Ads

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ஒக்சிசன் செறிவூட்டி இயந்திரம் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது.

0 0 0 0 0 0
 • 296
Info
Title:
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ஒக்சிசன் செறிவூட்டி இயந்திரம் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது.
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Duration:
01:15
Category:
Created:
Updated:
 ·   · 5 videos
 •  · 3 members
 •  · 3 friends
Comments (0)
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ஒக்சிசன் செறிவூட்டி இயந்திரம் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது.
Empty
typing a message...
Connecting
Connection failed
Ads
Latest Videos
Advertisement
Ads
Featured Videos (Gallery View)
Ads
Added article 
பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியானது ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு பிடித்தமான சுவாரசியத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் லிஸ்டில் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் புதிதாக பஞ்சதந்திர டாஸ்க் நடைபெறுகிறது.பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் 5 நாணயங்களை, யார் திருடி பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களோ அவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த டாஸ்க் துவங்கப்பட்ட நாளிலிருந்தே பிக்பாஸ் போட்டியாளர்களின் உண்மை முகம் வெளிப்பட்டு வருகிறது.பிரியங்கா, அபிஷேக், நிரூப் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்துகொண்டு மற்ற போட்டியாளர்களை கார்னர் செய்து வருகின்றனர். அக்சராவை ஓரம்கட்ட ராஜுவை வைத்து காய் நகர்த்திய பிரியங்காவிற்கு ஏமாற்றமே கிடைத்தது. ராஜு இந்தப் போட்டி துவங்கப்பட்ட நாளிலிருந்தே மற்ற போட்டியாளர்களை விட நியாயமாகவும் அமைதியுடனும் விளையாடிக் கொண்டிருக்கிறார்.எங்கு பேச வேண்டுமோ அங்கு தவறாமல் தன்னுடைய வாதத்தை எடுத்து வைப்பதும் அதேசமயம் ஒருத்தர் தன்னை ஏமாற்றுகிறார் என்று புரிந்ததும் அவர்களுடன் வாதிடாமல் அமைதியாகவே இருந்து, அவர்களுக்கு பதிலடி கொடுப்பதும் ராஜுவின் தனி ஸ்டைல். இதையெல்லாம் உன்னிப்பாக கவனிக்கும் பிக்பாஸ் ரசிகர்கள், ராஜு மட்டும்தான் பிக்பாஸ் விளையாட்டை சரியாகவும் நியாயமாகவும் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று சோசியல் மீடியாக்களில் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். ராஜுவுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.பிக்பாஸ் வீட்டில் இருந்து ராஜு இந்த வாரம் வெளியேறினாலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியிலும், சினிமாவிலும் நல்ல பெயர் கிடைக்கும் அளவிற்கு ராஜு தன்னுடைய நேர்மையான ஆட்டத்தை பிக்பாஸில் காட்டிக் கொண்டிருக்கிறார்.
 • 2
Added a post 
வன்னியை பொறுத்த வரையில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாக  காணப்படுகின்ற போதும் கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விவசாயிகள் வருடந்தோறும்  பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.தற்போது காலபோக பயிர் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அவற்றைக்கட்டாக்காலி கால் நடைகளிடமிருந்து பாதுகாத்தல் என்பது விவசாயிகளுக்கு பாரிய பிரச்சனையாகவுள்ளது.அதேபோன்று கால்நடைப்பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பயிர்ச்செய்கை காலங்களில் வீதிகளிலும் பிறஇடங்களிலும் வைத்துப் பராமரிப்பதில் பாரியநெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிய நிலை காணப்படுகின்றது.தற்போது நவீன முறையிலான உள்ளக முறைகளில் கால்நடைகளை வளர்ப்பதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்ற போதும் அதற்குள் பண்ணையாளர்கள் உடனடியாக செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது.அதாவது கால்நடை வளர்ப்பில் திறந்த வெளி வளர்ப்பு முறையையே பண்ணையாளர்கள் விரும்புகின்றனர்.கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போது இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன. ஆனால் அதற்கான மேச்சல் தரவைகள் என்பது இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனை அமைப்பதற்கு அதிகாரிகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றபோதும் அது கை கூடுவதாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக செய்கையின்போது சுமார் ஐம்பத்தி ஒன்பதாயிரம் ஏக்கர் வரையான நிலப்பரப்பில் காலநெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் சுமார் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் இவற்றைவிட ஆயிரத்திற்கும் மேற்பட்ட எருமை மாடுகளும் உள்ளன. இவ்வாறு பயிர் செய்கை காலங்களில் இவற்றை வைத்து பராமரிக்கக்கூடிய மேச்சல் தரவைகள் எவையும் கிளிநொச்சி மாவட்டத்தில்  இல்லை.  இவற்றுக்கான மேச்சல்தரவைகளை அமைப்பதிலும் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.கடந்த காலங்களில் கால்நடைகளின் மேச்சல் தரவைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் பல குடியிருப்பு நிலங்களாகவும் பயிர் செய்கை நிலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.இதனால் கால் நடை பண்ணையாளர்கள் பயிர்செய்கை காலங்கள் தவிர்ந்த ஏனைய காலங்களிலும் சிறுபோக செய்கை காலங்களிலும் பயிர்செய்கை மேற்கொள்ளப்படாத வயல் நிலங்களில் வைத்து தமது கால்நடைகளை பராமரித்து வருகின்றனர்.ஆனால் காலபோக செய்கை காலங்களில் அவ்வாறு பராமரிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.இவ்வாறான காலப்பகுதிகளில் கால்நடைகளை பெரும் சிரமங்களின் மத்தியில் இடத்திற்கு இடம் மாற்றிமாற்றி பராமரித்து வருகின்றனர். இதனால் பல சட்டரீதியான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.பண்ணையாளர்கள் மேச்சல் தரவைகள் இன்மையால் பயிர்செய்கை காலங்களில் குளங்களின் அலைகரைப்பகுதிகளில் வைத்து பராமரித்து வருகின்றபோது குளங்களின் நீர் மட்டம் அதிகரிக்கும் போது அவற்றை அங்கிருந்து வெளியேற்றி காடுகளிலும் ஏனைய இடங்களிலும் வைத்து பராமரித்து வருகின்றனர்.இவ்வாறு கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் திறந்தவெளி வளர்ப்பு முறைகளில் கால்நடைகளை வைத்து பராமரித்து வரும் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு மேச்சல்தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.கால்நடை வளர்ப்பு என்பது மாவட்டத்தின் உற்பத்தி மக்களின் போசாக்கு அதனை மேற்கொள்ளும் குடும்பங்களின் வாழ்வாதாரம் என பல்வேறு விடயங்களில் முக்கிய பங்கினை வகிப்பதால் இதனை மேம்படுத்த வேண்டிய தேவையே உள்ளது.இன்று நவீன முறைகளில் உள்ளக வளர்ப்பு முறைகள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளபோதும் அதற்குள் திடீரென செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் பண்ணையாளர்கள் உள்ளக வளர்ப்பு முறைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டங்கள் உரியமுறைகளில் முன்னெடுக்கப்படவேண்டும்.பாரம்பரிய முறையாகவும் பரம்பரை பரம்பரையாகவும் மேற்கொள்ளப்;பட்டு வரும் திறந்த வெளி வளர்ப்பு முறைகளையே மேற்படி பண்iயாளர்கள் பின்பற்றி வருகின்றனர். எனவே மேற்படி மேச்சல் தரவைகள் மிகமிக முக்கியமன ஒன்றாக காணப்படுகின்றது.எனவே மக்களின் வாழ்வாதாரம் போசாக்கு என்பவற்றைக் கருத்திற்கொண்டு கால்நடைகளுக்கான மேச்சல்தரவைகளை அமைப்பதற்குரிய காணிகளை விடுவித்து மேச்சல் தரவைகளை அமைத்துத்தருமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 • 62
Added a post 
மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அவர்கள் தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம் வன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.இதனால் இவ்வாறான கிராமங்களில் வாழ்ந்து வரும் ஏனைய வறிய மக்கள் வாழ்வில் அன்றாடம் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பிரதேசமாக காணப்படும் மாந்தைகிழக்கு பிரதேசத்தில் கடந்த 10 வருடங்களாக மிகவும் பழமை வாய்ந்த பல கிராமங்களில் இருந்து வசதி வாய்ப்புக்கள் நோக்கி மக்கள் குடி பெயர்து செல்லும் நிலை காணப்படுகின்றது.மாந்தை கிழக்கின் பழமைவாய்ந்த பனங்காமம் மூன்று முறிப்பு போன்ற கிராமங்களில் இவ்வாறான நிலை காணப்படுகின்றது.குறிப்பாக, இந்த பிரதேசங்களில் மாணவர்களுக்கான உரிய கல்வி வசதி இன்மை மருத்துவ வசதி, போக்குவரத்து வசதிகள் இன்மை என்பன பிரதான காரணிகளாக அமைந்துள்ளன.மாந்தைகிழக்கில் 1962ம் ஆண்டுகளுக்கு பிற்பகுதியில் பாண்டியன்குளம் கரும்புள்ளியான் விநாயகபுரம் பாலிநகர் கொல்லவிளான்குளம் சிவபுரம் போன்ற கிராஙம்கள் உருவாகுவற்கு முன்புள்ள வரலாற்று தொன்மை கொண்ட மேற்படி கிராமங்கள் எதிர்காலத்தில் இல்லாது போய் விடுமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.பனங்காமம் மிகவும் பழமையான வன்னியின் பழம் பெரும் கிராமமாகும். அதாவது கி.மு. ஏழாம் நூற்றாண்டு முதல் இலங்கையின் கரையோர மாகாணங்களில் பெரும் கற்கால பண்பாட்டு மக்கள் குடியேறி வாழ்ந்தனர் என்றும் அக்காலப்பகுதியில் கிராமங்கள் நகரங்கள் பண்டமாற்று நிலைகள் குறுநில அரசுகள் உருவாகின.அவ்வாறு உருவாகிய கிராமங்களில் ஒன்று தான் பனங்காமம் பற்று என்றும் 17ம் 18ம் நூற்றாண்டுகளில் ஒல்லாந்தர் அடங்காப்பற்று என்பதை வன்னி என்று குறிப்பிட்டனர் என்றும் இதில் பனங்காமம் கரிக்கட்டுமூலை கருநாவல் பற்று முள்ளியவளை மேல் பற்று, தென்னைமரவாடி, என்ற ஆறு பிரிவுகள் காணப்பட்டன என்று பனங்காமம் பகுதியில் அமைந்துள்ள பஞ்சிங்கேஸ்வரர் ஆலய வரலாற்று நூலின் வாயிலாக அறியமுடிகின்றது.இதேவேளை பாணன்கமம் என்ற பெயரே காலப்போக்கில் பனங்காமம் என்று மருவி வந்துள்ளதையும் அறியமுடிகின்றது.அதாவது, இராவனேஸ்வரனின் தம்பியின் பரம்பரையினர் இலங்கை இராசதானியில் ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவில் இருந்து வந்த பாணன் குலத்தைச்சேர்ந்த அந்தகன் ஒருவர் அரசன் முன்னிலையிலே யாழ் வாசித்து பரிசில் பெற்றான் என்றும் அவனுக்கு பரிசாக வழங்கப்பட்ட கமம் என்பதே மருவி காலப்போக்கில் பனங்காமம் என்று பெயர் பெற்றுள்ளதாகவும் வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.இவ்வாறு வரலாற்றுத்தொன்மை கொண்ட பனங்காமம் மற்றும் அதனை அண்டிய பழம் பெரும் விவசாயக்கிராமங்களான மூன்றுமுறிப்பு வீரப்பராயர் குளம், இளமருதன்குளம், கொம்புவைத்தகுளம், போன்ற கிராமங்களுக்கான பிரதான போக்குவரத்து பாதையில் எந்தவித போக்குவரத்து வசதிகளும் இல்லை மாறாக மாலை 4.00 மணியில்இருந்து மறுநாள் காலைவரையும் காட்டுயானைகளின் ஆக்கிரமிப்பு, கிராமங்களில் கல்வி வசதிகள் எதுவுமில்லை, மருத்துவ வசதிகள் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்யவும் விவசாயவிளை பொருட்களை சந்தைப்படுத்தவும் போக்குவரத்து வசதியில்லை சீரான வீதியின்மை என்ற போராட்டத்திற்கு மத்தியில் இருபது இருபத்தி ஐந்து கிலோமீற்றர் சென்று அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.இவ்வாறான நிலையில் மேற்படி பழம் பெரும் கிராமங்களில் மீள்குடியேறி வாழ்ந்த எண்பது வீதமான குடும்பங்கள் அன்மைக்காலமாக இங்கிருந்து இடம்பெயர்ந்து வவுனியா யாழப்பாணம் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்துள்ளன.இந்நிலையில் வருமானம் குறைந்த மற்றும் வறுமை நிலையில் வாழும் பல குடும்பங்கள் குறித்த கிராங்களில் வாழ்ந்து வருகின்றன. இங்கிருந்து பெருமளவான குடும்பங்கள் வசதி வாய்ப்புக்களை தேடிச்சென்றுள்ள நிலையில் மேற்படி குடும்பங்கள் அன்றாடத்தேவைகளுக்காகவும் பிள்ளைகளின் கல்விக்காகவும் மருத்துவத்தேவைகளுக்காகவும் அன்றாடம் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருகினறனர்.இதனை விட இரவு வேளைகளில் காட்டுயானைகளின் தொல்லை வாழ்வாதார பயிர்களை பாதுகாக்க முடியாத நிலை காட்டுயானை மற்றும் ஏனைய விலங்குகளால் தொல்லை உயிரச்சுறுத்தல்கள் என்று பல்வேறு துன்பங்களை அன்றாடம் எதிர்நோக்கி வருகின்னர்.இங்கு அபிவிருத்தி என்பதில் மின்சாரம் மாத்திரமே 98 வீதமான மக்களுக்கு கிடைத்திருக்கின்றது. ஏனைய தேவைகள் என்பது இது வரை நிறைவுற்றதாகவில்லை என்றே கூறமுடியும்.இவ்வாறான கிராமங்களில் அடிப்படைப் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்து தருமாறு மேற்படி கிராம மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் எப்போது நிறைவேற்றப்படும்.
 • 64
 • 68
#கீரிமலை நகுலேஸ்வர கோபுரம் மற்றும் தீர்த்த கேணி திருத்தவேலைகள்..சிவபூமி வணக்கஸ்தலம் #
+2
 • 66
காலை வணக்கம்
 • 81
Added a news 
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறி உள்னர். இது பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-குழந்தைகளுக்கான தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்குவது என்பது ஒழுங்குமுறை முடிவு ஆகும். ஆனால், பொது சுகாதார பதிலளிப்பை கருத்தில் கொண்டால், பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். பெரிய அளவில் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு குழந்தைகள் காரணமாக மாட்டார்கள். அதுமட்டுமல்ல, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்து விடாது.கொரோனாவுக்கு எதிராக குழந்தைகளுக்கு போடுவதற்கு அங்கீகாரம் பெறுகிற எந்தவொரு தடுப்பூசியும், சவப்பெட்டிக்கான கடைசி ஆணியாக அமைந்து விடாது. குழந்தைகள், கொரோனா தொற்றை பரப்பவில்லை. எனவே கொரோனா தடுப்பூசியை பெரியவர்களுக்குத்தான் போட வேண்டும். பிற கொரோனா கால கட்டுப்பாட்டு வழிகாட்டும் நெறிமுறைகளை பெரியவர்கள்தான் பின்பற்ற வேண்டும்.பெரியவர்களில் குறிப்பாக பாதிக்கப்படுகிற பிரிவினராக உள்ள முதியவர்கள், இணை நோய் உடையவர்கள் போன்றோருக்கு தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது என்பது மிகக்குறைந்த அளவில்தான் என்பதைத்தான் பல்வேறு ஆதாரங்கள் காட்டுகின்றன.பெரியவர்களைப் போல இல்லாமல், குழந்தைகள் கொரோனா வைரசின் மோசமான பாதிப்புகளை சந்திக்க மாட்டார்கள், இறக்கவும் மாட்டார்கள். குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது என்பது பயனற்றதாகத்தான் அமையும் என்று அவர் கூறினார்.
 • 80
Added a news 
இலங்கையிலுள்ள 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை இன்று (21) திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.மாணவர்களுக்கு இலவசக் கல்வியை தொடர்வதற்கான சூழலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் பெற்றோரின் பங்களிப்போடு மேற்கொள்ளப்படுகின்றன. பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.காய்ச்சல், தடிமன், சளி போன்ற அடையாளங்கள் காணப்படும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று கல்வி அமைச்சு, பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
 • 83
Added a news 
உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.வேர்ல்டோ மீட்டர் கணக்கின்படி, உலக அளவில் கரோனாவில் 24 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48.91 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 21.17 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உலக அளவில் மக்களுக்குச் செலுத்தப்படுவதன் காரணமாக, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் வாராந்திர ஆய்வு குறித்து நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், ´´கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலக அளவில் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் உலக அளவில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஓராண்டில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பு இதுவாகும். உலக நாடுகள் அளித்த கணக்கின்படி 50 ஆயிரம், ஆனால், உண்மையில் உயிரிழப்பு அதிகமாகக் கூட இருக்கலாம்.ஐரோப்பாவைத் தவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும், மண்டலங்களிலும் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம், பல நாடுகள் புதிதாக கொரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் கொரோனாவால்  உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது´´ எனத் தெரிவித்தார்.
 • 81
Added a news 
பரிசுத்த பாப்பரசரினால் அண்மையில் கண்டி மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை நேற்று (20) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார்.கண்டி மாவட்டத்தின் ஆயர் பதவிக்கு மேலதிகமாக சிலாபம் மறைமாவட்ட ஆயராகவும் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை பணியாற்றி வருகின்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகைக்கும் இடையே நட்பு ரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றது.
 • 84
Added a news 
இலங்கையில் 70 சதவீதமானவர்களுக்கு கொரோனா வைரஸ் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இருபது வயதைத் தாண்டிய சகலருக்கும் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.இதில் 87 சதவீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். இளைஞர் சமூகத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.
 • 84
Good Morning....
 • 83
++இனிய வியாழன் வணக்கம் ++
 • 86
Added a news 
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தீ தான் ட்ருக் இன்று (20) பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை மற்றும் வியட்நாம் இடையே இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தூதுவர் ஹோ தீ தான் ட்ருக் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.வியட்நாமிலிருந்து இலங்கைக்கு முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்த தூதுவர், 2019ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியது என சுட்டிக்காட்டினார்.முதலீடுகளுக்கு மேலதிகமாக இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான பௌத்த உறவை மேம்படுத்துவதற்கு தமது நாடு ஆர்வத்துடன் காணப்படுவதாகவும் தூதுவர் இதன்போது வலியுறுத்தினார்.இதற்கு உடன்பாடு தெரிவித்த கௌரவ பிரதமர், வரலாற்று சிறப்புமிக்க பௌத்த உரிமையை அடிப்படையாகக் கொண்டு இரு நாட்டு மக்களுக்கும் முக்கியமான வகையில் பரஸ்பர உறவை உறுதிபடுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.
 • 131
Added a news 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. இவர்கள் மகளுக்கு வாமிகா (Vamika) என பெயரிட்டு மகிழ்ந்தனர். விராட் கோலியும், அனுஷ்காவும் மகளின் முகத்தை வெளியுலகத்திற்கு காட்டாமல் வைத்துள்ளனர்.  இவர்கள் குடும்பசகிதமாக மகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 • 129
Added a news 
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 34). இவர் திருமணத்திற்காக 7 வருடமாக பெண் தேடி வந்துள்ளார். அவருக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை. இதனால் வயது ஏறியதே தவிர,பெண் அமையவில்லை.திருமணம் செய்ய புரோக்கர்களை நாட முடிவு செய்த அவர், கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூரில் உள்ள ஒரு புரோக்கரை பார்க்க சென்றார். அவரும் திருப்பூர் செட்டிபாளையத்தில் தனக்கு தெரிந்த பெண் புரோக்கர் ஒருவர் உள்ளார். அவருக்கு நிறைய மணமகள் தெரியும் அவரை அணுகுங்கள் என்றார்.ராஜேந்திரன் அவருடைய நண்பர் மற்றும் சிறுவலூர் புரோக்கர் ஆகிய 3 பேரும் திருப்பூர் பெண் புரோக்கர் அம்பிகா என்பவரது வீட்டிற்கு வந்தனர்.அங்கு அம்பிகாவின் வீட்டில் ரீசா எனும் இளம் பெண்ணும் இருந்துள்ளார். ரீசா தான் மணமகள் என்று பெண் புரோக்கர் அறிமுகம் செய்து வைத்தார்.அந்த பெண்ணை பார்த்ததும் ராஜேந்திரனுக்கு பிடித்து விட்டது. பெண் புரோக்கர்,திருமணம் செய்யக் கூடிய பெண்ணுக்கு தாய் தந்தை யாரும் இல்லை, பெண்ணுக்கு தாலி மற்றும் தோடு,துணி ஆகியவற்றை மாப்பிள்ளை வீட்டார் வாங்கி கொடுக்க வேண்டும். எனக்கு புரோக்கர் கமிஷனாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.பெண் கிடைக்காமல் இருந்தவருக்கு இளம்பெண் கிடைப்பதை நினைத்த பெருமைப்பட்ட ராஜேந்திரன். இவை அனைத்திற்கும் சரி என தலையாட்டினார்.பெண்ணுக்கு யாரும் இல்லாததால் இரண்டு நாட்களில் திருமணம் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 24-ந்தேதி மணமகனின் குலதெய்வ கோவிலில் புரட்டாசி மாதம் என்று கூட பார்க்காமல் திருமணம் தடபுடலாக நடந்துள்ளது. மணமகன் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.திருமணத்தின் போது பெண் வீட்டிலிருந்து பெரியம்மா தேவி, அவரது அக்கா தங்கம் ஆகியோருடன் பெண் புரோக்கர்கள் அம்பிகா, வள்ளியம்மாள் ஆகிய இருவர் வந்துள்ளனர். ஆனால் மாப்பிள்ளை வீட்டிலிருந்து உறவினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு உள்ளார்கள். திருமணத்தின் முதல்நாள் ராஜேந்திரனுக்கு திருமண வாழ்வு சந்தோஷமாக தொடங்கியுள்ளது.திருமணத்திற்கு அடுத்த நாள் ராஜேந்திரன் வீட்டில் இல்லாத நேரத்தில் அரைபவுன் தாலி, தோடு மற்றும் பட்டுப்புடவை சகிதம் வெளியே சென்ற ரீசா, அங்கு வந்த காரில் ஏறி சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவே இல்லை. மனைவியின் செல்போனுக்கு ராஜேந்திரன் தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது ரீசாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.சிறுவலூர் புரோக்கரை தொடர்பு கொண்டு தகவல் கூறிவிட்டு, புரோக்கர் அம்பிகாவை தொடர்பு கொண்டபோது அவர் சரியான பதிலை கூறவில்லை. அப்போதுதான் அந்த கும்பல் தன்னை ஏமாற்றி விட்டு, அரைபவுன் தாலி, அரைப் பவுன் தோடுடன் மோசடி செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. சிறுவலூர் புரோக்கர் மூலம் ரீசாவின் ஊரான அரியலூர் சென்று விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே ஜெய்ஸ்ரீதர் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும், 5 பெண்களும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதும் தெரிய வந்தது.
 • 130
Added article 
ஹாலிவுட், பாலிவுட் , கோலிவுட் என எங்கு சென்றாலும் தனுஷ் படங்கள்தான் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த அளவிற்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். பல இயக்குநருக்கு வாய்ப்பும் கொடுத்து வருகிறார்.ராட்சசன் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் ராம்குமார். இவர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. தனுஷிடம் படத்தின் கதையை பற்றி கூறியுள்ளார். ஆனால் தனுஷ் இப்படத்தின் கதை ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தில் பார்த்தது போலவே இருக்கிறது என வெளிப்படையாக இயக்குனரிடம் கூறியுள்ளார்.தனுஷ் தன்னுடன் பணியாற்றும் சினிமா பிரபலங்களிடம் இப்படி ஒரு கதை இருக்கிறது இந்த கதை எங்கேயாவது பார்த்த மாதிரி உங்களுக்கு தோன்றுகிறதா என ராம்குமார் கூறிய கதையை கூறியுள்ளார். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் இந்த  கதை எந்த படத்தின் சாயலில் இருக்கிறது என கண்டறிந்து தனுஷிடம் கூறியுள்ளனர்.தனுஷ் இயக்குனர் ராம்குமாரிடம் நீங்க சொன்ன கதை இந்த படத்தின் சாயலில் இருக்கிறது. அதனால் கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். மூன்று வருடமாக கதையை எழுதி வந்த ராம்குமாருக்கு தனுஷ் இந்த மாதிரி கூறியது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வேறொரு படத்தின் சாயலில் இருக்கும் கதையில் நடித்தால் தனுஷ்க்கு வரவேற்பு இருக்காது என்பதால்தான் இயக்குனரிடம் படத்தின் கதையை ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள் என கூறியதாக தனுஷ் நண்பர்கள் கூறியுள்ளனர்.  இயக்குனர் ராம்குமார் மூன்று வருடமாக எழுதிய கதையை மாற்றங்கள் செய்ய விருப்பம் இல்லாததால் இந்த கதைக்கு யார் சம்மதிக்கிறார்கள் என யோசித்து சிவகார்த்திகேயனிடம் படத்தின் கதையை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இப்போது வரை சிவகார்த்திகேயன் ராம்குமார் படத்தினை பற்றி எந்த ஒரு தகவலையும் கூறவில்லை.
