- · 5 friends
-
I
நம்முடைய ஆரோக்கியம் அதிகரிக்க வேர்க்கடலை பூண்டு பொடி சாதம்
வேர்க்கடலை பூண்டு பொடி என்பது ஆந்திராவில் மிகவும் சிறப்பு மிகுந்தது. இதை ஒருமுறை தயார் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் நமக்கு இட்லி, தோசை போன்ற டிபன் ஐட்டத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சாப்பாட்டிற்கும் போட்டு சாப்பிடலாம். இதை குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் தயார் செய்து அனுப்பலாம். குழம்பு செய்ய நேரமில்லை என்னும் பட்சத்தில் இந்த பொடி நமக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கடலெண்ணையை ஊற்றி தோல் உரிக்காத பச்சை வேர்க்கடலையை போட்டு நன்றாக பொன்னிறமாக குறைந்த தீயில் வைத்து வறுத்துக் கொள்ள வேண்டும். இது பொன்னிறமாக வதங்கியதும் இதனுடன் துருவிய கொப்பரை தேங்காய், தோல் உரிக்காத பூண்டு, காய்ந்த மிளகாய் 8 இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பூண்டு நன்றாக சிவந்ததும் இதில் பொட்டுக்கடலை, சீரகம், கருவேப்பிலை இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இதனுடன் கொட்டை இல்லாத புளியையும் சேர்த்து வதக்கி அடுப்பில் இருந்து இறக்கும்பொழுது பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பையும் சேர்த்து இறக்கி விட வேண்டும். பிறகு இதை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பொடியை கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைத்துவிடலாம்.
வேர்க்கடலை பூண்டு சாதம் செய்ய கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நான்கு காய்ந்த மிளகாய், அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுந்து, தோல் உரித்த பூண்டு ஒரு கைப்பிடி அளவு போட்டு நன்றாக வதக்க வேண்டும். பூண்டு சிவந்ததும் இதில் கருவேப்பிலை ஒரு கொத்தை போட்டு கருவேப்பிலை பொரிந்ததும் நாம் தயார் செய்வது வைத்திருக்கும் பொடியிலிருந்து மூன்று டேபிள் ஸ்பூன் அளவு போட்டு அந்த எண்ணெயிலேயே நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதற்கேற்றார் போல் வடித்த சாதத்தை அதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான வேர்க்கடலை பூண்டு பொடி சாதம் தயாராகிவிட்டது. அதிக விலை கொடுத்து வாங்கக்கூடிய பாதாமை விட வேர்கடலையில் அதிக அளவு சத்துக்கள் இருக்கிறது என்றும் பூண்டில் கேன்சரை எதிர்க்கக்கூடிய பண்புகள் அதிகம் இருக்கிறது என்றும் மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது.
வேர்க்கடலை
பொட்டுக்கடலை
சீரகம்
கருவேப்பிலை
காய்ந்த மிளகாய் 8
கடுகு
புளி
உளுந்து
கொப்பரை தேங்காய்
நல்லெண்ணெய்
வடித்த சாதம்