·   ·  39 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

தேங்காய்ப்பால் பொங்கல்

வெறும் வாணலியில் பாசிப்பருப்பினை லேசாக சிவக்கும் வண்ணம் வறுத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் - 5 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பாசிப் பருப்பினை முதலில் போடவும்பருப்பு முக்கால் பதம் வெந்தவுடன் அரிசியைக் நன்றாகக் கழுவி, களைந்துப் போடவேண்டும்

அரிசியும் பருப்பும் நன்கு வெந்து குழைந்தபின் தூள் செய்த வெல்லத்தினைப் போடவும்தீயை சற்று குறைத்து, வெல்லம் கரைந்து நன்கு சேரும் வரை கிளறி, பாதி நெய்யினை ஊற்றி மீண்டும் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்மீதி உள்ள நெய்யை ஒரு வாணலியில் ஊற்றி முந்திரியைப் போட்டு சிவப்பாக வறுத்து பொங்கலில் போடவும்

ஏலக்காயையும் பொடித்துப் போட்டுக் கொள்ளவும்பின் தேங்காய்ப்பால் விட்டு சிறிது நேரம் கிளறவும்

பொங்கல் ரெடி.....

  • 1051
  • More
Ingredients

பச்சரிசி - ஒரு கப்

பாசிப் பருப்பு - கால் கப்

நெய் - 2 மேசைக்கரண்டி

முந்திரிப்பருப்பு - 15

தூளாக்கிய வெல்லம் - ஒரு கப்

ஏலக்காய் - 5

தேங்காய்ப்பால் - 1 கப்

Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads