புகழ்பெற்ற பின்னணிப் பாடகி, "இசைக்குயில்" என அழைக்கப்படும் எஸ். ஜானகி பிறந்தநாள் இன்று ((23 ஏப்ரல் 2026),
அவர் தனது 88-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
கனடாவில் பூமாலை (pollen) அலர்ஜியால் பாதிக்கப்படும் மக்களுக்கு 2026ஆம் ஆண்டில் வாழ்வதற்கு மிகவும் சவாலான நகரமாக விண்ட்சர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவா அடிப்படையிலான ஏரோபயோலொஜி (Aerobiology) ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் தகவலின்படி, கனடாவில் சுமார் 80 லட்சம் முதல் 1 கோடி மக்கள் வரை (ஐந்தில் ஒருவர்) மரங்கள், புல்வெளிகள் மற்றும் களைகள் மூலம் பரவும் பூமாலை அலர்ஜியால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் மூக்கடைப்பு, நீர்வடிவு, தும்மல், இருமல் மற்றும் கண் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஆய்வு தரவரிசை, பூமாலை பரவும் கால அளவு மற்றும் அதிக அல்லது மிக அதிக அளவிலான காற்றில் பரவும் பூமாலை நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அதிக பாதிப்பு உள்ள நகரங்கள் (2026)
1. விண்ட்சர்
2. ஹாமில்டன்
3. பேரி
4. விக்டோரியா
5. கிங்ஸ்டன்
ஆய்வில் குறிப்பிடப்பட்டதாவது, விண்ட்சர் நகரத்தில் சுற்றியுள்ள அடர்ந்த தாவர வளம், காலநிலை நிலைமைகள் மற்றும் அதிக அளவில் அலர்ஜி ஏற்படுத்தும் மரங்கள் (பர்ச், ஓக், ராக்வீட்) இருப்பதால் பூமாலை பரவல் அதிகமாக இருப்பதாகும்.
குறைந்த பாதிப்பு உள்ள நகரங்கள்
1. செயின்ட் ஜான்ஸ்
2. செயின்ட் ஜான்
3. ரெஜினா
4. மோன்க்டன்
5. ஹாலிஃபாக்ஸ் இந்த ஆய்வு, பருவகால அலர்ஜி பாதிப்புகள் கனடாவின் பல நகரங்களில் வாழ்வாதாரத்தை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
குற்றக் குழுக்கள் தெற்காசிய சமூகங்களை இலக்காகக் கொண்டு நடத்தும் மிரட்டல் வசூல் நடவடிக்கைகளில் இந்திய மாணவர்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கனடாவின் நிதி நுண்ணறிவு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய சிறப்பு அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் பண பரிவர்த்தனை நிறுவனங்கள் மிரட்டல் சம்பந்தப்பட்ட பணப்பரிவர்த்தனைகளை அடையாளம் காண பல்வேறு எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் ஆண்டுதோறும் வங்கிகள், கடன் சங்கங்கள், பங்குச் சந்தை நிறுவனங்கள், பண பரிமாற்ற சேவைகள், நிலமூலதன முகவர்கள் மற்றும் கேசினோக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பெறப்படும் கோடிக்கணக்கான தரவுகளை ஆய்வு செய்து பணமோசடி தொடர்பான தகவல்களை கண்டறிகிறது.
பின்னர், இந்த தகவல்கள் கனடிய பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்கு பகிரப்படுகின்றன.
2026ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 100க்கும் மேற்பட்ட மிரட்டல் தொடர்பான நிதி நுண்ணறிவு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது கடந்த இரண்டு ஆண்டுகளை விட அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தகவல்களில் 300க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் 63,000க்கும் அதிகமான நிதி பரிவர்த்தனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த மிரட்டல் நடவடிக்கைகள் தற்போது தனிப்பட்ட சம்பவங்களை தாண்டி, மாகாணங்களைக் கடந்து ஒருங்கிணைக்கப்படும் “தொடர்ச்சியான அழுத்த முயற்சி” ஆக மாறியுள்ளதாகவும், குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பர்ட்டா, மானிடோபா மற்றும் ஒண்டாரியோ மாகாணங்களில் அதிகமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டின் வழியே வேதாளத்தை விக்ரமாதித்தியன் சுமந்து வந்து கொண்டிருந்த போது, அந்த வேதாளம் அவனிடம் இந்த கதையை கூறியது. சொர்ணபுரி என்ற நாட்டை மன்னன் வீரபாகு சீறும் சிறப்புமாக ஆண்டுவந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. தனக்கு பிறகு தன் நாட்டை ஆள வாரிசு இல்லையே என்று கவலை கொண்ட மன்னன், வீரமிக்க ஒருவன் தன் காலத்திற்கு பிறகு இந்த நாட்டை ஆளவேண்டும் என எண்ணினான். இதை பற்றி தனது மந்திரியிடம் ஆலோசித்தான்.
அப்போது இந்நாட்டின் எல்லையிலிருக்கும் ஆசிரமத்தில் ஒரு துறவி, இளைஞர்களுக்கு வீரக்கலைகளை கற்றுத்தந்து, அவர்களை மிகச்சிறந்த வீரர்களாக்குவதாகவும், அங்கு சென்று பார்த்தால் இந்நாட்டை ஆளும் தகுதியுடைய நபர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார். அதன் படி மன்னன் வீரபாகுவும், அவன் மந்திரியும் அந்த ஆசிரமம் சென்று தங்களின் எண்ணத்தை அந்த துறவியிடம் கூறினர். இதை கேட்ட அந்த துறவி, தான் அவர்களுக்கு உதவுவதாக கூறி, தனது ஆசிரமத்தின் மிகச் சிறந்த வீரர்களான ராமன், ஜெயன், கௌதமன் என்ற மூவரை அழைத்து, ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்குமாறும், ஒரு மாதத்திற்கு பிறகு இந்த ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தங்களின் அனுபவத்தை கூற வேண்டும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
ஒரு மாதத்திற்கு பிறகு அந்த மூவரும் ஆசிரமத்திற்கு திரும்பினர். அங்கு மன்னன் வீரபாகுவும் அவனது மந்திரியும் அந்த துறவியுடன் இருந்தனர். அப்போது ராமன், தான் இந்த ஒரு மாத காலம் வடதிசை நோக்கி பயணித்ததாகவும், அப்போது ஒரு நாட்டின் மன்னனுக்கு எதிராக சில இளைஞர்கள் ஒருவனின் வழிகாட்டுதலின் படி புரட்சியில் ஈடுபட, காட்டின் மறைவான இடத்தில் ஆயுத பயிற்சி மேற்கொண்டிருந்ததாகவும், எனவே அக்கூட்டத்தின் தலைவனை தான் அம்பெய்தி கொன்று விட்டதாகவும் கூறினான். இப்போது ஜெயன், தான் தென் திசையை நோக்கி பயணித்ததாகவும், அந்த திசையின் பல இடங்களில் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் அதிகமிருந்ததால் அங்குள்ள இளைஞர்களுக்கு, தான் வாள் போர் கலையை கற்றுத்தந்து அவர்கள் தங்களை தற்காத்து கொள்ள தான் உதவியதாக கூறினான்.
மூன்றாவதாக கௌதமன், தான் கிழக்கு திசையை நோக்கி பயணித்ததாகவும், தனது வீரத்தை காட்டக்கூடியதற்குண்டான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லையென்றாலும் வழியில் காட்டின் ஓரத்திலுள்ள ஒரு குளத்தில் ஒரு குட்டி யானை சிக்கி தவித்ததைக் கண்டு, தான் அந்த ஊர் மக்களின் உதவியுடன் அந்த குட்டி யானையை மீட்டு அதன் கூட்டத்தில் சேர்த்ததாகவும், பிறகு மக்கள் அனைவருக்கும் பிறருடன் சண்டையிடாமல் வாழ்வதை பற்றி அறிவுரை கூறியதாகவும் கூறினான். இதையெல்லாம் கேட்ட வீரபாகுவும், அவன் மந்திரியும் வீரம் நிறைந்த காரியங்கள் செய்த ராமன், ஜெயன் ஆகிய இருவரில் ஒருவரை தங்கள் வாரிசாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தாலும் அந்த துறவியின் கருத்தை கேட்க விரும்பினர்.
