·   ·  39 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

கோலா உருண்டை பிரியாணி

கோலா உருண்டை செய்யக் கொடுத்துள்ளவற்றை (வெங்காயம், கொத்தமல்லி, உப்பு நீங்கலாக) அரை மணி நேரம் ஊறவைத்து, கொர கொரப்பாக அரைக்கவும்

இத்துடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, உருண்டை களைப் பொரித்து எடுத்து வைக்கவும்.பாசுமதி அரிசியை 15நிமிடம் ஊறவைக்கவும்.

குக்கரில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, நறுக்கிய தக்காளி,

அரைத்த பட்டை மசாலா பொடி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கஸூரிமேத்தி, உப்பு சேர்க்கவும். இதனுடன் ஊறவைத்த பாசுமதி அரிசி சேர்த்து மூன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும், ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும்.

ஆவி வெளியேறியதும் பொரித்த கோலா உருண்டைகளைச் சேர்த்துக் கலந்துவிடவும்,

சுவையான கோலா உருண்டை பிரியாணி தயார்.

  • 615
  • More
Ingredients

தேவையான பொருட்கள் :::

2 கப் பாசுமதி அரிசி

1 பெரிய வெங்காயம்

1 தக்காளி

1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

1 டீஸ்பூன் பட்டை, சோம்பு, லவங்கம், கசகசாவை வறுத்துப் பொடித்த சோம்பு, பச்சை மிளகாய்

3 டேபிள் ஸ்பூன் கஸூரி மேத்தி

3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

உப்பு தேவைக்கேற்ப கோலா உருண்டை செய்ய

1 கப் கடலைப்பருப்பு

2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு

3 காய்ந்த மிளகாய்

பெருங்காயத்தூள் சிட்டிகை

1 டீஸ்பூன் சோம்பு

உப்பு தேவைக்கேற்ப

1 பெரிய வெங்காயம் நறுக்கவும் கொத்தமல்லித் தழை சிறிதளவு எண்ணெய் பொரிப்பதற்கு

Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads