·   ·  39 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

சூப்பரான வெங்காயக்குழம்பு

தஞ்சை மாவட்டத்தில் வைக்கிற வெங்காயக்குழம்புக்கு ஒரு தனி ருசியும் மணமும் உண்டு காய் போட்டும் வைக்கலாம் காயே போடாமலும் வைக்கலாம் ஏன்னா அந்த குழம்புக்கு கதாநாயகியே சின்ன வெங்காயம் தான். சின்ன வெங்காயத்தை முழுசா போடக்கூடாது வத்தக்குழம்புக்குத்தான் முழுசா போடனும். ஒவ்வொரு குழம்புக்கும் வெங்காயத்தை ஒவ்வொரு மாதிரி வெட்டனும் சமைக்கிறவங்களுக்கு அந்த ட்ரிக் நல்லாவே தெரியும். அதை கடைசியா சொல்றேன்

இந்த குழம்புக்கு சின்ன வெங்காயத்தை இரண்டா வெட்டி இரண்டு தக்காளி போதும். அதன்பிறகு தேங்காயை துருவி அதுல கொஞ்சம் சோம்பு வைச்சு அரைச்சு எடுத்துக்கனும். இப்ப ஒரு பாத்திரத்தை அடுப்பில் எண்ணெய் ஊற்றி கொஞ்சம் வெந்தயம் போட்டு பொன்னிறமா வெந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு ரொம்ப வதக்கக்கூடாது லேசா வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து நறுக்கிய தக்காளியும் போட்டு அதுல கொஞ்சம் மஞ்சள் தூள், குழம்பு மசாலா, போட்டு அது மேல கொஞ்சம் புளியை கரைச்சு ஊத்தி(ரொம்ப புளி தேவையில்லை) கொஞ்சம் உப்பு போட்டு நாலஞ்சு கொதி வந்ததும் அரைச்சு வைச்ச தேங்காயை போட்டு சிறிது நேரத்திற்கு பிறகு இறங்கினால் தெருவே மணக்கிற வெங்காய குழம்பு ரெடி ஆகிடும். காய் இருந்தால் காய் சேர்த்துக்கலாம் காய் இல்லன்னா கவலையே இல்லை காய் இல்லாமலே அருமையா இருக்கும் சுட சுட இருக்கிற சாதத்துல அந்த குழம்பை ஊத்தி சாப்பிட்டா அந்த மாதிரி இருக்கும். இந்த மாதிரி குழம்பை அதிகமா ஊத்தி சாப்பிடக்கூடாது லைட்டா ஊத்தி சாப்பிடனும் அப்பதான் சூப்பரா இருக்கும்.

  • 432
  • More
Ingredients

சின்ன வெங்காயம்

தக்காளி

தேங்காய்

சோம்பு (பெருஞ்சீரகம்)

மஞ்சள் தூள்

புளி

குழம்பு மசாலா.

உப்பு

Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads