ஃபேனை 'மூன்'ல வைடா....
அடேய்!
டேய் ரொம்ப குளிருது டா சொன்னத செய்டா...!?
கொஞ்சம் இருங்கப்பா அதை தான் கூகுள்ல தேடிட்டு இருக்கேன்...
என்ன கூகுள் லயா...!?
ஆமாப்பா... இதுவரைக்கும் நிலாவுக்கு அமெரிக்கா ரஷ்யா சீனா இந்தியா இந்த நாலு நாடுகள் ராக்கெட்ட அனுப்பி இருக்கு...
சரிடா...!
நிலாவுக்கு 12 பேர் போய் வந்திருக்காங்க அத்தனை பேரும் அமெரிக்க காரனுங்க...!
சரிடா அதுக்கு இப்ப என்ன...!?
அதான்பா... நிலாவுக்கு மொத்தமா 72 தடவ ராக்கெட்ங்க போயிருக்கு... ஏழு தடவை மனுஷனுக்கு போய் இறங்கி இருக்காங்க 21 தடவை ரோவர் மாதிரியான ஆராய்ச்சி வாகனம் நிலவில் இறங்கி ரவுண்ட்ஸ் போய் வந்து இருக்கு...
அட... இதை ஏன்டா இப்ப என்கிட்ட சொல்லிட்டு இருக்க...!?
இருப்பா.. நிலாவுல ஒரு பொருள கொண்டு போய் வைக்கணும்னா தோராயமா 500 கோடி ரூபாய் செலவாகுமாம்... உன்கிட்ட 500 கோடி இருக்காப்பா...!?
500 கோடியா எதுக்குடா...!?
நீ தானப்பா ரொம்ப குளிருது ஃபேனை 'மூன்'ல வைக்க சொன்னே...!
நாசமா போனவனே ஃபேன் ஸ்பீட குறைச்சி வைக்க சொன்னதுக்கா இத்தனை அக்கப்போரு...