Added a news
அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திறைசேரி செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தடையாக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அமைச்சரவைக்கு இது குறித்து அறிவித்தார்.இதன்படி, சம்பளம் வழங்குதல், கடன் சேவைகள், ஓய்வூதியம், வைத்தியசாலை மருத்துவ சேவைகள், மாதாந்த சமுர்த்தி மானியங்கள், முதியோர்களுக்கான நிதியுதவி, ஊனமுற்ற குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிதியுதவி, சிறுநீரக நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்குதல், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிதி உதவி என்பவற்றுக்கு மாத்திரமே நிதியை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
Added a news
இரட்டைக் குடியுரிமை தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்குமானால், அதனை கைவிட தயார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இரட்டைக் குடியுரிமை மட்டுமல்ல, மக்களுக்காகப் பணியாற்றுவதற்கு வேறு தடைகள் இருந்தாலும் அதனை கடந்துவர தயார் என்றும் கூறியுள்ளார்.போராட்டத்தினால் பலர் தமது சொத்துக்களை இழந்துள்ள நிலையில் தனக்கு பெரும் பொறுப்பு இருப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இதேநேரம் தற்போது எரிவாயு, எரிபொருள் பிரச்சினை மற்றும் 10 மணிநேர மின்வெட்டு போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு ரணில் விக்கிரமசிங்கவால் தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Added a news
அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளை மட்டுமே வழங்குமாறு திறைசேரி செயலாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தடையாக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அமைச்சரவைக்கு இது குறித்து அறிவித்தார்.இதற்கமைய சம்பளம் வழங்குதல், கடன் சேவைகள், ஓய்வூதியம், வைத்தியசாலை மருத்துவ சேவைகள், மாதாந்த சமுர்த்தி மானியங்கள், முதியோர்களுக்கான நிதியுதவி, ஊனமுற்ற குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிதியுதவி, சிறுநீரக நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்குதல், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிதி உதவி என்பவற்றுக்கு மாத்திரமே நிதியை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
Added a news
கிழக்குத் தமிழர்களின் இருப்பை முஸ்லிம் – சிங்கள இனவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கு அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு,மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் மகா சபையில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கொக்கட்டிச்சோலை, முனைக்காட்டில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில், “தனித் தமிழ்க் கட்சியில் தான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவேன். எமது இருப்புக்காக நாங்கள் குரல் கொடுப்போம்” என்றார்.
Added article
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து படம் வரும் பிப்ரவரி 8-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஏற்கெனவே தெரிவித்தபடி படம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.