
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்கு சுனாமி எச்சரிக்கை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்கு சுனாமி தொடர்பில் ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் Petropavlovsk நகரை ரிக்டர் அளவுகோலில் 8.8ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, ஜப்பான், அமெரிக்கா முதலான பல நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வடக்கு மற்றும் மத்திய கரைப்பகுதிகள், வான்கூவர் தீவின் மேற்கு மற்றும் வடகிழக்கு கரைப்பகுதிகளுக்கும் சுனாமி தொடர்பில் ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.
ஜோர்டன் நதி முதல் கிரேட்டர் விக்டோரியா வரையிலான ஜுவான் டி ஃபூகா ஜலசந்தி, Saanich தீபகற்பம் உட்பட பல இடங்களுக்கும் சுனாமி ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவைப் பொருத்தவரை, மக்கள் கடலுக்குள் இறங்கவேண்டாம் என்றும், அலைகளை வேடிக்கை பார்க்க கடற்கரைக்குச் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அலைகளும் நீரோட்டமும் தண்ணீரில் இறங்கும் மக்களை மூழ்கடிக்கவும், காயப்படுத்தவும் கூடும் என்பதால் அதிகாரிகள் அனுமதிக்கும் வரை, தாழ்வான கடற்கரை பகுதிகள், துறைமுகங்கள் முதலான இடங்களைத் தவிர்க்குமாறும் சுனாமி ஆலோசனையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.