சிறிது நேரம் ஆலோசித்த பின்பு கௌதமனை வாரிசாக தேர்ந்தெடுக்கும் படி கூறினார் அந்த துறவி. “விக்ரமாதித்தியா அந்த துறவி கௌதமனை வாரிசாக தேந்தேடுக்க கூறியது ஏன்? எனக் கேட்டது வேதாளம்.
“ராமன் ஜெயன் புரிந்தது வீரமிக்க செயல்கள் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் ஒரு நாட்டை நிர்வகிக்க வெறும் வீரம் மட்டும் போதாது. அம்மக்களிடம் உள்ள ஏற்ற, தாழ்வுகளை நீக்கி அவர்களிடம் ஒரு ஒற்றுமை உணர்வு ஏற்படுத்தும் திறன் வேண்டும். அது கௌதமனிடம் அதிகமிருந்தது. மேலும் கௌதமனுக்கு வீரத்தை காட்டக் கூடிய சூழ்நிலை தான் அமையவில்லையே தவிர அவன் ஒன்றும் கோழையல்ல. எனவே கௌதமனை வாரிசாக ஏற்கும் படி அந்த துறவி கூறினார்” என விக்ரமாதித்தியன் கூறிய பதிலைக் கேட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில், என்.டி.ராமாராவின் ஆட்சியை கவிழ்த்து முதல்வரான, நாதள்ள பாஸ்கர் ராவ் (90) நேற்று காலமானார்.
வழக்கறிஞரான நாதள்ள பாஸ்கர் ராவ், காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1978-ல் எம்எல்ஏ ஆனார். இதையடுத்து சென்னா ரெட்டி அமைச்சரவையில் இடம் பிடித்தார். 1982-ல் என்.டி.ராமாராவ் தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி உருவானதில் முக்கியப் பங்கு வகித்தார். 1983-ல் ஆந்திர முதல்வராக என்.டி.ராமாராவ் பதவியேற்றார். அப்போது பாஸ்கர் ராவ் நிதி அமைச்சரானார். 1984-ல் என்டிஆர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
அப்போது அவரது ஆட்சியை கவிழ்த்து, ஆகஸ்ட் 16, 1984-ல் ஆந்திர முதல்வரானார். இதற்கிடையில் நாடு திரும்பிய என்.டி.ஆர், நீதி கேட்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து பாஸ்கர் ராவ், ஒரு மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வராக என்டிஆர் மீண்டும் பதவியேற்றார். நாதள்ள பாஸ்கர் ராவ், 1998-ல் காங்கிரஸ் எம்பியாக கம்மம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ல் பாஜகவில் இணைந்தார்.
பாஸ்கர் ராவ் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். இவரது மகன் நாதள்ள மனோகர், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்து, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் கூட்டணி அரசில் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். பாஸ்கர் ராவின் இறுதிச் சடங்குகள் இன்று ஹைதராபாத் பஞ்சகுட்டா மயானத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் ஈடேறும். மனை சார்ந்த செயல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த செயல்களில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்கள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
ரிஷபம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும் லாபமும் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கலைபணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மிதுனம்
உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்வதை குறைத்துக்கொள்ளவும். வேலையாட்கள் வழியில் அனுசரித்து செல்லவும். மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்டஎண் : 8
அதிர்ஷ்டநிறம் : அடர் நீலம்
கடகம்
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். பயணங்கள் மூலம் மனதளவில் மாற்றங்கள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளை பார்க்கவேண்டிய சூழல் அமையும். கால்நடைகளிடம் கவனத்துடன் இருக்கவும். துணிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
சிம்மம்
உறவினர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். விவேகமான செயல்பாடுகள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். நிர்வாக சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
கன்னி
சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். சுப காரிய முயற்சிகள் கைகூடும். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் மறையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
சுப காரிய முயற்சிகள் கைகூடும். மனதில் நினைத்திருந்த சில காரியங்கள் நிறைவேறும். சூழ்நிலை அறிந்து விட்டுக்கொடுத்து செயல்படவும். வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் திறமைகள் வெளிப்படும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
விருச்சிகம்
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல்நிலையில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். வாகன பயணங்களில் நிதானம் அவசியமாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மகரம்
சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிராக இருந்தவர்களின் பலம் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படும். கோபதாபங்களை குறைத்துக்கொள்ளவும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்டஎண் : 9
அதிர்ஷ்டநிறம் : இளம் சிவப்பு
கும்பம்
குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். நிர்வாக சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம்
குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணி நிமித்தமான பயணம் ஏற்படும். பழைய சிந்தனைகள் மூலம் நெருக்கடியான சூழல்கள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை 23.4.2026
இன்று அதிகாலை 03.38 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று அதிகாலை 03.02 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.
இன்று காலை 10.36 வரை சுகர்மம் . பின்னர் திருதி.
இன்று அதிகாலை 03.38 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 02.49 வரை கரசை. பிறகு வனிசை .
இன்று அதிகாலை 05.59 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
அநேகருக்கு பித்தம் தலைக்கேறி, உடல் சூட்டினால் ஏற்படும் உபாதைகள் சர்வ சாதாரணம். இவற்றுக்கான சில அற்புதமான, எளிமையான தீர்வுகள் நமது சமையலறையிலேயே இருக்கின்றன. அவை இதோ:
அகத்திக்கீரையின் ஆற்றல்:
அரிசி கழுவிய நீரில் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டால், உடல் சூடு தணிந்து, பித்தம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
இதை நீங்களும் வாரம் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்! இயற்கையான முறையில் ஆரோக்கியம் பெறுவோம்.
1. ஒரு குடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது. ஆனால், தலைவர் இரண்டு இடங்களில் போட்டியிடலாம்.
2. ஒரு குடிமகன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது.
ஆனால் ஒரு அரசியல்வாதி சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம்.
3. ஒரு குடிமகன் வங்கியிலோ, அரசாங்கத்திலோ அல்லது தனியார் நிறுவனத்திலோ, ஒரு வேலையைப் பெற, பட்டதாரியாக இருக்க வேண்டும்.
ஆனால், ஒரு அரசியல்வாதி பள்ளிக்கே சென்றதில்லை என்றாலும், நாட்டின் கல்வி அமைச்சராகலாம்.
4. ஒரு குடிமகன், இராணுவத்தில் சேர குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்.
ஆனால் ஒரு அரசியல்வாதி படிப்பறிவில்லாதவராகவும், மற்றும் 90 வயதானவராக இருந்தாலும், அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கலாம், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு கட்டளையிடலாம்.
5.ஒரு அரசு ஊழியர் 30 முதல் 35 ஆண்டுகள் சேவைக்குப் பிறகும் ஓய்வூதியம் பெற நிபந்தனைகள் உண்டு.
ஆனால் ஒரு எம் எல் ஏ, எம்பிக்கு எந்த நிபந்தனையும், இன்றி வாழ் நாள் முழுதும் ஓய்வூதியம் கிடைக்கும்.
- திரு. டி.கே. ஸ்ரீவாஸ்தவா,தலைமை அரசு வழக்கறிஞர், பம்பாய் உயர் நீதிமன்றம், பம்பாய்.
