Ads
 ·   ·  33 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

மசால் வடை

கடலை பருப்பை கழுவி 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.வெங்காயம், புதினா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

மிக்சியில், அரைக்கத் தேவையான பொருட்களை போட்டு நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும்

ஒரு பிடி பருப்பை தனியே வைத்துவிட்டு மீதமுள்ள பருப்பை, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினாவுடன், தனியே எடுத்து வைத்த பருப்பையும், அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையையும் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் பருப்பு கலவையை வடையாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.சுவையான, மொறுமொறுப்பான மசால் வடை தயார்

இதில் வெங்காயத்திற்கு பதில், நறுக்கிய வாழைப்பூ சேர்த்து வாழைப்பூ வடை செய்யலாம்.

  • 1085
  • More
Ingredients

கடலை பருப்பு - ஒரு ஆழாக்கு (200 கி)

வெங்காயம் - 2

புதினா - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - 3 அல்லது 4

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - பொரித்தெடுக்க

அரைக்க:

காய்ந்த மிளகாய் - 3

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 2 அ 3 பல்

சோம்பு - அரை தேக்கரண்டி

Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads