Ads
 ·   ·  33 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

ராகி லட்டு

முதலில் 250 கிராம் வெல்லத்தை நன்கு பொடியாக்கி, மிக்சியில் போட்டு, பொடியாக வரும்வரை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்

பின்பு, வாணிலியில் ராகி மாவை போட்டு, நன்கு அதை வதக்க வேண்டும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து மாவின் நிறம் சற்று மாறும்வரை சுமார் 15 நிமிடங்கள் வதக்கவும். பின்பு அதனை ஒரு தட்டில் ஆறவைக்க வேண்டும்

பின்பு, தேங்காய்த் துருவலையும் வாணலியில் சேர்த்து வதக்க வேண்டும். (நீண்ட நேரம் கெடாமல் இருப்பதற்கு வதக்கவும்)

4 ஒரு டீஸ்பூன் நெய்யில் கிஸ்மிஸ், முந்திரி சேர்த்து போட்டு எடுத்துக் கொள்ளவும். ராகி மாவு, கிஸ்மிஸ், முந்திரி, வதக்கிய தேங்காய்த்துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்

5 இதையடுத்து, 100 கிராம் நெய்யை மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும். பின்பு, இந்த நெய்யில் ராகி மாவு கலவையை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து லட்டு போல் உருண்டைப் பிடிக்கவும். (தேவைக்கேற்ப நெய் அதிகமாகவும் சேர்த்துக் கொள்ளலாம்)

***** இந்த ராகி லட்டு ஒருநாள் வரை கெடாமல் இருக்கும். மேலும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், ஒரு வாரம் கெடாமல் இருக்கும்

  • 1025
  • More
Ingredients

ராகி மாவு 250கிராம்

பனைவெல்லம் (அ) வெல்லம் (பொடியாக்கியது) 200 கிராம்

நெய் 100கிராம்

கிஸ்மிஸ்,முந்திரிப்பருப்பு 10

தேங்காய்த்துருவல் சிறிதளவு

உப்பு சிறிதளவு

Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads