Ads

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் உறுதியப் பிரமாணத்தோடு கடமைகள் ஆரம்பமானது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 403
 • More
Info
Title:
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் உறுதியப் பிரமாணத்தோடு கடமைகள் ஆரம்பமானது.
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

Duration:
00:54
Category:
Created:
Updated:
 ·   · 40 videos
 • R

  3 members
 •  · 4 friends
Comments (0)
  கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் உறுதியப் பிரமாணத்தோடு கடமைகள் ஆரம்பமானது.
  Empty
  typing a message...
  Connecting
  Connection failed
  Ads
  Latest Videos
  Advertisement
  Ads
  Featured Videos (Gallery View)
  Ads
  Added article 
  கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இத்னானி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற செப்டம்பர் 15-ம் தேதி 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான காலத்துக்கும் நீ வேணும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாடலான மறக்குமா நெஞ்சம் பாடல் வரும் 14-ஆம் தேதி மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மறக்குமா நெஞ்சம் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது
  • 28
  Added article 
  தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்துகொண்டிருந்த வடிவேலு, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது சுராஜ் இயக்கி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும், பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடித்து வருகிறார். வடிவேலு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில்,  அவர், தனது ரீ- என்ட்ரியால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு அவர் கூறும்போது, "நான் வைகை புயல் பேசிகிறேன். வைகை இவ்வளவு நாட்களாக வறண்டு கொண்டிருந்தது. இப்போது வைகை திறந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறார்கள். நன்றி".  என்று கூறினார். 
  • 28
  Added a news 
  எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களும் வழமை போல இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்துச் சிரமங்கள் இருப்பின் போக்குவரத்துத் திட்டத்தைத் தயாரிக்குமாறு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.எதிர்வரும் மூன்று மாதங்களில் பாடசாலை நேரத்தை பாடங்களை கற்பிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் எனவும் பாடசாலை நேரத்திற்கு பின்னர் பாடநெறி மற்றும் பாடநெறிக்கு புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாடசாலைகளில் நடைபெறும் விழாக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.
  • 28
  Added a news 
  இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, நாட்டில் மேலும் 162 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.அதன்படி நாட்டில் கோவிட்  தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 667,735 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 29
  Added a news 
  நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிக உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் இன்று (13-ந்தேதி ) முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். சமூக வலைதளங்கள் மூலமும் இதற்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து தபால் நிலையங்கள் மூலமும் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த கொடிகளை வாங்கினார்கள். இதனால் தேசிய கொடி விற்பனை மும்முரமாக நடந்தது. இன்றும் ஏராளமான பொதுமக்கள் கொடிகளை வாங்கி சென்று தங்கள் வீடுகளில் ஏற்றினார்கள் . பொதுமக்கள் ஆர்வம் காரணமாக இதுவரை மொத்தம் இந்தியா முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை ஆகி உள்ளதாக கலாச்சார துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
  • 31
  Added a news 
  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 1 மாதத்துக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைக்கு பின் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார். இந்த நிலையில் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
  • 32
  Added a news 
  உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இருப்பினும் தொற்று எண்ணிக்கை குறைவாக பதிவாகி வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 2,144 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,440 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,34,159 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • 32
  Added a news 
  காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் என்ற இடத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் முகாம் அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்., அப்போது அப்பகுதி வழியாக இருவர் எல்லையை தாண்டி ஊடுருவினர். அவர்களை நிற்க சொல்லி ராணுவத்தினர் தடுத்தபோது அவர்கள் துப்பாக்கியால் ராணுவத்தினரை நோக்கி சுடத் தொடங்கியுள்ளனர். இதனால் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர்.. இந்த துப்பாக்கிச்சூடு சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், இரு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் தகவல்  வெளியானது.இந்நிலையில் தீவிரவாதிகளை எதிர்த்து போராடி வீரமரணம் அடைந்த 4  ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த லெக்‌ஷமணனும் (22)ஒருவர். அவர்களது உடல் காஷ்மீரில் ராணுவ முகாமில் வைக்கப்பட்டு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின்,  லட்சுமணனின் உடல் இன்று விமானம் மூலம் மதுரை புதுப்பட்டிக்குக் கொண்டு வரபட்டது.ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு அமைச்சர் பிடியார். பழனிவேல், மாவட்ட ஆட்சியயர் அனீஸ்சேகர் உள்ளீட்ட பலரும்  அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து லட்சுமணன் உடல் ஊர்வலகாக கொண்டு செல்லப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது,குடும்பத்தினர், உறவினர்கள், அஞ்சலி செலுத்திய பின் 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்திய பின் அவரது உடல்  நல்லடக்கம் செய்யப்பட்டது.
  • 33
  Added a post 
  தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு  க்யூபா.தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு க்யூபா.காரணம்... ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி.நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை.12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).க்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி. 2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி  கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.மருத்துவத்தில் க்யூபா டைத்த சாதனை மகத்தானது. தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா. 'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு க்யூபா' என பிபிசி 2006-ல் அறிவித்தது.மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு க்யூபாவில்தான்.உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் க்யூபாவில்தான்.2015ல் 95 சதவீத க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள். இன்று வீடில்லாத க்யூபியன்  யாருமில்லை. யாருக்கும் சொத்து வரி கிடையாது. வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.காரணம்...ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை
  • 56
  Added article 
  இயக்குனர் ஸ்ரீதரை, யாராலும் மறக்க முடியாது!! திடீரென்று ஒரு நாள் சுருட்டிப் போட்டது... பக்கவாதம் என்ற பயங்கரமான நோய்..! அன்றோடு இயக்குனர் ஸ்ரீதர் படுத்த படுக்கையாக வீட்டோடு முடங்கிப் போனார்.கல்யாணப் பரிசுதேன் நிலவுநெஞ்சில் ஓர் ஆலயம்நெஞ்சம் மறப்பதில்லைகாதலிக்க நேரமில்லைசுமை தாங்கிவெண்ணிற ஆடைசிவந்த மண்உரிமைக்குரல்இளமை ஊஞ்சலாடுகிறது.எத்தனை சூப்பர் ஹிட் திரைப்படங்கள்...! ஸ்ரீதர் என்ற பெயருக்காகவே திரைப்படங்கள் ஓடியது ஒரு காலம்... ஆனால் அந்த ஸ்ரீதரின் கடைசிக் காலம் .. அந்த அஸ்தமன காலத்தில் அவருக்கு அருகிலேயே இருந்து கண்ணுக்கு கண்ணாக கவனித்துக் கொண்டவர் தேவசேனா ..யார் இந்த தேவசேனா..?இவர் மறைந்த இயக்குனர் ஸ்ரீதரின் மனைவி..! மருத்துவமனையில் சீரியசான நிலையில் , சிகிச்சையில் இருக்கும்போது, சிலவேளைகளில் திடீரென யாரையாவது பார்க்க வேண்டும் என்று விரும்புவாராம் ஸ்ரீதர்..! உடனே தேவசேனா , ஸ்ரீதர் பார்க்க விரும்புகிறவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “சார் பார்க்கணும்னு ஆசைப்படறார்... கொஞ்சம் வர முடியுமா?” என்று பணிவோடு, பரிதாபமாக கேட்பாராம்...!இவர் கேட்கும் இரக்க தொனியில் எவராக இருந்தாலும் அடுத்த நிமிடமே ஸ்ரீதரைப் பார்க்க ஓடோடி வந்து விடுவார்களாம் !கணவரின் அன்புக்குரிய அந்த நண்பர்களை வரவழைத்து , அவர்களை கணவரோடு பேச வைத்து, கணவரின் கடைசி நிமிட எதிர்பார்ப்புகளையும் சிறப்பாகவே பூர்த்தி செய்த புண்ணியவதி, ஸ்ரீதரின் மனைவி தேவசேனா...!.சில வேளைகளில் ஸ்ரீதர் நினைவிழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறார் என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அவரைப் பார்க்க வரும் முக்கியப் பிரமுகர்களிடம் , சிறிது நேரமாவது பழைய கதைகளை ஸ்ரீதரிடம் பேசச் சொல்வார்களாம்..!.ஆனால் , ஸ்ரீதர் பேசுவதே என்னவென்று. வந்தவர்களுக்கு புரியாத நிலையிலும் கூட, தேவசேனா கணவர் சொல்வதைப் புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வாராம்...!.இப்படியாக ... பதினான்கு ஆண்டுகள் படுக்கையிலேயே ஸ்ரீதர் இருந்தபோதும், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாத தேவசேனா , கட்டுக்கு அடங்காத கண்ணீர் வழிய நின்றது ஒரே ஒரு நாள்தான்...!அது ஸ்ரீதர் இறந்த 2008 , அக்டோபர் 20 இல் மட்டும்தான்...!.ஸ்ரீதர் செய்த பூர்வஜென்ம புண்ணியமெல்லாம் ஒரு பெண்ணாக வடிவெடுத்து , தேவசேனா என்ற பெயரில் அவருக்கு மனைவியாக வந்து வாய்த்தது." மனைவி என்பவள்தெய்வமாகலாம்..".ஆம் .. ஸ்ரீதரின் "சுமைதாங்கி" பாடலை கொஞ்சம் மாற்றி பாடிக் கொள்கிறேனே..!."மனைவி என்பவள் தெய்வமாகலாம்வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்மனைவி என்பவள் தெய்வமாகலாம்!
  • 57
  Added a post 
  அது ஒரு சிறிய உணவு விடுதி.கரூர்  ஜவகர் பஜாரிலுள்ள ஒரு முட்டுசந்தில்..ஹோட்டல் கற்பகம் இருக்கிறது. அந்த ஹோட்டல் பத்து பேர் மட்டும் அமர்ந்து சாப்பிடலாம்.கற்பகம் ஹோட்டலின் ஓனர் கருப்பசாமி தானே கல்லாவை கவனிப்பார். உணவு பரிமாறுவதில்இருந்து அனைத்து வேலைகளும் அவரே. சமையல் வேலைக்கு மட்டும் மாஸ்டர் வைத்து கொள்வார்.கற்பகம் உணவு விடுதி..முட்டு சந்தில்இருந்தாலும், நாள் முழுவதும் சற்று,சுறு, சுறுப்புடன் இயங்கி கொண்டு இருக்கும்.உணவின் சுவை கூடுதலாக மெச்சும்படி இருப்பதால், மற்ற உணவு விடுதிகளை காட்டிலும், விலைகுறைவாகவும், தரமாகவும், சற்று தாராள அளவு உடையது ஆகவும், இங்கு உணவு பொருட்கள்இருக்கும்.கற்பக உணவு விடுதி ஓனரின் கல்லாடேபிளில் ஒரு சிலேடு தொங்கி கொண்டு இருக்கும். அந்த சிலேட்டில்காலை நேரம் என்றால்..நான்கு இட்லிஒரு டீ  ..என்றும் எழுதப்பட்டு இருக்கும்.அதை பார்த்து யாரோ ஒருவர் உணவுவிடுதிக்கு சென்று இட்லி சாப்பிட்டு,டீ குடித்து விட்டு.. சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல்" சிலேட்டை"காட்டி சென்று விடுவார்.பின், சிறிது நேரம் கழித்து, கருப்பசாமி மீண்டும்..அந்த சிலேட்டில் ஏதோ எழுதி தொங்க விடுவார்.இப்பொழுது, யாரோ,ஒருவர் முன்னம் குறிப்பிட்டதுப் போல் சாப்பிட்டு விட்டு,"சிலேட்டை" காட்டி காசு கொடுக்காமல் சென்று விடுவார்.யாரும் அவரை ஏன்? என்று கேட்கமாட்டார்கள்.இப்படியாக ஒரு நாளைக்கு பதினைந்து, இருபது நபர் வரை சாப்பிட்டு சென்று விடுவார்கள். இதுவாடிக்கையாக கற்பக உணவு விடுதியில் நடக்கும் செயல்.புதிதாக கற்பக உணவு விடுதியில்,சாப்பிட வந்த ஒருவர், தான் சாப்பிட்டதற்கு கல்லாவில் பணம் கொடுக்க சற்று காத்திருந்தார்.அப்பொழுது.. கருப்பசாமி, பரிமாறி விட்டு கல்லாவுக்கு வந்தார்.காத்திருந்தவரிடம் பணத்தை பெறும்முன், அவர் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டவர்.. பணம் கொடுக்காமல்போகிறார்" என்றார் சற்று பதட்டத்துடன்....கருப்பசாமி தன் முறுக்கு மீசையைவருடிக் கொண்டு.." அய்யா.. உங்களை போல் சாப்பிட வருகிறவர்கள் தான் சாப்பிட்டதற்குபணம் கொடுத்து விட்டு, இதுப் போன்று உணவுக்கு வழி இல்லாதவர்களுக்கும் சேர்த்து பணம்கொடுப்பார்கள்.அப்படி, அவர்கள்கொடுக்கின்ற பணத்திற்கு ஏற்ப, "சிலேட்டில் " உணவு வகைகளை எழுதி வைப்பேன். அதை பார்த்து விட்டு..சாப்பிட்டு விட்டு" சிலேட்டை"கை நீட்டி போவார்கள். இது, இங்குவாடிக்கையான நடை முறைதான்"என்றார்.மேலும் தொடர்ந்தார்..." அப்படி பணம் யாரும் கொடுக்கவில்லை என்றால், என் பங்குக்கு நானாக எழுதி போடுவேன்.யாரேனும், சாப்பிட்டு விட்டு போவார்கள்.நான் சின்ன வயதில்,ஒரு வேளை சாப்பாட்டுக்கு என்ன..பாடு பட்டிருப்பேன்" என்று தன் ஈரக்கண்களை அகல விரித்து அவரிடம்சொன்னார்.அப்படி, கருப்பசாமி சொன்னவுடன்...புதிதாக வந்த வாடிக்கையாளர்...அவசரமாக, தன் சட்டை பைக்குள்கை விட்டு.. இரு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து.. யாருக்குகேனும்உணவு  பகிருங்கள்" என்று சொல்லிநகர்ந்தார்.அந்த முட்டு சந்துக்குள் சர்வ இயல்பாக, சில பைத்தியங்களின்நடமாட்டம், அவ்வப்பொழுது இருந்துகொண்டே இருக்கும்.அவர்களுக்கு மட்டும், உணவு பொட்டலங்கள் கருப்பசாமியிடம் இருந்து கை மாறி விடும். அவர்களுக்கு பிச்சை எடுக்க தெரியாது.. கேட்டு வாங்க தெரியாது..பசி என்ற உணர்வும் தெரியாது.. ஆனால், கையில் கிடைத்ததை சாப்பிட வேண்டும் என்று மட்டும் தெரியும்.கருப்பசாமி இப்பொழுது  சிலேட்டில்..." உறவுகள் மேம்பட சற்று.. உணவிடுங்கள் " என்று எழுதிவிட்டு...மூவருக்கு மதியம் "சாப்பாடு தயார்"என்று எழுதி..புன்னகையுடன் கல்லாடேபிளில் தொங்க விட்டார்.
  • 58
  • 90