·   ·  39 recipes
  •  ·  5 friends
  • I

    9 followers

தட்டைப்பயிறு குழம்பு

பயிறு வகைகளை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும். மற்ற பயிறு வகைகளை உணவில் பெரும்பாலும் சேர்ப்பதில்லை. இந்த தட்டைப் பயிரை பொறுத்த வரை அடிக்கடி எல்லோரும் குழம்பு சேர்த்து சமைப்பார்கள். அப்படி செய்யும் குழம்பை ரொம்பவே ருசியாக அதே நேரத்தில் சுலபமாக எப்படி செய்வது என பார்க்கலாம்.

குழம்பு செய்ய முதலில் ஒரு கப் தட்டை பயிரை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் தண்ணீர் வடித்து விட்டு அலசி குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நான்கு விசில் விட்டு எடுத்து விடுங்கள். 

இந்த குழம்பிற்கு ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு முருங்கைக்காய், ஒரு உருளைக்கிழங்கு, ரெண்டு கத்திரிக்காய் மீடியம் சைஸில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள்.

அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் 10 சின்ன வெங்காயம், ஒரு மீடியம் சைஸ் தக்காளி, ரெண்டு ஸ்பூன் தனியா, அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், நான்கு காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நான்கு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி விடுங்கள்.

வதக்கிய வெங்காயம், தக்காளி அனைத்தையும் தட்டில் கொட்டி ஆற வைத்த பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நல்ல நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொரிய விடுங்கள். 

ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். இப்போது நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்த பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் இந்த காய்கறிகளை வேக விடுங்கள். 

காய்கள் பாதி அளவு வெந்த பிறகு அரைத்து வைத்திருக்கும் மசாலா, புளி தண்ணீர் அனைத்தையும் சேர்த்து இப்போது இன்னும் கொஞ்சம் தண்ணீரும் இந்த குழம்பிற்கு தேவையான உப்பையும் சரி பார்த்து சேர்த்த பிறகு நன்றாக கலந்து 10 நிமிடம் கொதிக்க விட்டால் அருமையான தட்டைப்பயிறு குழம்பு ரெடி.

  • 314
  • More
Reviews (0)
Login or Join to comment.
Ads
Latest Recipes (Gallery View)
1-12
Ads