·   ·  3 videos
  •  ·  0 friends
  • 388
  • More

பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்

பலாலியி வந்திறங்கிய DPA நிறுவனத்தின் விமானம்

Comments (0)
Login or Join to comment.
·
Added a post

ரத்தினகிரியை ஆண்ட ரத்தினசேனன் ஒரு பெரிய விருந்து அளித்தான். அப்போது பொழுதைக் கழிக்கத் தன் பக்கத்திலேயே தன் விதூஷகனையும் (அவை விகடகவி) சாப்பிட உட்கார வைத்துக்கொண்டான்.

விருந்தில் லட்டு பரிமாறப்பட்டது. பரிமாறுபவர் தவறுதலாக விதூஷகன் இலையில் மட்டும் லட்டு வைக்க மறந்துவிட்டார். தனக்கு லட்டு இல்லை என்பதைக் கண்ட விதூஷகன், அரசனிடம் தந்திரமாக ஒரு கேள்வி கேட்டான்.

"அரசே, திடீரென இடி இடித்து உங்கள் எல்லோர் தலை மீதும் விழுந்தால் என்ன செய்வீர்களாம்?" என்று கேட்டான்.

அரசன் சிரித்துக்கொண்டே, "எல்லோர் தலையிலும் விழும் இடி உன் மீது மட்டும் விழாதா?" என்று கேட்டான்.

அதற்கு விதூஷகன், "விழாது. நானே ஒரு தனிப்பிறவி. பாருங்களேன்... உங்கள் எல்லோர் இலையிலும் லட்டு விழுந்தது, ஆனால் என் இலையில் மட்டும் விழவில்லையே!" என்றான்.

விதூஷகனின் இந்தச் சமயோசித பதிலைக் கேட்டு ரசித்த அரசன், சிரித்துக்கொண்டே அவனுக்கும் லட்டு கொண்டு வந்து தரும்படி உத்தரவிட்டான்.

  • 32
  • 35
  • 34
·
Added a post

திருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன.

தாயார் தன் மகளைப் பார்த்து, 'என்ன விஷயம்?' என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தயாரிடம் சொன்னாள். இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மகள்.

இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார். மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி, எரியும் அடுப்பிலே அதையெல்லாம் எடுத்து வைத்தார்.

சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்திலே கேரட்டை எடுத்துப் போட்டார். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை போட்டார். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் காப்பித்தூளை போட்டார்.

அந்தப் பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில், அந்தப் பாத்திரங்களை கீழே இறக்கி வைத்தார் தாயார். கேரட்டையும், முட்டையையும் எடுத்து வெளியே வைத்தார்.

காபியையும் ஒரு கோப்பையிலே ஊற்றினார். மகளே இதெல்லாம் என்ன என்று தெரிகிறதா? என்று கேட்டார் தாயார். அதற்கு அது கேரட், அடுத்தது முட்டை, இது காப்பி என்று கூறினாள் மகள்.

சரி, கேரட்டை தொட்டுப் பார் எப்படியிருக்கு? என்று கேட்டார் தாயார். தொட்டுப் பார்த்து, ரொம்ப மென்மையாக இருக்கு என்று கூறினாள் மகள்.

முட்டையைத் தொட்டுப் பார்த்து எப்படியிருக்கு என்று சொல் என்று கூறினார் தாயார்.

கொஞ்சம் கடினமாக இருக்கிறது என்று சொன்னாள் மகள். அடுத்தபடியாக காப்பியை எடுத்து குடி என்றார் தாயார்.

காபியை குடித்துவிட்டு, ரொம்ப சுவையாக இருக்கிறது என்று கூறினாள் மகள். எதற்கு இந்த வேடிக்கை? என்று தாயிடம் கேட்டாள் மகள்.

அதற்கு பதில் அளித்த தாய், மகளே கொஞ்ச நேரத்திற்கு முன்பு இந்த மூன்று பொருள்களையும் ஒரே மாதிரி தண்ணீரில்தான் கொதிக்க வைத்தோம்.

