Feed Item
·
Added a news

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த விசேட வேலைத்திட்டமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.  

பிரதான மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகள் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

காலாவதியான மற்றும் தகவல்கள் மாற்றப்பட்ட பொருட்கள் சந்தையில் விநியோகிக்கப்படுதல் மற்றும் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதிகளைத் தவிர்ப்பதனை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு மேலதிகமாக ஆடைகள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்துமாறு விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

000

  • 494