
பர்மா உணவுகள்
- சமீப காலமாக, இந்தியாவில் - சென்னை பாரிமுனையில், பர்மா உணவுகள் பிரபலம். இங்குள்ள செகண்ட் பீச் லைன் என அழைக்கப்படும் தெரு, அத்தோ கடைகளால் பிசியாக இருக்கிறது.
- மாலை, 4:00 மணிக்கு துவங்கும் வியாபாரம், இரவு, 10:00 மணி வரை, களை கட்டுகிறது.
- அத்தோ, மொய்ஞா, தவுசா மற்றும் பேஜோ என, நான்கு வகைகள் மட்டுமே பர்மா உணவு பட்டியலில் உள்ளன. அப்பளம் போல இருக்கும் பேஜோவை நொறுக்கி, வாழைத்தண்டு சூப் மற்றும் முட்டை சேர்த்து, கலக்கி தருகின்றனர்; மற்றவற்றில் சூப் சேர்த்து சாப்பிடலாம்.
- நமக்கு, இட்லி, தோசை மாதிரி, பர்மாவில் பிரதான காலை உணவு, அத்தோ. இது, சென்னைக்கு அறிமுகமாகி, 50 ஆண்டுகள் ஆகின்றன.
- மியான்மரில் வசித்த, பாத்திமா பீவி என்ற தமிழ் பெண் அகதியாக சென்னை வந்தார்.வட சென்னையின், சர்மா நகரில், சாலையோரத்தில், சிறிய கடை ஆரம்பித்தார். அதன்பின், தற்போது, பல கடைகள் பெருகியுள்ளன.
- அரிசி மற்றும் பொட்டுக் கடலை மாவு சேர்த்து, சப்பாத்தி போல் பிசைந்து, அதை அச்சில் இட்டு நூடுல்ஸ் போன்று பிழிகின்றனர். அதனுடன், பூண்டு, வெங்காயம், கொத்துமல்லி, புளி, எலுமிச்சை, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறினால், மொய்ஞா தயார்.
- இதனுடன், முட்டைக்கோஸ் சேர்த்தால் அத்தோ. இதில் சேர்க்கும் அனைத்தும், வேக வைக்காத பச்சைக் காய்கறிகள் என்பதால், உடலுக்கு தீங்கு விளைவிக்காது; எளிதில் ஜீரணம் ஆகும்.
- இதை சாப்பிட்டவர்கள் கூறக் கேட்டு, பலரும் வந்து சாப்பிட, இப்படியே, இந்த உணவு பிரபலமாகியது. அசைவ விரும்பிகளுக்காக முட்டை மசாலா மற்றும் சிக்கன் வகைகளும் இருக்கிறது
- . திரை பிரபலங்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் என பலரும், அத்தோ உணவை தேடி வந்து சாப்பிடுகின்றனர்.
- சென்னை, செங்குன்றம், வியாசர்பாடி, பாரதியார் நகர், எண்ணுார் மற்றும் கும்மிடிப்பூண்டி போன்ற பகுதிகளிலிருந்து, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் என, தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் பிரபலமாகி வருகிறது, அத்தோ!