ஒரே நேரத்தில் கீழே இறக்கி வைத்தோம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. இந்தக் கேரட் ஆரம்பத்திலே எவ்வளவு கடினமாக இருந்தது? ஆனால் தண்ணீரில் கொதிக்க வைத்தவுடன் தன்னுடைய இயல்புக்கு நேர்மாறாக மென்மையானதாக மாறிவிட்டது.

இந்த முட்டைக்குள்ளே திரவ நிலையிலே இருந்த கரு கொதிக்க வைத்ததும் கடினமாக ஆகிவிட்டது. காப்பியைபார் எவ்வளவு சுவையாக மாறிவிட்டது. இது போலத்தான் வாழ்க்கையும் என்றார் தாய்.

  • 39
·
Added a post

ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.

‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்', என்றது.

‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு', என்றார் சாது.

தலையசைத்து விட்டு பறந்தது பறவை. பக்கத்தில் இருந்த சீடனிடம் பேசினார் சாது.

‘சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்', என்றார் சாது.

ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.

‘ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன். இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்', என்றது பறவை.

‘பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார் சாது.

பதினைந்து நாட்கள் ஓடிப்போனது. மீண்டும் பறவைகள் திரும்ப வந்தன.

‘ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள்', என்றது பறவை.

சாது யோசித்தார். கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம் கொடுத்தார்.

‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்', என்றார் சாது.

பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன.

‘ஐயா! உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்', என்றது பறவை.

‘பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?' என்று கேட்டார் சாது. . . . . . . பறவை பேசியது.

‘ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது. ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் “குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”, என்ற உண்மை புரிந்தது', என்று சொல்லி விட்டு பறந்தது பறவை.

சாதுவைப் பார்த்தான் சீடன். சாது பேசினார்.

‘சீடனே! பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது. அதற்குக் காரணம் ‘துணை'. ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை. இலக்கை அடைய ‘குச்சி' என்ற கருவி அவசியமாகிறது. அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது. ஆனால், அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது. பறவைகளுக்கு ‘குச்சியை'ப் போல மனிதர்களுக்கு ‘இல்லறம்' கருவியாகிறது. ‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை. ‘இல்லறம்' என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், ‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'. இதைப் போல, கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில் இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது.

இது இல்லற ரகசியம்.

  • 40
·
Added a post

காட்டில், ஒரு சிங்கமும், மானும் நண்பர்களாக இருந்தன. இரண்டும் தங்கள் நட்பிற்காக, ஓர் ஒப்பந்தம் போட்டிருந்தன.

'நீ தான், என் உணவு என்றாலும், ஒரு போதும் உன்னை சாப்பிட மாட்டேன்...' என்றது, சிங்கம்.

'உனக்கு என்ன ஆபத்து வந்தாலும் காப்பாற்றுவேன்...' என சத்தியம் செய்தது, மான். அந்த மானை குருவாக கொண்டிருந்தது, ஒரு சிறிய மான் குட்டி.

இந்நிலையில், நான்கு நாட்களாக சிங்கத்தை காணாமல், பல இடங்களில் தேடி வந்தது, மான்.

சிஷ்யனான குட்டி மான் ஓடிவந்து, 'உங்கள் நண்பர், ஒரு வலையில் மாட்டிக் கொண்டிருக்கிறார். என்னால், அந்த வலையை அறுக்க முடியவில்லை. உடனே வாருங்கள்...' என அழைக்க, ஒப்பந்தப்படி சிங்க நண்பனைக் காப்பாற்றச் சென்றது, மான்.

பலவீனமான குரலில், 'ஒரு வேடன் விரித்த வலைக்குள் மாட்டிக் கொண்டு, நான்கு நாட்களாக தவிக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் அவன் வந்து விடுவான்; அதற்குள் என்னை காப்பாற்று...' என்றது, சிங்கம்.

தன் வாயால், வலையை மெதுவாக கடித்து அறுக்க ஆரம்பித்தது, மான்.

'இந்த வலையை நீங்கள் வேகமாக ஓர் இழு இழுத்தால் போதும்; ஆனால், மெதுவாக கடிக்கிறீர்களே... வேகமாக இழுங்கள்...' என்றது, குட்டி மான்.

சிரிப்பையே பதிலாக தந்து, மீண்டும் மெதுவாக வலையை கடித்தது, பெரிய மான்.

'சீக்கிரமாக காப்பாற்று...' என கெஞ்சியது, சிங்கம்.

'இப்படி மெதுவாக வலையை கடிக்கிறீர்களே... இது, நண்பனுக்கு செய்யும் துரோகம் இல்லையா... நான், உங்களை போல பெரிய ஆளாக இருந்திருந்தால், ஒரே கடியில் வலையை அறுத்து, சிங்கத்தை காப்பாற்றி இருப்பேன்...' என்றது, குட்டி மான்.

இப்போதும் புன்னகைத்து விட்டு, வலையை மெதுவாகவே அறுத்துக் கொண்டிருந்தது, பெரிய மான்.

சற்று துாரத்தில் வேடன் வருவதை பார்த்ததும், வலையை வேகமாக ஓர் இழு இழுத்தது, மான். வலை அறுந்து, சிங்கம் ஒருபுறமும், மான்கள் இன்னொரு பக்கமுமாக தப்பித்து ஓடின.

'வேடனை பார்த்தவுடன் வேகமாக வலையை அறுத்தீர்களே... அதை முன்பே செய்திருக்கலாமே, எத்தனை முறை சொன்னேன்; ஏன் வலையை மெதுவாக அறுத்தீர்கள்?' என கோபப்பட்டது, குட்டி மான்.

'குழந்தாய்... வேகமாக ஒரே தடவை இழுத்து, என்னால் வலையை அறுத்திருக்க முடியும். ஆனால், உள்ளே இருக்கும் சிங்கம், நான்கு நாட்களாக பட்டினி. 'என்னை மட்டும் சாப்பிட மாட்டேன்...' என்று மட்டுமே ஒப்பந்தம் போட்டிருக்கிறதே தவிர, உன்னோடு அல்ல.

'வெளியே வந்த வேகத்தில் உன்னை சாப்பிட்டிருக்கும். அதனால் தான், வேடன் வரும் வரை வலையை மெதுவாக அறுத்தேன்...' எனக் கூறி புன்னகைத்தது, குருவான பெரிய மான்.

நாம் அனைவருமே அந்த குட்டி மானைப் போல தான், அவசரமாக முடிவெடுக்கிறோம்; நிதானிப்பதில்லை. தான் நினைப்பதே சரி என்ற பிடிவாதம். இதெல்லாம் நமக்கே ஆபத்தாக வரும். அப்போது, குருவானவரே நம்மை காப்பாற்றும் வல்லவர். குரு பக்தியே திருவருளை நமக்கு கூட்டித் தரும். இதனால் தான், சிவபெருமானையே குரு என்று குறிப்பிடுகிறார், திருமூலர்!

  • 49
·
Added a post

நாகப்பட்டினம் பொருள்வைத்தசேரி கிராமத்தில் வசித்த சிற்பி சிறந்த முருக பக்தர். அழகன் முருகனின் சிலையை வடிக்க வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையாய், சோழ அரசர் (அவ்வூரை அப்போது ஆண்டவர் - பெயர் குறிப்பு இல்லை) சிற்பியை அழைத்து முருகன் சிலை வடிக்க ஆணையிட்டார்.

சிற்பியும் ஆனந்தமாய் பக்தியுடன் முருகன் சிலையை வடிக்கலானார். சிலநாட்கள் சென்றன, அரசன் நகர்வலம் செல்லும் சமயத்தில் சிற்பியின் முருக சிலைக்கு உயிர் ஓட்டம் உள்ளதை கண்டு அதிசயித்தார்.

சோழர்கள் ஆட்சி அதுவும் தன் ஆட்சியில் உருவாக்கப் பட்ட இந்த சிலை போல் வேறெங்கும் இருக்கக் கூடாது என எண்ணிய அரசர், சிற்பியின் கட்டை விரலை வெட்டிவிட்டார்.

சோழமன்னரால் சிற்பியின் கைகட்டைவிரலை வெட்டி ஊனமாக்க முடிந்ததே தவிர, சிற்பியின் தெய்வீக திறமையை மனதுணிவை ஊனமாக்க முடியவில்லை. வருவது வரட்டும். போவது போகட்டும். யாவும் இறைவனின் விருப்பம் அவனின் திருவிளையாடல் இது. ஆகவே என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக அமையும் என்ற மன தெளிவோடு இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு, அந்த ஊரைவிட்டு வேறுஒரு கிராமத்துக்கு சென்று விட்டார்.

“ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது” என்ற பழமொழிக்கேற்ப சிற்பி புதிதாக குடியேறிய அந்த கிராமத்திலும் ஒரு முருகன் சிலையை செய்ய வேணடும் என்று ஆவல் கொண்டார். அதனால் பல இடங்களின் முருகபெருமான் திருஉருவச்சிலையை செய்ய நல்ல உயிர் ஓட்டம் இருக்கிற கல்லை தேடினார். அவர் எதிர்பார்த்தது போல ஓர் இடத்தில் இரத்தம் போன்ற சிவப்பு ரேகை கொடிகளை கொண்டதும், நீலமும், கருமையும் கலந்ததுமான உயிரோட்டம் உள்ள ஒரு சிறந்த கல்லை கண்டுபிடித்து அந்த கல்லிலேயே முருகனின் சிலையையும் மயிலையும் செதுக்கி வடித்து கொண்டு இருந்தார் சிற்பி.

இந்த கிராமத்தை முத்தரசன் என்ற குறுநில மன்னன் ஆட்சிசெய்து கொண்டு இருந்தார். அவரிடம் ஒருவர் சென்று, “அரசே நம் ஊருக்கு ஒரு சிற்பி வந்திருக்கிறார். அவருக்கு கையில் கட்டைவிரல் இல்லை. இருந்தாலும் அவர் ஒரு முருகன் சிலையை உருவாக்கி கொண்டு இருக்கிறார். அந்த சிலையை பார்த்தால் முருகபெருமானே நேரில் காட்சி தருவது போல் அத்தனை தத்ரூபமாக இருக்கிறது” என்றார். இதை கேட்ட முத்தரசன், உடனே அதை காணவேண்டும் என்ற பேராவல் கொண்டு அந்த சிற்பியின் இருப்பிடத்திற்கு சென்றார். முருகனே நேரில் நிர்ப்பது போன்று அழகு சிலையைக் கண்டார். முருகனுக்கு கோவில் கட்டும் ஆவல் அவருள் தோன்றியது.

இந்த முருகன் சிலைதான் எட்டுக்குடி சவுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ளது.

ஒருசமயம்,சிற்பி முருகனுக்கான மயில் சிலையை வடிக்கும் போது மயில் பறக்க முயன்றதாம்.

இதை கண்ட சிற்பி எங்கே முருகன் மயிலுடன் பறந்து விடுவாரோ என எண்ணி, மயிலின் கால்களை சேர்த்து கட்டிய நிலையில் சிலை வடித்தாராம். மயிலின் கால் நகத்தை பெயர்த்தும் விட்டாராம்.

ஐந்தரை அடி உயரத்தில் இருக்கும் இந்த முருகன், தன் பக்தர்களின் எண்ணங்களுக்கேற்ப காட்சி தருகிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.

பரிகாரம் :

இந்த எட்டுக்குடி முருகப் பெருமானை தரிசித்து அவருக்கு வாசனை மலர்களை தருபவர் வாழ்வில் வறுமை நீங்கும்.

சந்தனம் தந்தால் உடல் உபாதைகள் நீங்கும்.

விபூதி காணிக்கை விரோதிகளால் வரும் துன்பம் நீங்கும்.

முருகனுக்கு வஸ்திரம் வழங்கினால், குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.