 • 129
Added article 
ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர் சூர்யா. சிங்கம் 2 படத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிப்படம் என சொல்லிக்கொள்ளும் படி ஒருபடமும் அமையவில்லை என வருத்தத்தில் இருந்த சூர்யாவிற்கு சூரரை போற்று படம் பெரிய வெற்றி பெற்றுத்.வித்தியாசமான கதைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் உள்ள நடிகர் சூர்யா எட்டு வருடங்களாக சறுக்கல்களை சந்தித்து வந்தார். சூர்யாவிற்கு சூரரைப்போற்று மிக பெரிய திருப்பத்தை கொடுத்தது. தொடர்ந்து வரிசையாக படம் நடித்து வருகிறார் சூர்யா. ஜெய்பீம் படத்தில் நடித்துள்ள அவர், அடுத்ததாக எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெய்பீம் தீபாவளி அன்று ரிலீஸாக இருக்கிறது. அடுத்ததாக பாலா இயக்கத்தில் ஒருபடம் நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பாலா, சூர்யா இணையும் படத்திலும், வாடிவாசல் படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் இருவரும் சூரரைப்போற்று படத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
 • 131
Added article 
தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகராக இருப்பவர் கோட்டா சீனிவாசராவ். இவர் தமிழில் சாமி, திருப்பாச்சி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு இவர் ஒரு சில படங்களில் நடித்தார். சமீபத்தில் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு விதமான கேள்விகள் கேட்க அதற்கு சரியான பதில் அளித்து வந்தார்.தற்போதெல்லாம் காமெடி நிகழ்ச்சிகள் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி போல் இருப்பதாகவும், மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சிரமபடுவதாகவும் கூறினார். திரைப்படத்தில் இடம் பெற்ற கவர்ச்சியை விட தொலைக்காட்சியில் அதிகமான கவர்ச்சி இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.பிரபல தொகுப்பாளினி அனுசியா பரத்வாஜ் ஒரு திறமையான நடிகை எனவும் ஆனால் அவர் ஆடை அணியும் விதம் தனக்குப் பிடிக்கவில்லை என வெளிப்படையாக கூறியிருந்தார். இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் ஒரு மூத்த நடிகர் இந்த மாதிரி எல்லாம் கூறலாமா என கேள்வி கேட்டு வந்தனர்.கோட்டா சீனிவாசராவ் பேசியதைக் வீடியோவில் பார்த்த அனுசுயா பரத்வாஜ், மூத்த கலைஞர் கூறிய சில கருத்து தனக்கு வருத்தமளிப்பதாகவும், நான் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது எனக்கு தெரியும். தேவையில்லாமல் இதைப் பற்றி பலரும் பேசி வருவது வருத்தமாக இருப்பதாக கூறியுள்ளார்.திருமணமாகி ஒரு பெண் கலைத்துறையில் பணியாற்றுவது பெரிய விஷயம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் பெண் இன்னும் வேலை செய்து வருகிறார். ஆணாதிக்கம் நெறிமுறைகள் பேசுகிறீர்கள் எனக்கூறினார். அனுபவம் வாய்ந்தவர் இந்த மாதிரி கருத்து தெரிவித்திருப்பது வருத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். பெண்களின் ஆடையை குறித்து விமர்சிக்கும் நடிகர்கள் திரைப்படங்களில் நடிகர்கள் மது அருந்துவது, தவறாக பேசுவது மற்றும் கேவலமாக ஆடை அணிவதும் இதைப் பற்றியெல்லாம் யாரும் பேச மாட்டார்கள் என கூறியுள்ளார்.திருமணம் ஆகியும் குழந்தை பெற்ற நடிகர்கள் ஆடையில்லாமல் கூட படத்தில் நடித்து வருகிறார்கள் என கூறினார். அதாவது கோட்டா சீனிவாசராவ் படங்களில் ஆடை இல்லாமல் நடித்தது பற்றி மறைமுகமாக கூறியுள்ளார். ஆனால் ரசிகர்கள் பலரும் கோட்டா சீனிவாசராவ் சொன்னதுபோல இப்போதெல்லாம் படங்களைவிட சின்னத்திரையில் தான் கவர்ச்சி அதிகம் என்கின்றனர்.
 • 134
Added article 
பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் சண்டை, சச்சரவுகளுடன் நடந்து வருகிறது. நேற்றைய எபிசோட் ஒரே கலவரமாகவே இருந்தது. பிக்பாஸ் இந்த வார லக் ஜூரி பட்ஜெட்கான டாஸ்க்கை நேற்று கொடுத்தார்.நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம்  போன்ற ஐந்து நாணயங்கள் பெட்டியில் வைக்கப்படும். அதை  போட்டியாளர்கள் யாருக்கும் தெரியாமல் எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் நபர் அதை பிக்பாஸுக்கு அறிவிக்க வேண்டும்.அவர்கள் எடுப்பதை யாராவது பார்த்துவிட்டால் எடுத்த இடத்திலேயே வைத்து விட வேண்டும். பின்னர் அவர்கள் அங்கு உள்ள பாதாள சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதுவே டாஸ்கின் ரூல்ஸ் ஆகும்.ஐக்கி, அபிஷேக், மதுமிதா போன்றோர் நாணயங்களை எடுத்து பதுக்கி வைத்தனர். அப்போது பவானியும் ஒரு நாணயத்தை கைப்பற்றினார். அதை அவர் ஒரு இடத்தில் பதுக்கி வைக்கும் போது அபினய் பார்த்துவிட்டார்.இதனால் பதறிப்போன பவானி யாரிடமும் சொல்லி விடாதே என்று கூறினார். அதற்கு அபினய் பவானியை செருப்பால அடிப்பேன் என்று கூறிவிட்டு சென்றார். இதைக் கேட்டு அதிர்ந்த பவானி பேச்சின்றி அமர்ந்திருந்தார். அவருடன் மதுமிதாவும் இருந்தார்.என்னதான் வீட்டில் ஒருவருக்கு ஒருவர் சகஜமாக பேசிக் கொண்டாலும், இது சற்று அதிகப்படியாக உள்ளது. இந்த வாரம் கமல் இதை நிச்சயம் விசாரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
 • 135
 • 190
Added a news 
நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.9 இலட்சம் ஹெக்டேயருக்கு தேவையான திரவு உரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 3.1 மில்லியன் லீட்டர் விஷேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.இதன் அடிப்படையில் அதன் முதல் தொகுதியாக 1 இலட்சம் லீட்டர் விஷேட திரவ உரம் நேற்று (19) இரவு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
 • 191
Added article 
நடிகர் அஜித்குமார் இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவுக்கு சென்றுள்ளார். அவர் அங்கு இந்திய பாதுகாப்பு படையினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.வலிமை பட ஷூட்டிங் முடிந்த கையோடு, நடிகர் அஜித் தனது பைக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டார். அதன்பின், யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் அஜித் நேற்று இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாப் மாநிலம் வாகாவுக்கு பைக்கில் சென்றுள்ளார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படையினருடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தனது கையில் தேசியக் கொடியை ஏந்தியவாறு வாகா எல்லையில் நடிகர் அஜித் குமார் நின்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
 • 194
 • 192
Added a news 
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 77 லட்சத்து 32 ஆயிரத்து 579 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 425 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 49 லட்சத்து 28 ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
 • 193
Added a news 
இலங்கையில் நிலவி வரும் கொவிட் வைரஸ் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா விடுதிகளின், மின்சார கட்டணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை மேலும் குறுகிய காலத்திற்கு நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.இது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மின்சக்தி அமைச்சருடன் கலந்துரையாட இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.கொவிட் வைரஸ் தொற்று பரவல் காரணமாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்கும் இடங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கான சலுகை காலம் வழங்கப்பட்டிருந்தது. கால அவகாசம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது.வீழ்ச்சி அடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம், அதனால் இந்த சலுகையை மேலும் நீடித்து தருமாறு சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.இந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, சுற்றுலா விடுதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அந்த சலுகையை மேலும் குறுகிய காலத்திற்கு நீடிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 • 191
Added a news 
குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவை கொழும்பில் இருந்து ஆரம்பித்து வைக்கப்படும் வப் போயா தினமான 2021 ஒக்டோபர் 20 ஆம் திகதி அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.புத்தபெருமான் மஹாபரிநிர்வாண நிலையினை அடைந்த ஸ்தலமான குஷிநகர் மிகவும் தனித்துவமான ஸ்தானத்தைக் கொண்டுள்ளது.2020 செப்டெம்பர் 26 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடனான மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவையானது இலங்கை யாத்திரிகர்கள் குழுவுக்கானதாக அமைய வேண்டும் என அறிவித்திருந்தார்.இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தலைமையிலான இலங்கையைச் சேர்ந்த பேராளர்கள் குழு இந்த அங்குரார்ப்பண விமானசேவையில் பயணிக்கவுள்ளது. அத்துடன் நான்கு இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோருடன் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள முக்கிய விகாரைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட100 சிரேஷ்ட பௌத்த மதகுருமாரும் இந்த முதலாவது விமான சேவையில் பயணிக்கவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் இக்குழுவுடன் இணைந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 • 191
Good Morning....
 • 194