புளிய மரம், அரச, ஆலமரங்கள் :
தமிழ் நாட்டில் சாலை ஓரங்களில் நிறைய புளிய மரங்களையும், கர்நாடகாவில் அரச, ஆல மரங்களை நிறைய பார்க்கலாம்.
புளிய மரங்கள் ஏன் இயற்கையாக காடுகளில் காணமுடிவதில்லை. புளியமரம் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த மர வகைகள். அதனால் தென்னிந்திய இயற்கை காடுகளில் காணமுடியாது. இந்த மரம் மற்ற தாவரங்களைப் போல் பிற தாவரங்களை அழிக்க முயலாது. தான்பாடு என்று தனியாக நிற்கும். வளரும்.
அரேபியர்கள் இந்த புளியை tamar-ul-hind இந்திய பேரிச்சை பழம் என்றதால் ஆங்கிலத்திலும் டெமரிண்ட் ஆயிற்று!
இதை ஏன் சாலை ஓரமாக நட்டினார்கள். புளியமரத்துக்கு நீர் அதிகம் தேவையில்லை, மரதண்டுக்கு கொஞ்சம் இடம்தான் தேவை, வேர்கள் மற்ற மரங்களைப்போல் பக்கவாட்டாக வளராமல் மேல் தூக்காமல் பூமிக்கு கீழ்மட்டும் செல்லும்.
ரோடு பக்கம் பரந்த நிழல். புளியங்காய்கள் ,பஞ்சாயத்துக்களுக்கு கிராமங்களுக்கு வருமானம், உபயோகம். நீண்ட நூற்றுக்கணக்கான வருட ஆயுள். கிளைகள் ஒடிந்து புங்கை வேங்கை மரங்கள் போல் ரோடில் விழாது.
பலத்த காற்று ,மழை ,வெயில் தாங்கும்... அதனால்தான் ரோட்டுக்கு இரு பக்கமும் புளிய மரத்தை வைத்தார்கள்..
- 689