Ads

பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இளம் வீராங்கனை காவேரி பிரதீபன் கொடிய நோயில் மரணம்!

யாழ் தேசிய மட்ட வீராங்கனை காவேரி பிரதீபன் (அளவெட்டி அருணோதயவின் சாதனை மங்கை) மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மாரத்தான் ஒட்டம், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள், கோல் ஊன்றி பாய்தல், 100, 400 M தொடர் ஓட்டங்கள், Hockey, Netball, Volleyball, Elle இப்படி பல விளையாட்டுக்களில் தேசிய மட்டங்களிலும் மாகாண மாவட்ட மட்டங்களிலும் பல பதக்கங்களை வென்றெடுத்தவர்.

யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 29 வயதான திருமதி காவேரி பிரதீபன் மூன்று வருடங்களாக Aplastic Anemia என்ற இரத்த சோகை நோயினால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையிலை கடந்த 2017 ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக நோயினால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 2020 ஆண்டு மேலதிக வைத்திய சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்தார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை, பலனின்றி 15.11.2021 அன்றைய தினம் உயிரிலந்துள்ளார். இவரின் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரது சடலம் கிளிநொச்சியில் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 316
 • More
Info
Title:
பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இளம் வீராங்கனை காவேரி பிரதீபன் கொடிய நோயில் மரணம்!
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

Duration:
04:00
Category:
Created:
Updated:
 ·   · 35 videos
 • R

  3 members
 •  · 4 friends
Comments (0)
  பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இளம் வீராங்கனை காவேரி பிரதீபன் கொடிய நோயில் மரணம்!
  Empty
  typing a message...
  Connecting
  Connection failed
  Ads
  Latest Videos
  Advertisement
  Ads
  Featured Videos (Gallery View)
  Ads
  Added a post 
  திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை."ஏண்டா பிறந்தோம்" என்று அடிக்கடி புலம்புவாள். அந்தக் காலத்தில், காட்டுப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள். அப்படி ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, "ஐயா! நீங்க எல்லாரும் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?'' என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள்.அவளுடையஅப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள் சிரித்து விட்டனர். "என்ன பாட்டி இது கேள்வி? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தி இருக்கியே! மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா?'' என்று கோபித்துக் கொண்டனர்.உண்மையில், மலையில் கோயில் இருப்பதைக் கூட அறியாமல் இருந்தாள் அவள். ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, "அம்மா! மலை மேல் ஒரு சுவாமி இருக்கிறார். அவனைப் போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலை இருக்காது. அவனை "கோவிந்தா" எனச் சொல்லி கும்பிட வேண்டும். அப்படி செய்தால் நீ செய்த பாவங்களெல்லாம் தீர்ந்து விடும்,'' என்று அவளுக்குப் புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார்.இதைக் கேட்டாளோ இல்லையோ! சுண்டல் கூடையோடு திருமலைக்கு ஏறினாள். ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டாள். "அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே! அந்த பக்தர் சொன்னாரே! எனக்கும் இனி பிறவி வேண்டாமையா'' என்று மனம் உருகிச் சொன்னாள். தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினார்கள்.அவள் மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். அப்போது, ஒரு வயோதிகர் அங்கு வந்தார். "அம்மா! சுண்டல் கொடு'' என்று கேட்டார். அவளும் கொடுக்க, சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டினார்."ஐயா! சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க,'' என்றாள் பாட்டி."அம்மா! நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்குக் கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே!'' என்றார் கெஞ்சலாக."சரி, நாளை கொண்டு வாங்க,'' என விட்டுவிட்டாள் மூதாட்டி. தன் முன்னால் வந்து நின்றது உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதைப் பாமரப் பெண்ணான கங்கம்மா எப்படி அறிவாள்!மறுநாள், சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை. "இப்படி ஏமாற்றி விட்டாரே கிழவர்" என அவள் பொருமிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இறந்தும் போய்விட்டாள்.பாட்டிக்கு பணத்துக்கு பதிலாக, மேலான வைகுண்டத்தையே கொடுத்து விட்டார் பரந்தாமன். ஆனாலும், அவர் மானிடப்பிறப்பெடுத்து சீனிவாசனாக பூமிக்கு வந்தவர் இல்லையா!பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டு, கொடுக்கவில்லையே!இதனால் தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், இப்போதும் விழாக்காலங்களில் அவர் பவனியாக வரும் போது, பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்கிறார். இந்த கதையைப் படித்தவர்களெல்லாம், தீர்க்காயுளுடன் வாழ்ந்து, பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்.
  • 11
  Good Morning....
  • 37
  நோய் தீர்க்கும் பழங்கள்...
  • 42
  நடிகர் ரகுமானின்  பிறந்தநாள் நேற்றாகும். 
  • 42
  90  களில்  தூள்  கிளப்பிய  ரஜனி  படங்கள். 
  • 42
  "இந்த  அழகான தேசத்தில்  வாழ்க்கை  ஒரு...?
  • 42
  விசேட  அறிவித்தல்...மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
  • 43
  • 44
  துன்னாலையில் 10  பவுண்  நகை திருட்டு  போயுள்ளதாக  நெல்லியடி பொலிஸில் முறையிடப்  பட்டுள்ளது.துன்னாலை  வடக்கு  பகுதியிலேயே  நேற்றைய  தினம்  இச்சம்பவம்  நடைபெற்றுள்ளது.** பருத்தித்துறை  கொட்டடி  பகுதியில்  தீக்காயங்களுக்கு  உள்ளான  பெண்  ஒருவர்  பருத்தித்துறை  ஆதார வைத்திய சாலையில்  அனுமதிக்கப் பட்டுள்ளார். இச்சம்பவம்  தொடர்பில்  பருத்தித்துறை பொலிசார்  விசாரணை  செய்து வருகின்றனர். 
  • 44
  • 61
  பாதைக்கு  அரோகரா!
  • 75
  காலை வணக்கம். 
  • 75