- · 5 friends
-
I
மொச்சைக் கொட்டை சுண்டல்
மொச்சைக் கொட்டையை நீங்கள் சமைப்பதற்குப் எட்டு மணி நேரத்திற்கு முன்பே ஊறவைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மொச்சைக் கொட்டையின் தோலை நீக்கி வைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த மொச்சை கொட்டையில் கால் ஆழாக்கு நீர் விட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
நன்றாக வெந்த மாத்திரத்தில் எஞ்சிய தண்ணீரை வடிக்கவும்.
மறுபுறம் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய வைத்துக் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய் ஆகிய இவற்றைப் போட்டு வறுத்து, உடன் மொச்சை கொட்டையையும் போட்டுச் சிறிது நேரம் வதக்கி உப்பு, துருவிய தேங்காயையும் சேர்த்து இறக்கி வைக்கவும்.
இதோ இப்போது சுவையான மொச்சைக் கொட்டை சுண்டல் தயார். இதே வகையில் அனைத்து வகை கடலை, கொள்ளு மற்றும் பட்டாணிச் சுண்டல்களையும் தயார் செய்யலாம்.
1. மொச்சைக் கொட்டை
2. துருவிய தேங்காய்
3. கடுகு
4. உளுத்தம் பருப்பு
5. காய்ந்த மிளகாய்
6. உப்பு
7. பெருங்காயம்