முருகனுக்கு அபிஷேகம் செய்தால் துன்பம் இல்லா வாழ்வு அமையும்

  • 46
·
Added article

பிரிக்கப்படாத அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரைதான் இவர் பிறந்த ஊர்.

மானாமதுரையில் கோவில் திருவிழாக்களில் போடும் வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம் போன்ற தெருக்கூத்து நாடகங்களை பார்த்து ரசித்து தன் நடிப்பு திறனை வளர்த்துக்கொண்டார், அடுத்த நாள் அது போலவே நடித்துக்காட்டுவாராம் இவர். எஸ்.வி சகஸ்ரநாமம் நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றி பின்பு சினிமாவுக்கு வந்துள்ளார்.

தமிழில் மனோரமா- மற்றும் காந்திமதி எண்ணற்ற தமிழ்படங்களில் பாட்டி, அம்மா கதாபாத்திரம் செய்தவர்கள். இதுபோல கதாபாத்திரம் செய்ததில் இவர்கள் phd பட்டம் பெற்றவர்கள் என சொல்லலாம். அவ்வளவு தத்ரூபமாக நம்ம வீட்டு பாட்டி மாதிரியும், அம்மா மாதிரியும் தத்ரூபமாக நடிப்பார்கள்.

எந்த பெண் நடிகையின் குரலையும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் பெரும்பாலும் மேடையில் பேசி வெளிப்படுத்த மாட்டார்கள், ஆனால் காந்திமதியின் குரலை வெளிப்படுத்தி இருப்பார்கள். என அழகு ராசா என காந்திமதி சொல்வது அப்படியே அள்ளிக்கொள்வது போல் இருக்கும். சித்தாட கள்ளி விறகு ஒடிக்க போனாளாம் கத்தாழ முள்ளு கொத்தோட குத்துச்சாம் என இவர் பேசும் பாடிலாங்வேஜும் சரி, அந்த டயலாக்கை வெளிப்படுத்தும் விதமும் சூப்பரா இருக்கும்.

ஏவிஎம் நிறுவனம் சென்னைக்கு செல்வதற்கு முன் காரைக்குடியில் தான் ஏவிஎம் ஸ்டுடியோவை நடத்தியது. தேவகோட்டை ரஸ்தாவில் அந்த ஸ்டுடியோ இருந்தது. அங்கேதான் வேதாள உலகம் எனும் படம் எடுக்கப்பட்டது. சொந்த மாவட்டத்தில் இருந்த ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்ட வேதாள உலகத்தில் தான் காந்திமதி முதன் முதலில் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். இருப்பினும் ஜெய்சங்கர் அறிமுகமான இரவும் பகலும் படம் தான் இவர் நன்கு எல்லோருக்கும் தெரிந்த வகையில் அறிமுகமான படம்.

அடிமைப்பெண், தேடி வந்த மாப்பிள்ளை என அடுத்தடுத்து நடித்த காந்திமதி ஏபி நாகராஜன் இயக்கிய திருமலை தென்குமரி படத்தில் ஒரு நல்ல பிராமண பாட்டி வேடத்தில் நடித்திருப்பார்.

ப்ளாக் அண்ட் ஒயிட் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் இவரின் பெயர் தனித்து தெரியவில்லை. பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் இவர் நடித்த குருவம்மா பாத்திரம் தான் அனைவரிடத்திலும் இவரை தெரியவைத்தது. பக்கத்து வீட்டு பெண்களுடன் எதற்கு எடுத்தாலும் லக லக என சண்டை போடும் இயல்பான கிராமத்து பெண் பாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு படமாக புகழடைந்தார். அடுத்து மண்வாசனை படத்தின் கிழவி கேரக்டர். மாந்தோப்பு கிளியே படத்தில் கஞ்ச மகா பிரபுவாக வரும் சுருளிராஜனுடன் இவர் சேர்ந்து செய்திருந்த காமெடி நன்றாக இருந்தது நல்ல புகழை வாங்கி கொடுத்தது.

இப்படி இவரின் புகழ் டாப் கியரில் பறந்தது. எல்லாருக்கும் பிடித்த தெரிந்த கதாபாத்திரம் கரகாட்டக்காரன் பாத்திரம், நகையோட போன தம்பி சண்முகசுந்தரத்தை தவறா நினைச்சு பகைய வளர்த்துக்கொள்ளும் கதாபாத்திரம். அந்த சிரிக்கி மக சிரிக்கி வரட்டும் என இவர் டயலாக் பேசும் பாணி வேற லெவல்.

மல்லுவேட்டிமைனர், சந்தனக்காற்று,பெரிய வீட்டு பண்ணக்காரன், கும்பக்கரை தங்கையா, வால்டர் வெற்றிவேல், ஆணழகன் , முத்து , இது நம்ம பூமி, மாணிக்கம் என எண்ணற்ற படங்களில் அன்றைய முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருப்பார்.

வால்டர் வெற்றிவேல் படத்தில் நிராதராவன பெண்மணியாக இருந்து ஒரு குடும்பத்தை தாங்கி பிடிக்கும் வேராக இவர் நடித்திருக்கும் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு கட்டத்தில் சத்யராஜ் வீட்டு மாப்பிள்ளையை அரெஸ்ட் செய்ய வரும்போது சத்யராஜை தடுப்பார் காந்திமதி, அப்போ சத்யராஜ் நீ யாரு எங்க குடும்பத்து விசயத்துல தலையிட என்ற வகையில் சொல்ல மனம் கலங்கி போவார்.

அதுபோல் தேவர் மகன் படத்தில் க்ளைமாக்ஸ் தேரோட்ட காட்சிக்கு முன் கமலுடன் சிரித்து பேசி மகிழ்வார், யய்யா எப்படி இருக்க என கமலை ஆரத்தழுவி மகிழ்வார், சிறிது நேரத்தில் ஏற்பட்ட தேர் விபத்தில் கை கால் எல்லாம் தனியாக கிடக்கும் காந்திமதியின் உடலை பார்த்து கமல் கதறி அழுவார். இந்த காட்சியிலும் காந்திமதி சிறப்பாக நடித்திருப்பார்.

அதுபோல் மணிவண்ணன் இயக்கிய சின்ன தம்பி பெரிய தம்பி படத்தில் வீட்டை விட்டு ஓடிப்போன மகள் பல வருடம் கழித்து அழகான பேத்தியுடன் வந்தாலும், நடந்ததை மறந்து சேர்த்துக்கொள்ளாமல் வைராக்கியத்துடன் மகளை ஏற்றுக்கொள்ளாமல் விரட்டியடிப்பது, பின்பு அவர்கள் விபத்தில் காலமானது தெரிந்து தனது மகள் பிள்ளை பேத்தி நதியா மீது பாசத்தை கொட்டுவது என கலக்கி இருந்தார். மகன்கள் இருவர் மீதும் பாசத்தை கொட்டுவது, அதிலும் சத்யராஜ் தவறான வழிகளில் செல்லும்போது அவர் மீது வரும் வெறுப்பு போன்றவைகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

சொல்லும் விசயத்தை கேட்ச் செய்து அதை விட பிரமாதமாகவே நடித்து தருபவர் காந்திமதி அவர்கள். தனது 71வது வயதில் 2011ல் காலமானார் காந்திமதி.

  • 49
  • 136
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

மிதுனம்: இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அக்கம்பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக்கூடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிட்டும். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் புது பொறுப்பு, பதவி தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

கன்னி: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த தொகை வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம்: பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வியாபார ரீதியாக பயணம் செல்வீர்கள். உத்தியோகம் சிறக்கும்.

விருச்சிகம்: பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும்.

தனுசு: குடும்பத்தினருடன் வாக்குவாதம் வேண்டாம். உடல்சோர்வு, அலைச்சல் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை அலைந்து திரிந்து வசூலிக்க வேண்டி வரும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்தி தேடி வரும். புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் தடைபட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

கும்பம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படவும். வியாபாரத்தில் வர வேண்டிய பணத்தை போராடி வசூலிக்க வேண்டி வரும். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளவும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மீனம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். மாணவர்களின் கனவு நனவாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள்.

  • 145
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 27.2.2026

இன்று அதிகாலை 12.54 வரை தசமி. பின்னர் இரவு 10.50 வரை ஏகாதசி. பின்பு துவாதசி.

இன்று காலை 11.05 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று இரவு 07.59 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.

இன்று அதிகாலை 12.54 வரை கரசை. பின்னர் காலை 11.22 வரை வணிசை. பின்பு இரவு 10.50 வரை பத்தரை. பிறகு பவம்.

இன்று காலை 06.28 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=437&dpx=2&t=1772170795

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 12.30.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 146

Good Morning...

  • 153
  • 241
  • 240
  • 240
  • 240
  • 241
  • 240
  • 240

இது எப்படி இருக்கு?

  • 240
  • 240

இரு விசயங்கள்

உன்னை அதிகம் முதிர்ச்சி

கொண்டவனாக மாற்றும்.

அவை:

நீ வாசித்த புத்தகங்கள்.

நீ சந்தித்த மனிதர்கள்.

  • 240
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிம்மதி கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். போட்டிகளை தகர்த்தெறிந்து வியாபாரத்தில் வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

மிதுனம்: குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் விவாதங்கள் வேண்டாம். வீடு, வாகனத்தை மாற்றும் முயற்சியில் இறங்குவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபார போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

கடகம்: குடும்பத்தினரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வர். பூர்வீக சொத்து விஷயத்தில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிட்டும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

சிம்மம்: உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனப் பழுது நீங்கும். சிக்கனமாக இருக்க நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கன்னி: குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர். அலுவலகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடுமையாக உழைப்பீர்.

துலாம்: எதிர்பாராத பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு அனைவரையும் கவருவீர்.

விருச்சிகம்: தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை வரலாம். குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையிடுவதை தவிர்க்கவும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரம் லாபம் தரும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். வியாபாரத்தில் போட்டி குறையும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

மகரம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு வேலைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கும்பம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி திரும்பும். சகோதரவழியில் இருந்த பகை நீங்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்: வங்கியில் கேட்ட லோன் கிட்டும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப்போவீர். சொந்த ஊர் பயணங்கள் உற்சாகம் தரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிம்மதி கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். போட்டிகளை தகர்த்தெறிந்து வியாபாரத்தில் வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

மிதுனம்: குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் விவாதங்கள் வேண்டாம். வீடு, வாகனத்தை மாற்றும் முயற்சியில் இறங்குவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபார போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

கடகம்: குடும்பத்தினரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வர். பூர்வீக சொத்து விஷயத்தில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிட்டும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

சிம்மம்: உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனப் பழுது நீங்கும். சிக்கனமாக இருக்க நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கன்னி: குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர். அலுவலகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடுமையாக உழைப்பீர்.

துலாம்: எதிர்பாராத பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு அனைவரையும் கவருவீர்.

விருச்சிகம்: தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை வரலாம். குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையிடுவதை தவிர்க்கவும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரம் லாபம் தரும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். வியாபாரத்தில் போட்டி குறையும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

மகரம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு வேலைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கும்பம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி திரும்பும். சகோதரவழியில் இருந்த பகை நீங்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.

மீனம்: வங்கியில் கேட்ட லோன் கிட்டும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப்போவீர். சொந்த ஊர் பயணங்கள் உற்சாகம் தரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

  • 415
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை 26.2.2026

இன்று அதிகாலை 03.06 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று பிற்பகல் 12.34 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.

இன்று அதிகாலை 01.53 வரை விஸ்கம்பம். பின்னர் இரவு 10.52 வரை ப்ரீதி. பிறகு ஆயுஷ்மான்.

இன்று அதிகாலை 03.06 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 02.00 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று காலை 06.28 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 428