Category Jokes -
சார்...என்னோட bank cheque எப்போ clear ஆகும்...?3 நாள் ஆவும்ஏங்க...உங்க பேங்குக்கு எதிர்த்தாப்பல தான் என் பேங்க் இருக்கு...இதுக்கு 3 நாள் ஆகுமா...?எல்லா பேங்க்குக்கும் சில ரூல்ஸ் இருக்கு ..உங்க பேங்க் பக்கத்து ரூம்ல இருந்தாலும் கூட சில ரூல்ஸ் பாலோ பண்ணனும்...அப்படி என்னங்க பெரிய ரூல்ஸ்?இப்ப நீங்க வெளியே போறீங்க...வழில ஒரு சுடுகாடு வருது...அதுக்கு பக்கத்துல நீங்க போகும்போது திடீர்னு உயிர் போயிருச்சுன்னா, சுடுகாடு பக்கத்திலேயே இருக்குங்றதுக்காக அப்படியே தூக்கிட்டு போய் எரிக்க முடியுமா? அதுக்குன்னு சில சம்பிரதாயங்கள் இருக்குல்ல.அதே மாதிரி தான் இதுவும்...எதே...
இரண்டு பெண்மணிகள் அமர்ந்து ஒரு உணவகத்தில் காபி அருந்திக்கொண்டிருந்தார்கள் .அம்மணி 1: என் முதல் குழந்தை பிறந்த போது என் கணவர் எனக்கு ஒரு வைர அட்டிகை வாங்கித் தந்தார் ....அம்மணி 2: அவருக்கு ரொம்ப நல்ல மனசு ...அம்மணி 1: இரண்டாவது குழந்தை பிறந்த போது World டூர் கூட்டிண்டு போனார் ...அம்மணி 2: அவருக்கு ரொம்ப நல்ல மனசு ...அம்மணி 1: மூன்றாவது குழந்தை பிறந்ததும் இப்போ நாங்க இருக்கற பங்களாவை வாங்கி குடுத்துட்டார் ....அம்மணி 2: அவருக்கு ரொம்ப நல்ல மனசு ...அம்மணி 1: உனக்கு குழந்தைகள் பிறக்கும் போது உன் கணவர் என்ன பண்ணினார் ?அம்மணி 2: என்னை காந்தி மாதர் தமிழ் பயிற்சி மையத்துக்கு அனுப்பினார் ...அம்மணி 1: அங்கே என்ன கத்துகிட்டே ?அம்மணி 2: உன்னைய மாதிரி திமிரு பிடிச்ச பொம்பளைங்க பேசும்போது" போடி " அப்படின்ன
அடேய்!டேய் ரொம்ப குளிருது டா சொன்னத செய்டா...!?கொஞ்சம் இருங்கப்பா அதை தான் கூகுள்ல தேடிட்டு இருக்கேன்...என்ன கூகுள் லயா...!?ஆமாப்பா... இதுவரைக்கும் நிலாவுக்கு அமெரிக்கா ரஷ்யா சீனா இந்தியா இந்த நாலு நாடுகள் ராக்கெட்ட அனுப்பி இருக்கு...சரிடா...!நிலாவுக்கு 12 பேர் போய் வந்திருக்காங்க அத்தனை பேரும் அமெரிக்க காரனுங்க...!சரிடா அதுக்கு இப்ப என்ன...!?அதான்பா... நிலாவுக்கு மொத்தமா 72 தடவ ராக்கெட்ங்க போயிருக்கு... ஏழு தடவை மனுஷனுக்கு போய் இறங்கி இருக்காங்க 21 தடவை ரோவர் மாதிரியான ஆராய்ச்சி வாகனம் நிலவில் இறங்கி ரவுண்ட்ஸ் போய் வந்து இருக்கு...அட... இதை ஏன்டா இப்ப என்கிட்ட சொல்லிட்டு இருக்க...!?இருப்பா.. நிலாவுல ஒரு பொருள கொண்டு போய் வைக்கணும்னா தோராயமா 500 கோடி ரூபாய் செலவாகுமாம்... உன்கிட்ட 500 கோடி இ
கணவர் மனைவிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறார். நான் ஆஃபிஸில் இருந்து வர லேட்டாகும்! சூடாக சப்பாத்தியுடன் சன்னா மசாலா செய்து வைக்கவும்.மனைவியிடம் இருந்து நோ ரெஸ்பான்ஸ்.அடுத்த மெஸேஜில், எனக்கு தீபாவளி போனஸ் போட்டுட்டாங்க. வராமல் இருந்த இன்ஸெண்டிவ்வும் போட்டுட்டாங்க. தீபாவளிக்கு நீ கேட்ட மாதிரியே பட்டு புடவை எடுத்து தரேன்.மனைவியிடம் இருந்து உடனே பதில், லோட்டஸ் பிங்க் கலர்! அப்படியே நான் கேட்ட டிஸைன் தங்க நெக்லஸையும் மறந்துடாதீங்க.நான் முதலில் போட்ட மெஸேஸ் உனக்கு கிடைத்ததா? என செக் பண்ணதான் ரெண்டாவது மெஸேஜ். போனஸும் போடல! இன்செண்டிவ்வும் வர்ல! சப்பாத்தி, சன்னா மசாலா மறந்துடாத?ங்கொய்யாலே! யாருகிட்ட? எப்படி ஆஃப் பண்ணேனு பார்த்தியா?சற்று நேரத்தில் மனைவியிடம் இருந்து மெஸேஜ்! கோதுமை மாவு தீர்ந்து போ
ரோட்'ல ஒருத்தர் வெண்டக்காய் முனையை ஒடிச்சு போட்டுக்கிட்டே போனார்.அதைப் பார்த்த இன்னொருத்தர், ஏன் சார் இப்படி ஒடிச்சு போட்டுக்கிட்டே போறீங்க?ன்னு கேட்டார்.அதுக்கு அவர், என்னங்க பண்ணுறது, கடைல ஓடிச்சா கடைக்காரர் திட்டுறார், ஒடிக்காம வீட்டுக்குப் போனா, ஏன் ஒடிச்சுப் பாக்காம வாங்கி வந்தீங்கன்'னு வீட்ல திட்டுறாங்க, அதான்ங்க...!
இருட்டுக் கடை அல்வான்னு தப்பா வண்டிக்கு வச்சிருந்த கிரீச சாப்ட்டுட்டேன் டாக்டர்...அடப்பாவி... கிரீஸ் இனிக்காதே திங்கிறப்ப சந்தேகம் வரலையா...!?சந்தேகம் வந்துச்சி டாக்டர்... ஆனா அது சுகர் ப்ரீ அல்வாவா இருக்கும்னு தின்னுட்டேன்...
ஒரு தம்பதியினர் தங்களது 25 - வது திருமண நாளை கொண்டாடினர்கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டே மனைவி கேட்டாள்"என் சமையலில் இப்போது வித்தியாசம் தெரிகிறதா ? ""ஆம் தெரிகிறது "என்று கணவர் சொன்னார்" என்ன வித்தியாசம் தெரிகிறது ? "என்று மனைவி கேட்டாள்"முன்னாடி சாப்பாட்டுல கருப்பு முடி கிடக்கும் இப்போ வெள்ளை முடிகிடக்குது " என்றார் கணவர்அதன்பின் தன் மனைவியின் ருத்ர தாண்டவத்தை ரசித்துப் பார்த்தார்
மனைவி : ஏங்க, தீபாவளிக்கு நீங்க எனக்கு 10,000 ரூபாய் பட்டுப்புடவை வாங்கிக் கொடுக்குற மாதிரி கனவு கண்டேன்.கணவன்: ஓ அப்படியா? கனவுல நீ அந்த புடவைய கட்டி, நாம் தீபாவளி கொண்டாடிடலாம், நமக்கு செலவு மிச்சம், சரியா?மனைவி: ???
" என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது. அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்...""யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?""நம்ம கஷ்டத்தை சொன்னாதான் Bank லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"எந்த பேங்க் ஆக இருக்கும்?
ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்..ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்..