·   ·  39 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

நம்முடைய அகத்தை சீராக்கும் சீரக குழம்பு

நம்முடைய முன்னோர்கள் உடலுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விட்டால் உடனே சமையலறையில் இருக்கக்கூடிய பொருட்களை தான் கொடுப்பார்கள். அதனால்தான் அவர்களால் அவ்வளவு ஆரோக்கியமாக வாழ முடிந்தது.

ஆனால் இன்றைய காலத்தில ஒரு சிறிய உடல்நிலை பாதிப்பாக இருந்தாலும் உடனே ஆஸ்பத்திரிக்கு போய் அங்கு கொடுக்கக்கூடிய மருந்துகளையும் ஊசிகளையும் போட்டு நம்முடைய இயற்கையான உடல் அமைப்பையே நாம் மாற்றி விடுகிறோம்.

நம்முடைய வீட்டில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கக்கூடியது தான் சீரகம். சீரகம் என்றாலே நம்முடைய அகத்தை சீராக்கக் கூடியது என்று அர்த்தம். நம்முடைய உடலில் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்தும் சீராக அதாவது சரியாக செயலாற்ற வேண்டும் என்றால் அது சீரகத்தால் மட்டுமே முடியும்.

நம்முடைய சமையலில் நாம் சீரகத்தை அதிக அளவில் சேர்க்கிறோம். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது ரசம் வைத்து கொடுப்பதற்கு காரணமும் அதுதான். மேலும் அஜீரண கோளாறு நீக்கி ஆரோக்கியமான ஜீரண சக்தியை ஏற்படுத்தி ஜீரண உறுப்புகளை சீராக இயங்கச் செய்யும்.

சிறப்பு வாய்ந்த சீரகத்தை வைத்து சீரக குழம்பு வைக்கலாம். முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தனியா, குண்டு மிளகாய், காஷ்மீரி மிளகாய், மஞ்சள் தூள் இவை நான்கையும் போட்டு நன்றாக பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். 

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் நான்கு குண்டு மிளகாய் போட வேண்டும். மிளகாய் சிவந்த பிறகு கடுகு உளுந்து சேர்க்க வேண்டும். கடுகு வெடித்து உளுந்து சிவந்ததும் தோல் உரித்த பூண்டை வதக்க வேண்டும். பூண்டு சிவக்க ஆரம்பித்ததும் அதில் கருவேப்பிலையை சேர்த்து பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

குறைந்தது ஐந்து நிமிடமாவது அடுப்பில் வைத்து வதக்க வேண்டும். பிறகு மூன்று தக்காளியை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்க ஆரம்பித்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியில் இருந்து ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவு பொடியை போட்டு அரை லிட்டர் தண்ணீரை ஊற்றி அதன் பச்சை வாடை போகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பிறகு தேவையான அளவு உப்பையும் சேர்த்து புளி கரைசலையும் ஊற்றி ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத்தையும் போட்டு 15 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து புளியின் பச்சை வாடை நீங்கிதும் அதில் பெருங்காயத்தூளை சேர்க்க வேண்டும். பிறகு ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை அணைத்த பிறகு சீரகப் பொடியை போட வேண்டும்.

சீரகத்தை வெறும் சட்டியில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை போட்டு ஒருமுறை கலந்து விட்டால் போதும். சீரகப் பொடியை போட்ட பிறகு கொதிக்க வைக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.  

  • 719
  • More
Ingredients

சீரகம்

தனியா

குண்டு மிளகாய்

காஷ்மீரி மிளகாய்

மஞ்சள் தூள்

கடுகு 

உளுந்து

தக்காளி

உப்பு

புளி கரைசல்

வெல்லம்

Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads