- · 5 friends
-
I
மாதத்தின் முதல் திகதியில் செய்யவேண்டிய நல்ல காரியம்
மாதத்தின் முதல் திகதியில் நாம் மனதார ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டும். அப்போது நாம் துவங்கக்கூடிய காரியம், நல்லதாக முடியும்.
வேலையிலும் செய்யும் தொழிலிலும் பிரச்சனைகள் விடுபட வேண்டும் என்றால், கோதுமை தானம் செய்வது சிறப்பு. கோதுமையை எப்படி வாங்கி யாருக்கு தானம் கொடுக்கலாம்.
சூரியனுக்கு உகந்த தானியம் கோதுமை. 1 கிலோ கோதுமை வாங்கி கோவிலில் இருக்கும் பிராமணருக்கு தானம் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். நவகிரகங்களில் சூரிய பகவானுக்கு ஒரு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.
உங்களால் முடியும் என்றால் 5 கிலோ வரை கோதுமை வாங்கி அதை முதியோர் ஆசிரமத்திற்கோ, அல்லது குழந்தைகள் ஆசிரமத்திற்கோ தானமாக கொடுக்கவும். அதை அவர்கள் மாவாக அரைத்து சாப்பிட உணவாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
அடுத்தபடியாக, அடுத்த மாதம் முழுவதும் வீண் செலவுகளை குறைக்க வேண்டும் என்றால், மகாலட்சுமியின் அம்சமான பசு நெய் வாங்கி தானம் கொடுக்க வேண்டும். ஆதரவு அற்ற இல்லங்கள் நிறைய இருக்கிறது. ஆதரவு அற்ற குழந்தைகள் வாழும் ஆசிரமங்களுக்கு உங்களால் முடிந்த சுத்தமான பசு நெய் வாங்கி தானம் கொடுக்கலாம்.
உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மடப்பள்ளிகளுக்கு, நெய்வேதியம் செய்ய பசு நெய் வாங்கி தானம் கொடுக்கலாம். சில சிவன் கோவில்களில், பெருமாள் கோவில்களில் எல்லாம் தினமும் கோவிலிலேயே சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் செய்து இறைவனுக்கு நெய்வேத்தியமாக படைப்பார்கள்.
மாதத்தின் முதல் தேதியிலேயே நிறைய பேருக்கு சம்பளம் வராது. அடுத்தடுத்த தேதிகளில் தான் வரும். அதனால் செலவுக்கு உங்கள் கையில் பணம் இல்லை என்றாலும் நாளைய தினம் வாசனை நிறைந்த பூக்கள், உப்பு இதுபோல மலிவான மங்களகரமான பொருட்களை வாங்கி கொண்டு வந்து வீட்டில் இருக்கும் பெண்கள் கையில் கொடுத்தால், வீட்டில் சுபிட்சம் நிலவும்.
கோதுமை தானம், நெய் தானம் எது முடியுமோ அதை வாங்கி இயலாதவர்களுக்கு தானம் கொடுங்கள். 100 ரூபாய்க்கு தானம் கொடுக்க முடியும் என்றாலும், இதில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி, வீட்டு பக்கத்தில் கஷ்டப்படும் குடும்பத்திற்கு உங்கள் கையால் கொடுத்து விடுங்கள். அதை அவர்கள் சந்தோஷமாக சமையலுக்கு பயன்படுத்தி சாப்பிடும் போது, நம்முடைய கர்ம வினைகள் குறைந்து, நம்முடைய கஷ்டங்கள் குறைவும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·