ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்குவதற்கான தனது முந்தைய முடிவை அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் அவர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது
வாகனங்களை வழங்குவது தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கைகளுக்கு முரணாக இருக்கலாம் என்ற கவலையைத் தொடர்ந்து இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது, அவர்களில் சிலர் ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை ஒதுக்கினால் இதே போன்ற சலுகைகளை கோருவோம் என்று எச்சரித்தனர்.
எவ்வாறாயினும், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கான உரிமையை தக்க வைத்துக் கொள்வார்கள்.
இது தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை அரசாங்கம் இனி தொடராது என்று தெரிவிக்கப்பட்டுளது
இந்த நன்மையை இலகுபடுத்துவதற்காக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுவது வழமையாக இருப்பினும் தமது அமைச்சு அவ்வாறான பிரேரணையை முன்னெடுக்காது என அமைச்சர் விஜேபால விளக்கமளித்துள்ளார். மேலும், அமைச்சர்களுக்கான புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மாறாக, தற்போது அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அமைச்சுகள் பயன்படுத்தும் V8 வாகனங்களை ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது.
இதேவேளை "செலவு குறைந்த, எரிபொருள் சிக்கனமான மற்றும் குறைந்த பராமரிப்பு தேவைப்படும் வாகனங்களை கொள்வனவு செய்வதனை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்" என்று அமைச்சர் விஜேபால கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
- 476