----------------------------------------------------------
குடிமகனுக்கு ஒரு நீதி, அரசியல்வாதிக்கு ஒரு நீதி என்று இருக்கும் தற்போதைய சட்டங்களை மாற்றி அமைக்க தேர்தல் சீர்திருத்த மசோதா ஒன்றை எந்தக் கட்சியாவது நாடாளுமன்றத்தில் கொண்டு வருமா?
மற்ற எல்லாவற்றையும் விடுங்கள்.
சட்ட மன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் விருப்பம் தெரிவிக்கும் வேட்பாளர்கள் எழுத்து மற்றும் நேர்முகம் என்று இரண்டு கட்டங்கள் கொண்ட ஒரு தகுதித் தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்கிற ஒரே ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருவார்களா?
அப்படி ஒரு மசோதாவை முதலில் சிந்திக்கக்கூட மாட்டார்கள். அப்படியே கொண்டுவந்தாலும் அந்த மசோதாவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டுகூட விழாது. ஏன் என்கிற காரணத்தைச் சொல்ல அவசியமில்லை.
குடல்_வற்றல்...ஆட்டுக்குடல்..
என்றும் இன்னும் பலபெயர்களில் அழைக்கப்படும் இத்திண்பண்டம் 1980களில் தமிழகம் முழுதும் பரவியது.இன்றுவரை இதன் சுவை யாவர்க்கும் இனியதே.இதனை உண்பதால் உடல்கேடோ..
நோயோ வந்ததாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.ஆனால் இது ஏனோ தமிழ்நாடு கேரளா ஆந்திரா வைத் தாண்டவே இல்லை..பாழ்படுத்தும் பானிபூரி பலநூறு மைல்கள் கடந்து இங்கு காலூன்றி உள்ளது. பெரும்தொழில்வாய்ப்பை உண்டாக்கித் தந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தொழில்முனைவர்களில் யாரோ ஒருவர் இத்திண்பண்டத்தின்மீது சற்றே_கவனம் செலுத்தினால் தரமேம்பாடும்,
வணிகநோக்கிலான வடிவ மேம்பாடும், உற்பத்தியில் தொழில்நுட்ப மேம்பாடும், ஏற்றுமதி தரத்திலான குழந்தைகளைக்கவரும் வண்ண வடிவமைப்போடு கூடிய பொட்டல மேம்பாடும் பெற்று உலகளாவிய கவனம் பெறும்.
மற்றப்பொருட்களைவிட உணவுப்பொருட்கள் உலக அளவில் வணிகவாய்ப்பை உடையன.உலகநாடுகளுக்கு
இந்திய உணவுகளின் மீது நம்பிக்கையும் மரியாதையும் உண்டு. அதிலும் தமிழகத்தின் உணவுகளுக்குப் பெரும்மதிப்பே உண்டு..
லேஸ் ,குர்குரே போன்ற நொறுக்குத் தீனிவகைகள் குழந்தைகளை ஆட்டிப்படைக்கின்ற விதத்தை நாமறிவோம்.
ஆட்டுக்குடல் வற்றலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரக்கூடியது.தமிழகத்தின் சிறு குறு தொழில் முனைவோர்கள் யாராவது மாநில அளவிலாவது முயற்சிசெய்யலாமே...
இரவு தூங்கும் முன்பு இத ஒரு டீஸ்பூன் சாப்பிடுங்க....
ஆப்பிள் சீடர் வினிகரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் பழக்கத்தை நம்மில் பலர் இன்று பின் பற்றி வருகின்றார்கள்.
ஆனால் இது அமிலத்தன்மை வாய்ந்தது என்பதால் வெறும் வயிற்றில் குடிப்பது அவ்வளவு நல்லதல்ல.
ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடித்தால் அது பல நன்மைகளை வழங்கும்.
குறிப்பாக ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடிப்பதால் எடை குறையும் அதிசயம் மிக வேகமாக நடக்கும்.
எடையைக் குறைக்க எப்படி உதவும்?
நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால் ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவி புரியும்.
உடல் கொழுப்பைக் குறைக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வினிகரில் உள்ள அசிடிக் அமிலம் உடலில் கொழுப்பு தேங்குவதை குறைக்கும், பசியை அடக்கும், செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் கொழுப்பு எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கும்.
ஆனால் எக்காரணம் கொண்டும் ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே குடிக்கக்கூடாது.
இல்லாவிட்டால் அது குமட்டலுக்கு வழிவகுப்பதுடன், பற்களின் எனாமலை அரித்துவிடும்.
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளிகளும் எடையை குறைக்க விரும்பினால் மருத்துவ ஆலோசனையுடன் அச்சமின்றி ஆப்பிள் சீடர் வினிகரை இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் எடுத்து கொள்ளலாம்.
சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் ஆப்பிள் சீடர் வினிகரை தொடர்ந்து உட்கொள்வது மிகவும் நல்லது.
இது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்வது இன்சுனில் உணர்திறனை அதிகரிப்பதில் நன்மை பயக்கும்.
குறிப்பாக ஆப்பிள் சீடர் வினிகரை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் குடிப்பது அதிக நன்மை பயக்கும்.
நல்ல தூக்கம் கிடைக்கும் :
தூக்கமின்மை பிரச்சனையானது உடல் பருமன் மற்றும் எரிச்சல் போன்வற்றிற்கு வழிவகுக்கும். ஆனால் இரவு தூங்கும் முன் ஆப்பிள் சீடர் வினிகரைக் குடித்தால், இரவு நேரத்தில் 7-8 மணிநேரம் நல்ல ஆழமான தூக்கத்தைப் பெறலாம்.
எனவே இனி தூங்கும் முன்பு ஆப்பிள் சீடர் வினிகரை பருகுங்கள்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குழந்தைகள் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். கடுமையான முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். பத்திரிகை துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அண்டை அயலார் ஆதரவுடன் செயல்படுவார்கள். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
ரிஷபம்
அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பண விஷயத்தில் சிக்கனம் வேண்டும். பொன் பொருள் சேர்க்கை சார்ந்த எண்ணம் மேம்படும். வாக்கு சாமர்த்தியங்களால் நினைத்ததை முடிப்பீர்கள். வெளியூர் பொருள்களில் கவனம் வேண்டும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். எதிர்பாராத சில மாற்றம் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். பூர்விக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். நேர்மறை சிந்தனையுடன் செயல்பட வேண்டும். மனதளவில் இருந்து வந்த இறுக்கங்கள் குறையும். கால்நடை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
பயணம் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தனவரவுக்கு ஏற்ப விரயங்களும் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். கடன் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். புதிய வீடு மற்றும் நிலம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
சிம்மம்
மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி காண முயற்சிகள் கைகூடும். இழுபறியாக இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சூழ்நிலை அறிந்து பேசுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கன்னி
நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் கைக்கூடி வரும். புது விதமான ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். பணிகளில் இருந்து வந்த மந்த தன்மை படிப்படியாக குறையும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். முயற்சி கைகூடும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
துலாம்
உத்தியோக பணிகளில் உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். புனித தலம் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். குழந்தைகளின் உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
விருச்சிகம்
எண்ணிய சில பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். அதிகாரிகள் இடத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். நண்பர்களுடன் சில நெருடல்கள் தோன்றி மறையும். மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நிதானத்தை கடைபிடிக்கவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பயணங்களால் ஆதாயமும் அறிமுகமும் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலையாட்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். அசதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கும்பம்
கற்பனை கலந்த உணர்வுகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குண இயல்புகளில் மாற்றங்கள் காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
விவசாய பணிகளில் நுட்பமான ஆலோசனைகள் கிடைக்கும். உயர் கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய துறை சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். மதிப்புகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்












