- · 5 friends
-
I
குடும்ப கஷ்டங்களுக்கு தீர்வு விரைவில் கிடைக்க எளிய பரிகாரம்
அமாவாசை அன்று குலதெய்வத்தை நம் வீட்டிற்குள் அழைத்து, இந்த பரிகாரத்தை செய்யும் பட்சத்தில், கஷ்டங்களுக்கு ஒரு தீர்வானது விரைவில் கிடைக்கும். உங்களுடைய வீட்டிலும் தீராத குடும்ப கஷ்டம், பண கஷ்டம் கடன் சுமை இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் அடுத்த அமாவாசைக்குள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
மாலை பூஜையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வாசனையாக இருக்கும் சாம்பிராணி தூபம் ஏற்றி குலதெய்வத்தின் பெயரை 108 முறை சொல்லி வீட்டிற்குள், குல தெய்வத்தை அழைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மஞ்சள் நிற காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில், கல் உப்பு ஒரு கைப்பிடி, ஒரு ரூபாய் நாணயம், ஒரு துண்டு வசம்பு, இதோடு வீட்டில் இருக்கும் தங்க நகை மோதிரமுமோ, மூக்குத்தியோ சின்ன அளவில் எது இருந்தாலும் வைக்கலாம்.
தங்கம் இல்லை என்றால் அந்த தங்கம் இல்லாமல் மற்ற பொருட்களை எல்லாம் வைத்து மஞ்சள் நிற துணியை ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை பூஜை அறையில் வைத்து மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.
கடன் தீர, அடமான நகை மீட்க அடமானத்தில் இருக்கும் சொத்துக்களை மீட்க, எந்த பிரச்சனை இருந்தாலும் அதை இறைவனிடம் முறையிடுங்கள். பிரார்த்தனை முடிந்தவுடன் இந்த முழுசை கொண்டு போய் நிலை வாசலில் மாட்டி விட வேண்டும்.
இந்த முடிச்சுக்கு உள்ளே நீங்கள் தங்கம் வைத்திருக்கிறீர்கள் என்றால், நிலை வாசலுக்கு உள்பக்கம் இருக்கக்கூடிய இடத்திலும் இந்த முடிச்சை மாட்டி வைக்கலாம் தவறு கிடையாது. அடுத்த அமாவாசை வரை இந்த முடிச்சு அப்படியே இருக்க வேண்டும்.
தினமும் விளக்கு ஏற்றும் போது, குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி ஊதுவத்தியை இந்த முடிச்சுக்கு காண்பிக்க வேண்டும். அடுத்த அமாவாசை வரும்போது உள்ளே இருக்கும் பொருட்களை எடுத்து மீண்டும் புதுப் பொருட்களை மாற்றி வைக்க வேண்டும்.
ஒவ்வொரு அமாவாசைக்கும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து முடிச்சை குலதெய்வத்தை நினைத்து நிலை வாசலில் கட்டி தொங்கவிடும் பட்சத்தில், உங்கள் வீட்டிற்குள் கடனோ கஷ்டமோ நுழைவதற்கு வாய்ப்பே கிடையாது. இந்த முடிச்சில் குலதெய்வமானது தங்கி உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் என்பதுதான் இந்த பரிகாரத்தின் நம்பிக்கை.
பல பேர் செய்து பலன் கண்ட பரிகாரம் இது. முழு நம்பிக்கையோடு இதை செய்தால் நிச்சயம் உங்களுடைய கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை உணருவீர்கள். ஒரு அமாவாசை அன்று செய்து பாருங்கள். அடுத்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களுக்கு நல்ல மாற்றங்கள் தெரியும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·