இப்போது ஜனாதிபதியாக இருக்கின்ற அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஜேவிபி MP ஆக இருந்தவேளையில் ஏன் இது ஒழிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினாரோ அதே காரணங்களைத் தான் நாமும் முன்பிருந்தும், இப்போதும் வலியுறுத்துகிறோம்.
ஈராண்டுகளுக்கு முதல் இந்தப் போராட்டத்துக்கு அழைத்தவர் இப்போது இடம்பெற்றுள்ள கைதுகள் பற்றி மௌனமாக இருக்கிறார்.கைதுகளுக்கான காரணங்கள் சட்டத்தில் உள்ள ஏனைய பிரிவுகள், ஊடக அறிக்கையில் காவற்துறை குறிப்பிட்டுள்ள குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்படட்டும்.
ஆனால் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மூலம் இடம்பெறும் கைதுகள் ஆபத்தானவை. அதை நாம் காலாகாலமாக அனுபவித்து வந்திருக்கிறோம்.
இதேவேளை 60 வயது நிரம்பிய அம்மா ஒருவர் திருகோணமலையில் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
60 வயதான அவர் பயங்கரவாததை எப்படி ஊக்குவித்திருப்பார் என்பதோ அல்லது அவர் சாட்சியாகத் தான் அழைக்கப்பட்டாரோ தெரியவில்லை.
ஆனால், இந்தச் சட்டத்தை ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் எதேச்சாதிகாரத்தோடு பயன்படுத்தினார்கள் என்பதை அறிந்தே JVP யினர் ஆட்சிக்கு வரும்வரை அதை எதிர்த்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
- 480