·   ·  10 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

மாவு பிசையாம இட்லி பாத்திரத்தில் வேக வைக்காம சட்டுனு இடியாப்பம்

இட்லி எப்படி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியதோ அதே அளவு ஆரோக்கியத்தை தரக்கூடிய மற்றொரு உணவு என்றால் அது இந்த இடியாப்பம் தான். இட்லியை போல் இடியாப்பத்தை சுலபமாக செய்ய முடியாது. அதற்கு மாவு பிசைந்து பிழிந்து பக்குவமாக செய்ய வேண்டும்.

மிக மிக எளிமையாக இடியாப்பத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம். இடியாப்பம் செய்வதற்கு முதலில் இரண்டு கப் பச்சரிசி மாவை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் உப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். 

தேங்காய் எண்ணெய் ஊற்றும் போது இடியாப்பத்திற்கு ஒரு நல்ல மணத்தை கொடுக்கும் இடியாப்பமும் சாப்ட்டாக வரும். இப்போது அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் கலந்து வைத்திருக்கும் இடியாப்ப மாவை அதில் ஊற்றி அடுப்பை மீடியம் ஃபிளேமுக்கு மாற்றி விடுங்கள். 5 நிமிடம் கைவிடாமல் மாவை கிண்டி கொண்டே இருந்தால் அது சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்து விடும். 

இந்த மாவை கை விடாமல் கிண்ட வேண்டியது மிகவும் அவசியம். இல்லை என்றால் மாவு அடி பிடித்து விடும் அல்லது உருண்டை உருண்டையாக மாறி விடும். இது சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த மாவை தட்டு போட்டு அப்படியே மூடி வைத்து விடுங்கள். மாவு முழுவதுமாக ஆறிய பிறகு அதை எடுத்து இடியாப்ப அச்சியில் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். 

இந்த முறையில் மாவை நம் தயாரித்திருப்பதால் மாவு ரொம்பவே மிருதுவாக இருக்கும். எனவே இதை தனியாக பிசைந்து வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இப்போது அடுப்பில் ஒரு தவா அல்லது பேன் இரண்டில் ஏதாவது ஒன்றை வைத்து சூடானவுடன் அடுப்பை மீடியம் பிளேமுக்கு மாற்றிய பிறகு முறுக்கு அச்சியில் இருக்கும் மாவை இடியாப்பம் பிழிவது போல் தவாயிலேயே பிழிந்து விடுங்கள். 

அதன் பிறகு ஒரு தட்டு போட்டு மூடி இரண்டு நிமிடம் கழித்து மறுபடியும் திருப்பி போட்டு எடுத்து விடுங்கள். இது மிக மிக எளிமையான முறை. இடியாப்பத்தை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்காமல் இப்படி சட்டென்று எடுத்து விடலாம். இது புதிதாக செய்பவருக்கும் மிகவும் எளிமையாகவே இருக்கும். 

  • 215
  • More
Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads