SMS
கணவர் மனைவிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறார். நான் ஆஃபிஸில் இருந்து வர லேட்டாகும்! சூடாக சப்பாத்தியுடன் சன்னா மசாலா செய்து வைக்கவும்.
மனைவியிடம் இருந்து நோ ரெஸ்பான்ஸ்.
அடுத்த மெஸேஜில், எனக்கு தீபாவளி போனஸ் போட்டுட்டாங்க. வராமல் இருந்த இன்ஸெண்டிவ்வும் போட்டுட்டாங்க. தீபாவளிக்கு நீ கேட்ட மாதிரியே பட்டு புடவை எடுத்து தரேன்.
மனைவியிடம் இருந்து உடனே பதில், லோட்டஸ் பிங்க் கலர்! அப்படியே நான் கேட்ட டிஸைன் தங்க நெக்லஸையும் மறந்துடாதீங்க.
நான் முதலில் போட்ட மெஸேஸ் உனக்கு கிடைத்ததா? என செக் பண்ணதான் ரெண்டாவது மெஸேஜ். போனஸும் போடல! இன்செண்டிவ்வும் வர்ல! சப்பாத்தி, சன்னா மசாலா மறந்துடாத?ங்கொய்யாலே! யாருகிட்ட? எப்படி ஆஃப் பண்ணேனு பார்த்தியா?
சற்று நேரத்தில் மனைவியிடம் இருந்து மெஸேஜ்! கோதுமை மாவு தீர்ந்து போச்சு. ரவை உப்புமா வேணா செஞ்சு வைக்கறேன்! உங்களுக்கு பிடிக்காதுனு தெரியும்! அதனால் சப்பாத்தி, சன்னா மசாலாவை ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, எனக்கும் பார்சல் வாங்கி வரவும்! எப்பூடி? எங்க லெவலே வேறதான்!
கணவர் 😪😪😪😪😪😪