங்கத்தின் கீழ் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (28) தெரிவித்தார்.எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய முழுமையான செயல்பாட்டின் ஊடாக 100% மண்ணெண்ணெய் தேவையையும்,சுமார் 50% விமானங்களுக்கான எரிபொருள் தேவையையும், 100% நெக்டா தேவையையும், 30% டீசல், 14% பெட்ரோல், 8% எரிவாயு, மின் உற்பத்திக்குத் தேவையான பதப்படுத்தல் எரிபொருள் 75-100% வரையான தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய பெறுமதி மிக்க வளமாகும் எனவும், இந்நாட்டிலுள்ள தூரநோக்கற்ற,வினைதிறனற்ற அரச நிர்வாகத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள சீர்குலைவின் காரணமாக இந்த தேசிய வளத்தை திருட்டுத்தனமாக ஏலம் விடுவதற்கு முயற்சி செய்வதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசுக்குச் சொந்தமான மதிப்புமிக்க நிறுவனங்களை ஏலம் போட முயற்சி நடந்தால்,அதற்கெதிராக கட்சி கோதங்கள் இன்றி ஒரே நிலைப்பாட்டின் கீழ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
  • 47
  Added a news 
  ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை மேலும் 3 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (04) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
  • 49
  Added a news 
  மத்திய வங்கியின் ஆளுநரின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான பரிந்துரையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநரின் பதவிக்காலம் நாளையுடன் (30) நிறைவடையவுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநராக 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கடமைகளை பொறுப்பேற்ற கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியின் பதவிக்காலமே இவ்வாறு நாளையுடன் நிறைவடைகிறது.இக்காலப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுனர்களாக நான்கு பேர் (கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன், அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் கலாநிதி நந்தலால் வீரசிங்க) கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • 49
  Added a news 
  தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமது சேவைகளை வழங்கும் திகதிகள் திருத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வௌ்ளிக்கிழமை மற்றும் இரண்டாம் திகதி சனிக்கிழமை தொடக்கம் மறு அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த நிறுவனத்தின் சேவைகள் வழங்கப்பட மாட்டாது என அந்த நிறுவனம் வௌியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கைப்பேசி அலைவரிசையில் இருந்து 225 அல்லது நிலையான தொலைப்பேசியில் இருந்து 1225 என்ற இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், www.ntmi.lk என் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் அல்லது e-channeling எப்ளிகேஷன் மூலம் குறித்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். வெள்ளி மற்றும் சனி தவிர்ந்த ஏனைய தினங்களில் இதற்காக உங்களுக்கு வசதியான நேரத்தை ஒதுக்கிக் கொண்டு வருமாறு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 
  • 49
  Added a news 
  இலங்கையிலுள்ள பல வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வழங்கியுள்ளன. நெருக்கடியான சூழ்நிலையிலேயே வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பில் பல வங்கிகள் அறிவிப்புக்களை விடுத்துள்ளன. அதன்படி நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில வர்த்தக வங்கிக் கிளைகள் பரிவர்த்தனைகளுக்கான திறக்கும் நேரத்தை மாற்றியமைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை முடிந்தளவு இணையவழியில் வங்கி பரிவர்த்தனை (Digital or Internet Banking) நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • 49